(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 03 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

 

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு

மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னைப் போல என்னை யாரும்

மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை

ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல

எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

 

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

ரு சில வாரங்கள் கடந்திருந்த நிலையில் அன்று ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே ஆத்விக் அவளை அழைத்திருந்தான்.

“டேய் எரும எதுக்கு காலையிலேயே கால் பண்ணிருக்க மஞ்சு கண்ல மாட்டேன் பஞ்சு பஞ்சா பறக்க விட்ரும்.”

“கால் பண்ணவனை பேச விடுறியா நீ கொஞ்சம் கிளம்பி ஹோட்டல் தாஜ்க்கு வரியா ப்ளீஸ் டீ அர்ஜெண்ட்”

“டேய் என்ன விளையாடுறியா?”

“ப்ளீஸ் ஜீ உன் ஹெல்ப் வேணும் எப்படியாவது வாயேன்.”

அவன் பேச்சின் தீவிரம் அவளுக்கு உறைக்க தாயிடம் வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி சமாளித்து தன் வண்டியை எடுத்துக் கிளம்பினாள்.ஹோட்டலை அடைந்த பின்பு தான் அவனிடம் எந்த விவரமும் கேட்கவில்லை என்பது புரிந்து தன்னைத் தானே மனதினுள் குட்டிக் கொண்டு ஆத்விக்கை அழைத்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சொல்லு ஜீ எங்க இருக்க?”

“வந்துட்டேன் இங்க வாசல்ல தான் இருக்கேன்..”

“ஓ சரி ரூம் நம்பர் 106 க்கு வந்துரு பர்ஸ்ட் ப்ளோர்.”

“உன்னை சாவடிக்க போறேன்..வந்து தொலையுறேன் இரு..”,என்றவளுக்கு அந்த பிரம்மாண்டங்கள் அந்நியமாக பட்டன.அதையும் கடந்து ஒருவித பதட்டத்தையும் கொடுத்தது.ரிசெப்ஷனிஸ்டிடம் கூறிவிட்டு அவன் கூறிய அறை வாசலுக்குச் சென்று கதவைத் தட்ட உள்ளிருந்து ஆத்விக் குரல் கொடுத்தான்.

“வா டி கதவு திறந்து தான் இருக்கு”

“ஏன்டா லூசு அறிவேயில்லையா எதுக்கு இங்க எல்லாம் வர சொல்ற”,என்றவாறே உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த புதியவனைக் கண்டு பேச்சை அப்படியே நிறுத்தினாள்.

ஆத்விக்கை தன் பார்வையால் எரிப்பதைப் போல பார்த்தவளின் அருகில் வந்தவன்,”தேங்க்ஸ் ஜீ..இவரு ரேஷ்வா..”

“ஏன்டா  என்ன இது புதுபழக்கம் யாரோ இருக்காங்கனு ஒண்ணும் சொல்லாம இப்படி வர சொல்லிருக்க அறிவிருக்கா?”

“சனியனே என்னை கொஞ்சம் பேச விடுடி..”,என அடிக்குரலில் கத்தினான்.என்னவோ பண்ணு என்பது போன்ற பாவனையோடு அவள் நின்றிருக்க ஆத்விக்கே தொடர்ந்தான்.

“இவரு ரேஷ்வா..அக்டர் ரேஷ்வா”,என்ற பின்பு தான் மெத்தையில் படுத்திருந்தவனின் முகத்தை நன்றாக கவனித்தாள்.பின் ஆத்விகை ஆச்சரிய பார்வை பார்த்தவளாய் நிற்க அவள் மனவோட்டம் புரிந்தவனாய்,

“எனக்கு இவர் ஒன்றரை வருஷமா ப்ரெண்ட் ஜீ.ஒருதடவை யூஎஸ் போனப்போ ப்லைட்ல தான் மீட் பண்ணோம்.அது இதுனு எதோ பேசி ப்ரெண்ட் ஆய்ட்டோம்..அதுக்கப்பறம் புல்லா போன் சோஷியல் நெட்வொர்க்ஸ் இதுல தான் பேசிப்போம்.

இவரு நேட்டிவ் ஹைதராபாத் இங்கேயும் அங்கேயுமா இருப்பார்.நேத்து தற்செயலா கால் பண்ணி சென்னைல இருக்கேன்னு சொன்னவர் இங்க இருக்குறதா சொன்னவுடனே எனக்கு ஏதோ சரியில்லனு பட்டுது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவரோட வீடு இங்க தான் போயஸ் கார்டன்ல இருக்கு அப்படியிருக்க ஏன் ஹோட்டல்ல இருக்காருனு யோசனையிலேயே கிளம்பி வந்து பார்த்தா..”

“என்னடா?”

“சூசைட் அட்டெம்ட் பண்ணிடாரு ஜீ..”

“என்னது???!!”

“ஆமா டீ என்ன பண்றதுனே புரில நல்ல வேளையா நா வந்தேன் எங்க பாமிலி டாக்டரை கூப்ட்டு பர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டேன்.நைட்ல இருந்து இங்க தான் இருக்கேன்.ரூம் சர்வீஸ் ஆட்களை கூட உள்ளே விடல.விஷயம் கொஞ்சம் வெளியே தெரிஞ்சாலும் அவ்ளோதான் மீடியா விஷயத்தை பெருசாக்கிருவாங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.