(Reading time: 15 - 30 minutes)

பைனல் இயர் வகுப்பின் வெளியே நின்று அவன் எட்டிப் பார்க்க உள்ளே அவள் இருப்பதற்கான அடையாளமே இல்லை.வகுப்பு முடியும் வரை காத்திருந்தவன் இடைவேளையில் வெளியே வந்த ஒரு மாணவனிடம் விசாரிக்க அவனுக்குத் தெரியவில்லை என்று கூறிவிட்டான்.

ஜீவிகா சென்று மாணவிகளில் ஒருத்தியிடம் கேட்க அவள் இரண்டாம் வருடத்திலேயே கல்லூரி மாறி சென்றுவிட்டதாகக் கூறினாள்.அவள் தந்தைக்கு பணியிடமாற்றம் ஏற்பட்டதால் குடும்பத்தோடு ஊரைவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறினாள்.

கேட்ட ஆத்விக்கிற்கோ ஒருநொடி அதிருப்தியாய் இருந்தது.இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் வீட்டு அட்ரெஸை கேட்டு வாங்கி வந்தான்.அங்குசென்று விசாரித்தபோது அது அவர்களின் சொந்த வீடுதான் எந்நேரமும் திரும்பி வருவார்கள் என்று கூறினர்.

எத்தனை முயன்றும் மனதின் கவலையை முகத்தில் பிரதிபலிக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

“டேய் என்ன இதுக்கே இப்படி டல் அடிக்குற கவலப்படாத டா எங்க இருந்தாலும் உன்னைத் தேடி வருவா பாரு..”

“ம்ம் அவனவன் உயிருக்குயிரா லவ் பண்ணிட்டு பிரிஞ்சு போனாலே மறந்துருவானுங்க இதுல நா யாருனே அவளுக்குத் தெரியாதாம்.என்ன தேடி வருவாளா?ஏன் டீ பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல மாட்ட..”

“பரவால்ல தெளிவா தான் இருக்க..சும்மா செக் பண்ணி பாத்தேன்..லூசுமாதிரி எதையாவது யோசிக்காம போய் வேலையை பாரு..ஒரு வேளை அவ விதி உன்கிட்டதான் மாட்டனும்னு இருந்தா யாரால மாத்த முடியும்.போ போய் பொழப்பை பாரு..”

“ஊர்ல ஒவ்வொருத்தனுக்கும் லவ்னா உயிரை கொடுத்து ஹெல்ப் பண்ற ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க என் நிலைமையை பாரு அதுவே கூடி வந்தாலும் நீ குழி தோண்டி புதைச்சுருவ…எல்லாம் நா வாங்கிட்டு வந்த வரம்.”

“டேய் பேச்சைக் குறை பேச்சை குறை போ கிளம்பு லேட் ஆச்சு..”

அதிலிருந்து அவ்வப்போது அவள் வீட்டின் அருகில் சென்று அவள் வருகையைப் பார்த்து வருவான்.ஆனால் இப்போது அவளே தன்னைத் தேடி வந்ததில் தலைகால் புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.

அடுத்த நான்கு நாட்களில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள் ஷான்யா.அவளுக்கான அறை ஆத்விக்கின் அறையின் பக்கவாட்டிலேயே இருந்தது.ஜாயின்ங் பார்மாலிடீஸை முடித்துவிட்டு நோட் பேட் பேனாவோடு ஆத்விக்கின் அறைக்கு வந்தாள்.

“குட் மார்னிங் சார்”

“குட்மார்னிங் ஷான்யா!பார்மாலிடீஸ் எல்லாம் முடிச்சுட்டீங்களா?”

“எஸ் சார்..”

“நீங்க எப்போ சென்னை வந்தீங்க டூ டேஸ் முன்னாடி கூட பாக்கலயே?”

“சார்!!”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அஹெம்..அது வந்து ப்ரொபைல்ல டெம்ப்ரரி அட்ரெஸ் வேற இருந்துதே அதை கேட்டேன்.”

“நேத்து மார்னிங் தான் சார் வந்தோம் அக்சுவலி என் நேடிவ் இதான் அப்பா டிரான்ஸ்பர்னால வெளில இருந்தோம்.இப்போ ரிடெயர்ட் ஆய்ட்டார் சோ இங்க தான்.”

“ஓ..தேட்ஸ் குட்..”

“காலேஜ்லயே கவனிச்சுருக்கேன் ரொம்ப சைலண்டா நீங்க..”

“அப்படினு ஒண்ணுமில்ல சார்..”

“ஓ.கே..பர்ஸ்ட் டே சோ கம்பனி பத்தி டீடெயில்ஸ் எல்லாம் கேட்டுக்கோங்க நாளையில் இருந்து ஆன் ட்யூட்டி..யூ கேரி ஆன் நவ்..”

“தேங்க் யூ சார்..”,என்று சென்றவளை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான்.

“இப்படியே ஒவ்வொரு கேள்வியா கேட்டு பதில் சொல்லி கல்யாணம் பண்றதுகுள்ள பல்லு போய் முடி கொட்டிரும்..கடவுளே இந்த சின்ன வயசுல இத்தனை சோதனையா எனக்கு!!'

அன்று வாட்ஸ் அப் க்ரூப்பில் ஆத்விக்கை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தாள் ஜீவிகா.

“ரேஷ் நம்ம காதல் மன்னனுக்கு அடிச்சது பாருங்க ஜாக்பாட்..ஆருயிர் காதலியே பீஏவாக வரும்போது சோகம் கூட சுகமாகும்..வாழ்க்கை இன்ப வரமாகும்.”

“ஜீ கைல கிடைச்ச பிச்சுருவேன் நிலைமை தெரியாம கடுப்பேத்திகிட்டு..”

“அவளை ஏன் திட்டுற ஆத்வி டெய்லி லவ்வரை பார்க்க போற பேச போற ஜாலி தான?”

“ம்ம் பேசிட்டாலும்..ஏன் ரேஷ் நீங்க வேற..நாலு கேள்வி கேட்டா நாலே பதில் கரெக்ட்டா வருது..அவளை பேச வைக்கவே பல வருசம் ஆகும் போல இருக்கு..”

“ஆமா உன் ஆளு பச்சை மண்ணு அ ஆ சொல்லி கொடு..டேய் எல்லாம் ஆக்டிங் டா இந்நேரம் அவங்க வீட்லயோ ப்ரெண்ட் கிட்டேயோ நீ விட்ட ஜொள்ளுல அவ போட் விட்ட கதையை சொல்லி உன் மானத்தை பெரிய கப்பல்ல ஏத்திட்டு இருப்பா.”

“இது வேறயா!!”

“நிச்சயமாக உனக்கு நாங்க ரெண்டு பேரும் அடிமையா சிக்கிருக்குற மாதிரி அவளுக்கும் ஒரு அடிமை சிக்காமயா போய்ருக்கும்?”

“ரொம்ப பேசுற பின்னாடி மச்சான் கிட்ட சொல்லி செமயா கவனிக்க சொல்றேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.