(Reading time: 15 - 30 minutes)

“என்ன பார்த்தா உனக்கு எப்படி மா தெரியுது..நானெல்லாம் எவ்ளோ நல்லவன் தெரியுமா அவளை மட்டும் தான் சைட் அடிச்சுருகக்கேன்..”

“அப்படியா கொஞ்சம் இரு நம்ம ஜீவி குட்டிக்கு கால் பண்றேன்.”

“ஐயோ நீயெல்லாம் பெத்த தாயா!!எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லிட்டு இருக்கேன்..நீ என்ன பேசிட்டு இருக்க?”

“சரி சரி எப்படியும் அவளை இன்னைக்குத் தான் பார்த்துருக்க நீ லவ் சொல்லி அவ அக்செப்ட் பண்ணி..ம்ம் டூ எர்லி டு கெட் எக்சைட்டட் டா ஆத்வி..சட்டுபுட்டுனு கல்யாண தேதியை எப்போ குறிக்கலாம்னுசொல்லு..”

“நல்ல அம்மா வாய்ப்பே இல்ல நீ வர வர அந்த ஜீ மாதிரியே ஆய்ட்ட மா..எதையும் சீரியஸா எடுத்துக்குறதே இல்ல..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நான் டென்ஷன் இல்லாம ஜாலியா இருக்கேன் அது உனக்கு பிடிக்கலையா போடா..என்கிட்ட மொக்கையை போடாம போய் என் மருமகளை கரெக்ட் பண்ற வழியைப் பாரு..”

“எவ்ளோ பெரிய விஷயம் சொல்லிருக்கேன்…நல்லா ரியாக்ஷன் குடுக்குற நீ..போம்மா..நா கோவமா போறேன்.”

“சாப்பிட வருவியா இல்ல கோவமாவே தான் இருப்பியாடா..சொல்லிட்டனா சாப்பாட்டை பக்கத்து வீட்டு டாமிக்கு போட்டுருவேன்.”

“அவமானம்!!!!”

“உனக்கு பிடிச்ச காரக் குழம்பு டா?!”

“கோபம் போய்டுச்சு வீட்டுக்கு வரேன் பை..”,என்றவன் ஜீவிகாவிற்கு அழைத்தான்.

“ஜீஜீஜீஜீஜீ!!!”

“எரும மாடே ஏன் இப்படி கத்துற??”

”ஜீ நான் சொல்லப் போறத கேட்டா என்னவிட நீ கத்துவ..ஷான்யாவை பாத்துட்டேன்  டி”

“வாவ் டேய் ஆத்வி செம எங்க எப்போ பேசினியா?”

“ஆபீஸ்ல தான் ஜீ..இன்டர்வியூக்கு வந்துருந்தா..பீஏ வா செலெக்ட் பண்ணிட்டோம்ல..இனி டெய்லி என் ஆள் கூட தான் வேலை பார்க்கணும்..”

“அப்படி போடு..அப்போ இனிமே அங்கிளை பிஸினஸை கொஞ்சம் கவனமா பாத்துக்க சொல்ணும்!”

“ஏய்?”!

“ஹா ஹா சும்மா சும்மா டா ஆத்வி பையா..செம ஹேப்பி சீக்கிரமே லவ்வை சொல்லி அவளையும் நம்ம கேங்க்ல ஐக்கியமாக்கிடு..”

“கண்டிப்பா ஜீ..உன் ஹெல்ப்பும் தேவைப்படும்..”

“அப்படியா நிறைய செலவாகுமே!!”

“ரொம்ப பண்ணாத டீ”

“டேய் நிஜமாதான் சொல்றேன்..நா கேக்குறப்போ எல்லாம் எனக்கு எதாவது வாங்கித் தரணும் இல்லனா ஹெல்ப் எல்லாம் பண்ண முடியாது தம்பி.”

“எல்லாம் என் நேரம்..சரி சரி பண்ணித் தொலையுறேன்.”

“ம்ம் குட் இது நல்ல புள்ளைக்கு அழகு..சரி இப்போ போய் கனவு காணாம வேலையைப் பாரு போ.”,என்று அவள் கூறியபோது தான் தன் கடந்த காலத்திற்குள் சுகமாய் பயணிக்கத் தொடங்கியிருந்தான் ஆத்விக். 

தொடரும்...

Episode # 03

Episode # 05

Go to Unnodu naanirukkum manithuligal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.