(Reading time: 15 - 30 minutes)

“கண்டிப்பா இப்படி நடக்காது ஆத்வி..”

“நம்மளை சுத்தி நிறைய நல்லவங்களும் இருக்காங்கனு இப்போ தோணுது ஆத்வி..நீ ஜீவிகா..”

“….”

“உண்மையா அவளை பத்தி நீ சொன்னப்போ கூட நா பெருசா நினைக்கல ஆனா இப்போ பாத்தவுடனே தெரியுது நீ சொன்னதெல்லாம் கம்மிதான்னு..

கொஞ்சம் கூட அலட்டலே இல்லாம எதார்த்தமா பேசினா..அவ என்னை ஆத்விக்கோட ப்ரண்டா தான் பாக்குறாளே தவிர அக்டரா பார்க்கலனு நல்லாவே புரிஞ்சுது.”

“ம்ம் அவ அப்படிதான்..எப்போவுமே அவ எனக்கு காட்ஸ் லிட்டில் ஏஞ்சல் தான் ரேஷ்..இப்படி நட்பு அமையுறது ரொம்பவே ரேர்.”

“உண்மைதான் எனக்கும் உங்களை மாதிரி நட்பு கிடைச்சுருந்தா நானும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துருப்பேனோனு தோணுது ஆத்வி.

எவ்ளோ தான் காசு பணம் புகழ்னு சம்பாதிச்சாலும் சில விஷயங்கள் அது எல்லாத்துக்கும் அப்பாற்பட்டதா இருக்கு.அப்பா வந்துருந்தார் வழக்கம் போல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை.

அவர் மேல இருந்த கோபத்துல அம்மா என்னையும் நிறையவே பேசிட்டாங்க.அது மட்டுமில்லாம இப்போ எல்லாம் ப்ராஜெக்ட்ஸ்ஸும் டல்லா தான் போய்ட்டு இருக்கு.என் ஸ்ட்ரெஸ் எல்லாம் சேர்த்து  ட்ரிங்க்ஸ் அதிகமா கன்ஸ்யூம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.அதுவும் மீடியா எப் பினு போட்டு ரொம்ப அவமானமாஆயிடுச்சு.

எல்லாத்தையும் யோசிச்சு என்ன பண்றதுனு தெரியாம தான் இப்படி ஒரு பைத்தியகாரத் தனத்தை பண்ணிட்டேன்.”

“வாழ்க்கையில கஷ்டம் இல்லாதவங்க யாரு ரேஷ்..எல்லாத்துக்கும் மரணம்தான் முடிவுனா யாருமே வாழா முடியுதாது இல்லையா?”

ஆமோதிப்பாய் தலையசைத்தவன் அமைதியாய் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

 அவனை வீட்டில் விட்டுவிட்டு வேலைகாரரிடம் உடல்நிலை சரியில்லை என்று மட்டும் கூறி கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்பினான் ஆத்விக்.அதற்குள் ஜீவிகா வீட்டிற்குச் சென்று  விட்டதையும் உறுதி செய்து கொண்டான்.

அடுத்த பத்து நாட்கள் சாதாரணமாய் நகர அன்று தன் மதிய உணவு இடைவேளையின் போது ஜீவிகாவிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.யாராக இருக்கும் என்று எண்ணியவாறே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ஹலோ ஜீவிகா?”

“யெஸ் சொல்லுங்க யார் பேசுறீங்க?”

“நா ரேஷ்வா பேசுறேன்..”

“ஹே ஹாய் எப்படியிருக்கீங்க?”

“அம் குட்..நீங்க?”

“சூப்பரா இருக்கேன்.என்ன விஷயம் சொல்லுங்க எதுவும் ப்ராப்ளம் இல்லையே?”

“நத்திங் டு வொரி நாளைக்கு லஞ்ச்க்கு உங்களை இன்வைட் பண்ணலாம்னு தான் கால் பண்ணேன்.நீங்க நான் ஆத்விக்..என்னோட ஒரு சின்ன தேங்க்ஸ் கிவ்ங் பார்ட்டினு வச்சுக்கோங்களேன்.”

“அது..அதெல்லாம் எதுக்கு..”

“முடியாதுனு சொல்லாதீங்க கண்டிப்பா வரணும்..”

“அம்மா விடுவாங்களானு தெரில..இருந்தாலும் கண்டிப்பா வர ட்ரைப் பண்றேன்.”

“யூ ஹேவ்டு கம்..பாய்..”,என்றவன் அழைப்பைத் துண்டித்திருக்க யோசனையாய் ஆத்விக்கை அழைத்தாள்.

“சொல்லு ஜீ..”

“டேய் ரேஷ்வா கால் பண்ணி லஞ்ச்க்கு கூப்டார்.””

“ம்ம் என்கிட்டேயும் சொன்னார்..நானும் நீ வர மாட்டனு எவ்ளவோ சொல்லிட்டேன்..நானே கூப்டுறேன்னு நம்பர் வாங்கிட்டார் டீ..ஒருநாள் தான வாயேன்..பாவம் நல்ல மனுஷன் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகிட்டு வரார்.”

“ம்ம் நீயே நல்லவன்னு சொல்றனா நல்லவனா தான் இருக்கும் ஆனாலும் உனக்கு எப்படி டா இப்படி ஒரு ஆள் மாட்னாரு”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“பேசுவ டி பேசுவ கூடவே இருக்குறதுனால உனக்கு என் அருமை தெரில டி எரும..”

“அரும எரும அடடா என்ன ஒரு டைமிங் ரைமிங்..சரி சரி வரேன்.உன் வீட்டுல வண்டியை விட்டுட்டு அங்கிருந்து நீ தான் கூட்டிட்டு போனும்.தனியா போக ஒருமாதிரி இருக்கும்.”

“சரி ஜீ நானே கூட்டிட்டு போறேன்.”

மறுநாள் கல்லூரி விடுமுறை என்பதால் தாயிடம் ப்ரெண்ட் ட்ரீட் தருவதாக பாதி உண்மையைக் கூறி கிளம்பிச் சென்றாள் ஜீவிகா.ஆத்விக் வீட்டில் வண்டியை விட்டு விட்டு இருவருமாய் அவன் காரில் கிளம்பினர்.

ரேஷ்வாவின் வீட்டை நெருங்கியதும் வாயை பிளந்தவள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.