(Reading time: 17 - 33 minutes)

“இந்த கண்ணில் இனி ஆனந்த கண்ணீரை மட்டும் தான் பார்ப்பீர்கள் ஆத்விக்..இல்லையென்றால் உங்கள் மச்சானை சட்னியாக்கி இட்லிக்கு தொட்டு கொள்ளுவேன் என்று சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.”

“அடியேய் ஆனாலும் உன்னை வச்சு நல்லா பொழுது போகும் மச்சானுக்கு”

“அவரை விட அவர் அம்மா அப்பாவ நினைச்சா தான் லேசா பாவமா இருக்கு டா ஆத்வி..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அடிப்பாவி ஏன்டி??!”

“இல்ல இப்போவே முடிவு பண்ணிட்டேன்..அம்மாகிட்ட அடக்கி வாசிக்குறமாதிரி எல்லாம் அங்க இருக்க கூடாதுனு...ஆரம்பத்துலேயே நம்ம மொக்கையெல்லாம் தாங்குற மனதைரியத்தை வரவச்சுரணும்னு யோசிச்சுருக்கேன்.”

“உங்கம்மா உனக்கு ஸ்கெட்ச் போட்டா நீ மொத்த குடும்பத்துக்கும் போடுறியே டீ ஜீ..பாத்து பக்குவமா பண்ணி விடு..”,என்றவன் மேலும் சில நொடிகள் பேசிவிட்டு திருப்தியோடு கிளம்பிச் சென்றான்.

அவள் எதிர்பார்த்த படியே ஐப்பசி மாதத்தில் கல்யாண தேதி குறித்தனர்.இந்த மாதத்தில் ஒரு நாள் நிச்சயதார்த்தம் என்று முடிவு செய்தனர்.அதன்படி நிச்சய வேலைகள் ஆரம்பமானது.ஜீவிகாவிற்கு தன் வழக்கத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் சென்றது.

நிச்சயதார்த்த நாளில் காலையிலேயே சொந்தபந்தங்கள் நிரம்பி வழிய ஜீவிகாவிற்கு மூச்சு முட்டியது.ஆளாளுக்கு நாட்டாமை பேச்சு பேசிக் கொண்டு மஞ்சுளாவை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் நினைத்து தான் திருமணமே வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தாள்.இப்போது நடப்பதையெல்லாம் பார்த்து மிகவுமே இறுகிப் போயிருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

மாலை நேரம் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட நிச்சயதார்த்த சடங்குகள் ஆரம்பமானது. ஜெயந்த் வந்தது முதலே ஒருவித பதட்டத்திலேயே இருந்தான்.அதுவும் ஜீவிகாவைப் பார்த்த பின் இன்னும் அதிகமாகவே பதட்டம் குடிகொண்டது.

மாநிறத்திற்கும் சற்று அதிகமான நிறம்.ஐந்தரை அடி உயரம் ஒல்லியும் குண்டுமல்லாத பூசிய உடல்வாகு.திருத்தமான ஆர்பாட்டமில்லாத முக வடிவமைப்பு என அத்தனை நேர்த்தியாய் இருந்தாள்.

ஜெயந்தும் சாதாரணம் அல்ல தான்.இருந்தும் அவனின் கோதுமை நிறமும் சற்று பூசிய உடல்வாகும் அவனை தன்னைப் பற்றியே குறைவாய் யோசிக்க வைத்தது.அதைவிட முக்கியமாய் அவனின் படிப்பு இப்படி பல குழப்பங்கள் அவனை வாட்டியெடுக்க அனைத்திற்கும் மேலாக ஜீவிகாவின் இறுகிய முகம் அவனை மேலும் குழப்பியது.

விருப்பமற்ற திருமணம் என்றே மனதிற்குள் எண்ணிணான். ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறோமோ என்ற குற்றவுணர்வே அவனிடத்தில் தலை தூக்கியிருந்தது.இருந்தும் பெரியவர்களை மீறி அவனால் எதுவும் செய்ய இயலவில்லை.

இருந்த குழப்பங்களில் இருவருக்கும் தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற நினைவு கூட இல்லாமல் மோதிரம் மாற்றும் நேரத்தில் ஒருமுறை இருவரின் விழிகளுமே ஒருவரை ஒருவர் அழகாய் தீண்டிச் சென்றது. 

தொடரும்...

Episode # 01

Episode # 03

Go to Unnodu naanirukkum manithuligal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.