(Reading time: 15 - 30 minutes)

“தேங்க்ஸ் ஜீ.உங்க வார்த்தைகள் எனக்கு எவ்ளோ தேவைனு உங்களுக்குப் புரியுமானு தெரில ஆனா இந்த ஒன் அவர் வாழ்க்கையை புதுசா யோசிக்க வச்சுருக்கீங்க.

ஆத்வியோட ப்ரெண்ட்ஷிப்பே எனக்கு காட்ஸ் கிப்ட்னு தோணும்..நீ இப்போ அதைவிடவும் பெருசுனு உணர்த்திட்ட.இந்த மாதிரி எதையும் எதிர்பார்க்காத நட்பும் அன்பும் எனக்கு கிடைச்சதில்ல ஜீவி.இப்போ ஒருவித புது தெம்பு வந்துருக்கு.

நிச்சயமா இனி நா ஒழுங்கா இருப்பேன்.என் லைப்போட அடுத்த ஸ்டேஜ்க்கு போறதுக்கான எல்லா முயற்சியும் பண்றேன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தேங்க் யூ போத் ஆப் யூ தேங்க் யூ சோ மச்”,என்று உற்சாகமாய் கூறுபவனை பார்த்த ஆத்விக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி நிறைந்திருந்தது.அதன் பின் சிறிது நேரம் பேசிவிட்டு இருவருமாய் கிளம்பத் தயாராகினர்.

“ஆனாலும் ஜி உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு டி”

“ம்ம் குரளி வித்தை கத்துருக்கேன் டா..”

“லூசு..”

“பின்ன என்ன நா ஏதோ நம்மாள முடிஞ்சதுனு சொன்ன அட்வைஸ்க்கு இவ்ளோ பில்டப் கொடுக்குற?”

“அப்படி இல்ல டி நீ இப்போ சொல்றதெல்லாம் நா அவருக்கு சொல்லிருக்க மாட்டேன்னு நினைக்குறியா?ஆனா உன் அளவுக்கு பக்குவமா எல்லாம் சொல்ல தெரில..கோ வித் அ ப்ளோ..எவ்ளோ உண்மை இல்ல..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் " காதல் காதலித்த காதலியை காதலிக்கும்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“விட்றா ஏதோ நம்மாள முடிஞ்சது..காசா பணமா அதையும் தாண்டி இந்த மாதிரியான ஆறுதல் தான் பல நேரத்துல மனுஷங்க எதிர்பாக்குறது..என்ன அதை தேவைபடுற நேரத்துல கொடுக்க பாதிக்கு மேல யாரும் தயாரா இல்ல.விடு இனி அவர் நல்லாயிருப்பார் நீ கவல படாத..”

“உண்மைதான் ஜீ..இப்போவே அவர்கிட்ட பயங்கர சேஞ்ச் தெரியுது.உன்கிட்ட அவர் கேஷுவலா பழகினதே எனக்கு செம ஷாக் தான்..மனுஷனுக்கு யாரு மேலேயும் அவ்ளோ ஒட்டுதலே கிடையாது..ப்ரெண்ட்ஸே இல்லாம ஒரு ஆள் இருப்பானா சொல்லு..

கேட்டா சொல்லுவாறு ஒரு கட்டத்துக்கு மேல யாரா இருந்தாலும் காசு பணம் பேர் இதுக்காகத் தான் பேசுறாங்க உண்மையான அன்புனு ஒண்ணு இல்லவே இல்ல.அதையும் தாண்டி எனக்கு பிடிச்ச ஒருத்தன் தான் நீ..இப்போ ஜீவினு சொன்னாரு..”

“ம்ம் உன் ப்ரெண்டா இருந்த பாவத்துக்கு இது ஒண்ணு தான் டா நல்லது பண்ணிருக்க நானும் அக்டரோட ப்ரெண்ட்னு சொல்லிக்கலாம்..”

“உன் கொழுப்பு மட்டும் குறையவே குறையாது டீ எரும”,என்றவன் அவளிடம் வளவளத்துக் கொண்டே தன் வீட்டை அடைந்தான். 

தொடரும்...

Episode # 02

Episode # 04

Go to Unnodu naanirukkum manithuligal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.