அதை சட்டையே செய்து கொள்ளாமல் அவன் நண்பனிடம் ஏதோ கமெண்ட் அடித்தவாறு அவன் வெளியே நடக்க ஆரம்பிக்க அவர்கள் அருகில் போய் தோள்தட்டி நிறுத்தினாள்.
“ஒரு சாரி சொல்லணும்னு கூட தோணாதா?”
“நா என்ன தப்பு பண்ணேன் சாரி சொல்றதுக்கு?”
“ம்ம் அப்போ பண்ணது தப்புனு கூட புரியாத அளவு தான் உன் அறிவு”
“மேம் அதான் ஒண்ணும் பண்ணலல அப்பறம் ஏன் தேவையில்லாம பேசுறீங்க?”
“ஓ..நீ எதிர்பார்த்தது நடக்கலனு வேற கவலபடுற..ரைட்..இப்போ நா வேணா அசையாம இங்கேயே நிக்குறேன் நீ என்ன நினைச்சு மோத வந்தியோ அத இப்போ பண்ணு கம்..”,என்றவள் இலகுவாய் கையை பின்புறம் கட்டி நின்றாள்.
அதற்குள் அவர்களைச் சுற்றி சிறு கூட்டம் கூடியிருந்தது.அதை கண்டு பதட்டமானவனாய் சுற்றும் முற்றும் பார்க்க அவனருகில் இருந்த நண்பர்கள் கூட சற்று விலகிவிட்டனர்.அதை கண்டவள் லேசாய் புன்னகைத்தவாறு அவனருகில் வந்தாள்.
“பார்த்தியா அஞ்சு நிமிஷம் முன்னாடி வரை உன் ப்ரெண்ட்னு நீ நினைச்சவன்கூட இப்போ பத்தோட பதினொன்னா போய் கூட்டத்துல நிக்குறான் பாரு.பொண்ணுங்களை சைட் அடிக்குறது வேற ஹராஸ் பண்றது வேற.
அதுலயும் உன்னைவிட பெரியவ நான் அந்த அறிவு இல்லனாலும் உனக்கு பாடம் சொல்லி கொடுக்குற குரு இடத்துல இருக்கேனே அதையாவது யோசிச்சுருக்க வேண்டாம்.
காலேஜ் வாழ்க்கை எந்த அளவு அழகானதோ அதே அளவு ஆபத்தானதும் கூட.உன் வாழ்க்கையின் திசையை முடிவு பண்ற இடம் இது.உன்னோட சேர்ந்து டைம் பாஸுக்கு சுத்துறவன் எல்லாம் உன் உயிர் நண்பன் ஆகிடமாட்டாங்க.
உண்மையான நட்பை உன் பக்கத்துல வச்சுக்காத வரை உன்னோட தப்பை நீ உணருவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது.முதல்ல நல்ல நண்பர்களைத் தேடி கண்டுபிடி அப்பறமா நல்ல பொண்ணா பார்த்து உரசுறதுக்கு கண்டு பிடிக்கலாம்..புரிஞ்சுதா போ..”,என்றவள் உள்ளே சென்று விட அந்த மாணவனோ தலை குனிந்தவாறே வெளியே சென்றுவிட்டான்.
உள்ளே சென்று மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த ஆடியோ டெக்னீஷியனிடம் அவர்கள் டிப்பார்ட்மெண்ட் பெர்பார்மன்ஸ்க்கான சீடியை கொடுத்துவிட்டு அங்கிருந்த சேரிலேயே அமர்ந்தவள் தங்கள் மாணவர்கள் வந்து நின்றதும் சைகை காட்டிவிட்டு பாடலை ஒலிக்க விட்டாள்.
அத்தனையும் ஹிட் பாடல்களாக இருக்க அவளுக்கே தன்னை நிலையில் வைத்துக் கொள்ள முடியவவில்லை.கைதட்டியும் கத்தியவாறும் அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
ஆடியோ இயக்கிக் கொண்டிருந்தவரே அவளை வேற்று கிரகவாசி போல பார்த்தார்.இந்தபொண்ணு லெக்சசரர்னு நினைச்சா இந்த கத்து கத்துனு மனதில் நினைத்தவாறே அவளை பார்த்துக் கொண்டிருந்தார்.பாடல் முடியும் நேரம் தன் இரு விரல்களை வாயினுள் வைத்து அவள் அடித்த விசிலில் அரங்கமே அதிர்ந்தது என்றால் மேடையிலிருந்து அதைப் பார்த்த மாணவர்களுக்கோ உற்சாகம் தாளவில்லை.
சீடியை வாங்கிக் கொண்டு அங்கிருந்து எழுந்தவள்,”என்னண்ணா அப்படி பாக்குறீங்க?”
“ம்ம் ஒண்ணுமில்லையே!”
“அதான் பார்த்தனே வாய்க்குள்ள ரெண்டு ஈ நாலு கொசு போறதுகூட தெரியாம என்னையே முறைச்சு பாத்துட்டு இருந்தீங்களே!”
“அது அது..”
“சும்மா சொல்லுங்க..இதெல்லாம் எப்படி இங்க வேலைக்கு வந்ததுனு தான யோசிக்குறீங்க?”
“ம்ம்..ம்கூம்..”
“ஹா ஹா குட் இப்டியே மெயின்டெயின் பண்ணுங்க பிரின்சிபல் கிட்ட போட்டு குடுத்துறாதீங்க..அதுக்கு தான் செக் பண்ணி பாத்தேன்.நீங்க நல்லவர் தான்..பை..”
இப்படியான அட்டூழியங்களை அசராமல் செய்துகொண்டு நாட்களை இனிமையாக கழித்துக் கொண்டிருந்தாள் ஜீவிகா.அன்று மாலைக்கு மேல் ரேஷ்வா அவளை அழைத்திருந்தான்.அழைப்பு ஏற்கப்பட்டிருக்க எதிர்புறம் எந்த சத்தமும் இல்லாததை உணர்ந்தவன் மொபைலை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் காதில் வைத்தான்.
“ஹலோ ஜீ?”
“ம்ம்”
“என்னாச்சு ஏன் எதுவும் பேசமாட்ற?ஆர் யூ ஓகே?”
“..”
“ஹலோ..”
“யோவ் நா பேசிட்டுதான் இருக்கேன் உனக்குதான் கேட்க மாட்டேங்குது சும்மா லோ லோனு கத்திகிட்டு”,என்ற குரலைக் கேட்டு ஒரு நொடி அதிர்ந்து போனான்.
ஆண் குரலும் அல்லாது பெண் குரலும் அல்லாது கரகரப்பாய் ஒலித்த அந்த குரல் அவனுக்குப் புதிது.
“ஜீவி இல்லையா?”
“மங்குனி அமைச்சரே வந்தேனா கொன்னுருவேன்..நா ஜீவி தான்..”
“நீ தானா அப்பறம் ஏன் ஏதோ ஒரு வாய்ஸ்ல பேசுற?”
“தொண்டை மொத்தமா அவுட் இன்னும் ரெண்டு நிமிசம் உங்களுக்கு விளக்கம் குடுத்தா மொத்தமா போய்டும்.”