(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 05 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

ஏ பெண்ணே! காதல் என்பது இனிக்கும் விருந்து

கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே?

நிறையை மட்டுமே காதல் பார்க்கும்

குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா?

காதல் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே

 

கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று

ரசிக்கும் ரசிக்கும் காதல்

கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக

ஏன் ஏன் ஏன் மோதல்?

பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது

 

பெண்களே உலகில் இல்லையென்றால்

ஆறுதலே தேவை இருக்காது

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்;

அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்

ளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஒரு கூட்டமாய் மரத்தடியில் அமர்ந்து தங்களுக்குள் இந்த பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர்.ஆத்விக் அனைவரையும் பார்த்து புன்னகைத்தவாறு அமர்ந்திருந்தான்.

“ஏன் டா ஆத்வி எப்பவுமே அமைதியா இருக்கியே..ஆனாலும் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கக் கூடாது டா!”

“மச்சி நீங்க பாடுறதுல என்ஜாய் பண்றீங்க நா அதை கேக்குறதுல என்ஜாய் பண்றேன் அவ்ளோ தான்.”

“ம்ம் உனக்கா பேச சொல்லித் தரணும்..சரி இன்னைக்கு ப்ரஷர்ஸ் பார்ட்டி இருக்கு வழக்கம் போல நிகழ்ச்சித் தொகுப்பாளர் நீதான்..நல்ல பிகரா எதாவது தேறுமானு பார்த்து சொல்லுடா..”

“நம்ம காலேஜ்ல நல்ல பிகரா வாய்ப்பு இருக்குங்குற?””

“மச்சான் ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை சொன்ன டா..இது யோசிக்க வேண்டிய விஷயம்.”

“சரி விடு மச்சி நமக்குனு ஒருத்தி எங்கயாவது பிறக்காமயா போய்ருப்பா பாத்துக்கலாம்.சரி டா ஆடிடோரியம் போறேன் டைம் ஆச்சு பை..”,என்றவன் எழுந்து ஆடிட்டோரியம் நோக்கி நடக்க சற்று தூரத்தில் ஒரு பெண் இரண்டு பெண்களோடு நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தற்செயலாய் அவளை கவனித்தவனுக்கு ஏனோ அவளிடமிருந்து விழியகற்ற முடியவில்லை.அழகு என்பதை கடந்து ஒருவித உணர்வு.இன்னும் சொல்ல போனால் அவள் ஒன்றும் பார்த்தவுடன் ஆண்கள் வர்க்கம் மயங்கிவிழும் பேரழகியாகவெல்லாம் இருக்கவில்லை.

ஆத்விக்கிற்குத் தான் முதன்முதலாக ஒரு பெண்ணைப் பார்த்த நொடி மண்டைக்குள் யாரோ பலமாய் மணியடித்து ஸீரியல்செட் லைட்டெல்லாம் எறிய விட்டதைப் போன்று பிரகாசமாய் உணர்ந்தான்.

அதற்குள் அவனைத் தேடிவந்த நண்பன் அவனை இழுத்துக் கொண்டு ஆடிடோரித்திற்குள் சென்றான்.

ஆத்விக் வழக்கம்போல் தன்னுடைய உற்சாகமான பேச்சோடு விழாவை ஆரம்பித்து வைக்க சீனியர்களின் வரவேற்பு நடனம் பாட்டு அனைத்தும் முடிந்து முதல் வருட மாணவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டும் நேரம் ஆரம்பமானது.

இது வழக்கமாய் சில கல்லூரிகளில் இருப்பதுதான்.இதில் நன்றாக திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களை அந்த வருட கலை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்வர்.

அப்படி ஒவ்வொரு பெயராய் டிபார்ட்மெண்ட் பெயரோடு ஆத்விக் வாசிக்க ஒவ்வொருவராய் மேடையேறினர்.சிறிது நேரத்திற்குப் பின் ஆத்விக் ஒரு பெண்ணின் பெயரை வாசிக்க அவன் மண்டைக்குள் ஒளிவட்டம் கொடுத்த ஸீரியல்செட் பெண் மேடையேறினாள்.

“ஷான்யா,பி ஏ இங்க்லீஷ் லிட்ரேச்சர்.”

மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டவன் அவளையே பார்த்திருக்க அவனைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தவள் அவன் கையிலிருந்து மைக்கை வாங்கிக் கொண்டு மேடையின் நடுவில் சென்று நின்றாள்.

சந்திதொமே கனாகளில் சிலமுறையா பலமுறையா

அந்தி வானில் உலாவினோம் அது உன்னக்கு நினைவில்லையா

இரு கரைகளை உடைதிடவே பெருகிடுமா கடல் அலையே

இரு இரு உயிர் ததளிகையில் வழி சொல்லுமா கலந்கரையே

உணதலைகள் என்னை அடிக்க

கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட..

அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி

எதற்காக தடை இனி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.