(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 04 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

என்றென்றும் 

என்றென்றும் புன்னகை

முடிவில்லா புன்னகை

இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்

ஒரு துளி பார்வையிலே

 

என்றென்றும் 

என்றென்றும் புன்னகை

முடிவில்லா புன்னகை

இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்

ஒரு துளி பார்வையிலே

 

என்னுயிரே 

என்னுயிரே 

 

தீம் தீம் தனன தீம் தனனன

ஓஹோ ஹோ ஹோ வானமே எல்லையோ

தீம் தீம் தனன தீம் தனனன

ஓஹோ ஹோ ஹோ காதலே எல்லையோ

த்விக் ரேஷ்வா ஜீவிகா மூவருக்கும் இடையே நல்லதொரு நட்பு ஏற்பட்டிருந்தது.மூவருக்குமாய் ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து அவ்வப்போது அரட்டை அடிக்க ஆரம்பித்திருந்தனர்.அதுவும் ஆத்வியும் ஜீவியும் ஒருவரையொருவர் கிண்டல் அடித்துக் கொண்டு செய்யும் அலப்பறைகளில் ரேஷ்வாவின் முகம் எப்போதுமே புன்னகையோடே இருந்தது.

நடந்ததையெல்லாம் மறந்து ஒருவித புத்துணர்வோடு இருந்தான்.சென்னையிலேயே தங்கியவன் தன்னிடம் வரும் கதைகளில் தனக்குப் பிடித்ததாய் தேர்ந்தெடுத்து ஒப்பந்தம் கூட கையெழுத்திட்டுவிட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஜிம் சென்று பழைய உடல்கட்டை கொண்டு வந்திருந்தவனை இப்போது பார்ப்பதற்கு இன்னமும் கம்பீரமாய் இருந்தான்.

இதற்கிடையில் ஜீவிகாவிற்கு முகூர்த்த புடவை எடுப்பதற்கான தேதி குறிக்கப்பட்டு மஞ்சுளாவும் அவளுமாய் தன் சித்தி பெரியம்மாக்களோடு கிளம்பிச் சென்றனர்.

ஜீவிகாவிற்கு ஜெயந்த் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.ஏனோ திருமணநாள் நெருங்க நெருங்க ஒருவித பதட்டம் வந்திருந்தது.அவனைப் பற்றி ஏதேனும் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று கூடதோன்றியது.ஆனால் அவன் அன்று வரவில்லை.

சற்று ஏமாற்றமாய் உணர்ந்தவளின் முகமும் அதை பிரதிபலிக்க ஜெயந்தின் தாய் அதை கவனித்துவிட்டு தான் மொபைலை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிச் சென்றவர் யாருக்கோ அழைத்தார்.பின் ஜீவிகாவிடம் வந்தவர்,

“இந்தாம்மா ஜீவிகா எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க உன்கிட்ட பேசனும்னு சொல்றாங்க”

“என்கிட்டயா யாரு அத்த?”

அதற்குள் அவரை யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு அவளை பேசுமாறு சைகை செய்துவிட்டு நகர்ந்தார்.

“ஹலோ!!”

“ஹலோ யாரு பேசுறீங்க?”

“நீங்க யாரு?”

“நா ஜெயந்த்..”

(ஐயோ நம்ம சூப்பர் மார்கெட் போலயே அத்தை இப்படி மாட்டிவிட்டீங்களே!!)

“நா..நா ஜீவிகா பேசுறேன்!!”

“….”

“ஹலோ!!”

“ம்ம் சொல்லுங்க எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லாயிருக்கேன் நீங்க எப்படியிருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன்..”

“வேலையெல்லாம் எப்படி போகுது?”

“ம்ம் பீக்டைம்தான் நல்லா போய்ட்டு இருக்கு..”

“ஓ..சரி அப்போ நா வச்சுட்டுறேன்.அத்தை தான் கால் பண்ணி கொடுத்தாங்க..பை..”

“ம்ம் பை..”,என்று போனை வைத்தவன் தன்னைத் தானே தலையில் குட்டிக் கொண்டான்.அந்த பொண்ணே இப்போதான் முதல் தடவை பேசுறா பெரிய பிஸினஸ் மேக்னெட்னு நினைப்பு..பீக் டைமாம்..உன்னையெல்லாம் என்னத்த பண்றது..அவகிட்ட கல்யாணத்துல இஷ்டமானு கேக்காம போய்ட்டோமே..தயங்கித் தயங்கி பேசினாளே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.