(Reading time: 15 - 30 minutes)

என் ப்ரெண்ட்ஸ் யாரையும்கூட அதனால தான் கூப்டல.எதையாவது உளறி வச்சானுங்கனா க்ரியரே ஸ்பாயில் ஆய்டும் அதான் உன்னை வர சொன்னேன்.”

“அச்சோ சாரி டா உன் நிலைமை தெரியாம ஏதேதோ பேசிட்டேன்.நீ ரிலாக்ஸ் ஆகு முதல்ல எதாவது சாப்டுறியா?”

“இல்ல அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நீ கொஞ்சநேரம் இங்க இருந்தனா செக் அவுட் ப்ரொசீஜர்ஸ் முடிச்சுட்டு அவரை அவங்க வீட்டுக்கு கூப்டு போய்டலாம்.தனியா விட்டுட்டு போகவே பயமா இருக்கு ஜீ மறுபடியும் எதாவது பண்ணிப்பாரோனு..”

“நா இருக்கேன் டா ஆத்வி நீ டென்ஷன் ஆகாம போய் வேலையை முடி நா பாத்துக்குறேன்.”,என்றவள் கட்டிலுக்கு எதிர்புறம் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் கடந்திருக்க ரேஷ்வா மெதுவாய் கண்விழித்தான்.தன் எதிரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன் சட்டென எழ முயற்சிக்க அவசரமாய் எழுந்து நின்றவள்,

“ஹே ரிலாக்ஸ் நா ஆத்விக்கோட ப்ரெண்ட்..”

சற்றே நிதானித்தவனாய் தொண்டையை செருமியவாறு,”ஜீவிகா??”

“பரவால்லையே அந்த பக்கி என்னைப் பத்தி உங்ககிட்ட சொல்லிருக்கானா..ஆனா உங்களைப் பத்தி என்ட்ட சொன்னதேயில்ல.”

முயன்று வரவழைத்த புன்னகையோடு கட்டிலின் பின்புறம் சாய்ந்து அமர்ந்தான்.

“எதாவது சாப்டுறீங்களா?”

“இல்ல அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..ஆத்வி?”

“ரூம்செக் அவுட் பண்ண போய்ருக்கான்.”

“ஓ!”

அவன் தன் முன் சங்கோஜமாய் உணர்வதைப் பார்த்தவளுக்கு மனம் கேட்காமல்,

“நீங்களும் எனக்கு ஆத்விக் மாதிரி தான் பீல் ஃப்ரீ..”

“ஆங்ங் தேங்க்ஸ்!!”

“உங்களைப் பத்தி நிறைய சொல்லிருக்கான்..”,அமைதியாய் புன்னகைத்தவள் மீண்டும் நாற்காலியில் அமர்ந்தவாறே அவனிடம் தயக்கமாய்,

“ஆத்வி ரொம்ப பயந்துட்டான்..”

“ம்ம்”

“கொஞ்ச மாசமா தெரிஞ்ச அவனுக்கே இப்படி இருக்குனா உங்க பேமிலிக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாங்க?”

“அப்படி கவலை படுறதுக்கு ஆள் இருந்தா நா ஏன் இந்த நிலைமைக்கு வரேன்..”

“??”

“அப்பாவும் அம்மாவும் என்னோட சின்ன வயசுலயே பிரிஞ்சுட்டாங்க..நா அம்மாவோட இருக்கேன்..ஆனா அவங்களுக்கு என்னை பிடிக்காது..”

“நீங்க சொல்றது எவ்ளோ பெரிய அபத்தம்னு உங்களுக்கே தெரியும்னு நினைக்குறேன்.எந்த அம்மாக்காவது தன் பிள்ளையயை பிடிக்காம இருக்குமா?”

“அது தெரில ஆனா அவங்களுக்கு என்னைப் பிடிக்காது.நா அவங்களுக்கு பிடிச்ச பையனா நடந்துக்கல.நா இந்த பீல்டுக்கு வந்ததுல இருந்து எதுவுமே அவங்களுக்குப் பிடிக்காது.”

“சரி அப்படியே இருக்கட்டும் இப்போ எதுக்கு உங்களை நீங்களே கஷ்டாப்படுத்திக்குறீங்க..ரிலாக்ஸ்..”

அதற்குள் ஆத்விக் வந்துவிட இருவருக்குமாய் அறிமுகம் செய்து வைக்க வாய் திறந்தநேரம்,

“டேய் ராசா எல்லாம் நாங்களே வாங்க பழகலாம் பர்ஸ்ட் லெவல் கோர்ஸ் முடிச்சுட்டோம்.முதல்ல இங்க இருந்து கிளம்புற வழியை பாருடா..புண்ணியமா போகும் உனக்கு..”

ரேஷ்வாவே சற்று புன்னகைத்திருந்தான்.அங்கிருந்து வெளியே வந்தவர்கள் பார்க்கிங்கிற்கு சென்று ரேஷ்வாவின் காரில் ஏறினர்.

“சரி ஆத்விக் நான் கிளம்புறேன் இனி நீ சாமாளிச்சுப்ப இல்ல?”

“ம்ம் நா பாத்துக்குறேன் ஜீ..தேங்க்ஸ் டி..”

“செருப்பு பிஞ்சுரும் அப்படியே ஓடி போ தேங்க்ஸாம் தேங்க்ஸ்..”,என்றவள் தன் வண்டியை நோக்கிச் செல்ல ரேஷ்வா அவளை தன் வீட்டிற்கு அழைத்தான்.

“நீங்களும் வீட்டுக்கு வாங்களேன் ஜீவிகா.”

ஆத்விக்கிற்கே ஆச்சரியம் தாளவில்லை.ரேஷ்வா அத்தனை எளிதில் யாரையும் நம்பி நெருங்கிப் பழகுபவன் அல்ல.அவனே அவளை அழைத்தது சந்தோஷமாகவும் அதே நேரம் ஆச்சரியமாகவும் இருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இருக்கட்டும் பரவால்ல இன்னொரு தடவை வரேன்.இப்போ ஹெல்த்தை பாத்துக்கோங்க..”,என்றவள் இருவரிடமும் விடைபெற்று கிளம்பினாள்.

காரில் சிறிதுநேரம் கனத்த அமைதி நிலவியது.பின் ஆத்விக்கே பேச ஆரம்பித்தான்.

“என்ன ரேஷ் இப்படி பயமுறுத்திட்டீங்க?”

“சாரி ஆத்வி உனக்கு தேவையில்லாத கஷ்டத்தை கொடுத்துட்டேன்.”

“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க..அதெல்லாம் ஒண்ணுமில்ல.இருந்தாலும் இன்னொரு தடவை இப்படி ஒரு முடிவு எடுக்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.