(Reading time: 15 - 30 minutes)

அதைக் கேட்டவனுக்கு சிரிப்பு வந்துவிட கஷ்டப்பட்டு அடக்கியவனாய்,”தொண்டை இப்படி ஆகுற அளவு அப்படி என்ன பண்ண ஜீ?”

“இன்னைக்கு காலேஜ் கல்ச்சுரல்ஸ் பாட்டெல்லாம் கேட்டு ஒரு ஆர்வத்துல அப்படியே இசையோடு ஒன்றிட்டேன்.அதான்..”

“சத்தியமா காது கொடுத்து கேட்க முடில..கரெக்டா உன் வாய்ஸ் இப்போ எப்படி இருக்குனு சொல்ட்டா ஒருபடத்துல ஹீரோ ஹீரோயின்ட்ட டைம் கேப்பாரு பக்கத்துல ஒரு குரல் எட்டேமுக்கால்னு சொல்லுமே…”,எனும்போதே அவன் அங்கு சத்தமாய் சிரிக்கும் ஒலி கேட்டது ஜீவிகாவிற்கு.

“வர வர அந்த தடித் தாண்டவராயனோட சேர்ந்து உடம்பெல்லாம் கொழுப்பு வந்துருச்சு உங்களுக்கு நா போனை வைக்குறேன்..”,என்றவள் அழைப்பைத் துண்டித்து விட ரேஷ்வாவோ தன் சிரிப்பை அடக்க பெரும்பாடு  பட்டுக் கொண்டிருந்தான்.

வீட்டிற்கு வந்தவள் தாயிடம் வகையாய் வாங்கி கட்டிக் கொண்டாள்.

“கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இப்படியா ஆட்டம் போடுவ ஜீவி.காலேஜ்ல வேலை பாக்குறங்கிற நினைப்பு கொஞ்சமாவது இருக்கா..படிக்குற பசங்க மாதிரி ஆட்டம் போட்டுருக்க..”

“ம்மா ஏற்கனவே தலையெல்லாம் வலிக்குதும்மா..ப்ளீஸ் மா வுட்ரும்மா”

“வர வர வாய் அதிகமாய்டுச்சு..என்னமோ பண்ணுபோ..”,என்றவர் சமையலறைக்குச் சென்று அவளுக்காக காபி தயாரிக்கச் சென்றார்.

அப்போது ஒரு புது எண்ணில் இருந்து மஞ்சுளாவிற்கு அழைப்பு வர எடுத்துப் பேசியவர் அவசரமாய் மகளிடம் வந்தார்.அழைப்பை ம்யூட்டில் போட்டவர் ஜீவிகாவிடம்,

“மாப்பிள்ளை பேசுறாரு டீ பேசு..”

“ம்மாமா இந்த தொண்டையோட எப்படிமா..ப்ளீஸ் அப்பறம் பேசுறேன்.”

“என்ன ஜீவி நீ!??”

“ம்மாமா ப்ளீஸ்ஸ்!!!”

பல்லைக் கடித்தவாறே அவனிடம் அவளுக்கு உடம்பு சரியில்லை என்று கூறி பேசி மழுப்பி அழைப்பைத் துண்டித்தார்.அடுத்த அர்ச்சனையை ஜீவிகாவிடம் அவர் ஆரம்பிக்க அங்கு ஜெயந்தோ இன்னும் இன்னும் குழம்பிப் போனான்.எதற்காக பேச மறுக்கிறாள் என்ற சிந்தனையே அவனுள் சுழன்று கொண்டிருந்தது.

அன்று ஆத்விக்கின் அலுவலகத்தில் அவனுக்கான தனிப்பட்ட பீஏ பதவிக்கான நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.காலையில் நேரத்திலேயே கிளம்பி அலுவலகத்தை அடைந்தவன் ஒவ்வொருவராய் சந்திக்க ஆரம்பித்தான்.

“இந்த அப்பாகிட்ட எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டாரு..இந்த இன்டர்வியூ முடியுறதுக்குள்ள எனக்கு பைத்தியம் பிடிச்சுரும் போல இருக்கு.அரவிந்த் அடுத்த கேன்டிடேட்டோட நா கிளம்புறேன் நீங்களே பாத்துருங்க”

என்றவன் அடுத்து வந்தவரை நிமிர்ந்து பார்க்க ஒரு நொடி ஏனோ அத்தனை களைப்பையும் மீறி ஒரு குளிர்காற்று மனதில் பரவியதாய் உணர்ந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“மே ஐ கம் இன் சார்?”

“யா கம் இன்..டேக் யுவர் சீட்”

”தேங்க் யூ சார்..மை ப்ரொபைல்..”

“ஷான்யா ரைட்?”

“என் பேர் எப்படி?”

“நானும் உங்க காலேஜ் தான் உங்களோட சூப்பர் சீனியர்..”

“ஓ!!நா பாத்ததில்லயே!”

(என்ன மட்டுமா நீ யாரையுமே தான் பார்த்ததில்ல)அலட்சியமாய் தோளை குலுக்கியவன் குனிந்து அவள் ப்ரொபைலை பார்க்க ஆரம்பித்தான்.

“வெல்..எங்களுக்கு ஏத்த ப்ரொபைல்ல தான் உங்களோடது..பட் பொசிஷன் என்னோட பெர்சனல் அசிஸ்டெண்ட் அதுல உங்களுக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே?”

“இல்லஅப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..”

“கூல்..அப்போ வெளில வெயிட் பண்ணுங்க..ஆஃபர் லெட்டர் வாங்கிட்டு போய்டுங்க.சேலரி டீடெய்ல்ஸ் ஹெச்ஆர்டி பார்ட்மெண்ட்ல சொல்லுவாங்க”

“ஓ.தேங்க் யூ சோ மச்..”

“யூ ஆர் மோஸ்ட் வெல்கம் மிஸ் ஷான்யா..”,என்றவன் அழகிய புன்னகையோடு அவள் வெளியே செல்லும் வரை காத்திருந்திருந்து அடுத்த நொடி தன் அன்னையை அழைத்தான்.

“மாம்!!!”

“ஏன்டா போன் வழியா என் காதை கடிச்சுருவ போல இருக்கு ஏன் இப்படி கத்துற?”

“ம்மா நான் உங்க மருமகளை பாத்துட்டேன்!!!”

“அடக் கிராதகா என்னடா இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுற?”

“ம்மா மறந்துட்டியா சொல்லிருக்கேனே ஷான்யா என் ஜீனியர் வேற டிபார்ட்மெண்ட்”

“ஓ..அவளை சைட் அடிக்குறேன்னு சொன்ன சரி எப்போ இருந்து லவ் பண்ண ஆரம்பிச்ச சொல்லவே இல்ல?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.