Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகா

Unnaiye thodarven naane

வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயில்

Unnaiye thodarven naaneUnnaiye thodarven naane

மாதவி டூருக்காக ஏற்படுத்திய பஸ் சரியாக 6 மணிக்கு வேலூர் கோட்டை கோயிலில் சென்று நின்றது. மாதவியும் அனைவரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள். இன்று பௌர்ணமி என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாதவி ஏற்கனவே ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசனத்திற்கான டோக்கன் வாங்கியதால் அதைக் காட்டி அரை மணி நேரத்தில் ஜலகண்டேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு மற்றவர்களுடன் பஸ் ஏறினாள்.

பஸ்ஸூம் கிளம்பியது. போகும் வழியிலேயே சரியாக அவள் சொன்ன நேரத்திற்கு பெட்ரோல் காலியாகும் நிலைமை வந்தது. அந்நேரம் பெட்ரோல் பங்க் அருகில் வரவும் மாதவி ட்ரைவர் ராஜனிடம் வந்தாள்

”டிரைவர் அதோ அந்த பெட்ரோல் பங்க்ல பஸ் விடுங்க பெட்ரோல் போடனும்ல” என சொல்ல அதுவரை பயந்துக் கொண்டே பஸ்ஸை ஓட்டிய ராஜனுக்கு நிம்மதியானது. பெரு மூச்சு விட்டான். டிரைவர் சீட்டின் பின்னால் அமர்ந்திருந்த திருமால் அவனது செயலைக் கண்டு

”என்னப்பா என்ன ஆச்சி இவ்ளோ பெரிய பெருமூச்சு விடற”

“பின்ன என்னங்க உங்க பொண்ணு சொல்லிட்டாங்கன்னு பெட்ரோல் போடாம பயந்து பயந்து ஓட்டிட்டு வந்தேன். திடீர்ன்னு பெட்ரோல் காலியானா பஸ் நின்னுடுமே என்ன  செய்றதுன்னு யோசிச்சேன். டென்ஷனாயிட்டேன் இப்பதான் நிம்மதியே வந்துச்சி எனக்கு” என சொல்ல சிரித்தாள் மாதவி

”டிரைவர் என் கணக்கு எப்பவும் தப்பாகாது, நீங்க ஏன் கவலைப்படறீங்க ஒருவேளை பெட்ரோல் காலியானாலும் அதுக்கும் மாற்றுவழி என்கிட்ட இருக்கு”

”அப்படியா அது என்ன வழி”

“ம் காலியானப்ப சொல்றேன் பங்க் வந்துடுச்சி, பஸ் உள்ள கொண்டு போய் விடுங்க” என சொல்லவும் டிரைவரும் பங்கிற்குள் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு சென்று பெட்ரோல் போடும் இடத்தில் நிப்பாட்டினார்.

பஸ்ஸை விட்டு இறங்க முனைந்தவரிடம் மாதவி

”ஆமா இந்த பஸ்க்கான பேப்பர் இருக்கா”

“இருக்கும்மா”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அதைக் கொடுங்க”

“எதுக்கும்மா”

“இல்லை இந்த பஸ்ல எவ்ளோ பெட்ரோல் பிடிக்கும்னு அதுல இருக்கும், அதுப்படி பெட்ரோல் நிரப்பினா போதும் எக்ஸ்ட்ரா எதுக்கு அதுக்குத்தான் கொடுங்க” என கேட்க அவனும் நொந்துக் கொண்டே அவளிடம் தந்துவிட்டு பஸ்ஸை விட்டு இறங்கி பெட்ரோல் போடும் இடத்திற்கு வந்து நின்று அங்கிருந்த வேலையாளிடம்

”டேங்க் புல் பண்ணுப்பா” என சொல்ல அவனும் சரியென்றான். அந்நேரம் அங்கு பறந்து வந்த மாதவியும்

”இருங்க இருங்க நான் கணக்கு பார்க்கனும், இதப்பாருப்பா இந்த பஸ்சுக்கு இவ்ளோதான் பெட்ரோல் பிடிக்கும்னு இந்த பேப்பர்ல தெளிவா இருக்கு, இதுபடி நிரப்பு அதிகமா நிரப்பி பெட்ரோல் கீழே போனாகூட நான் பணம் தரமாட்டேன், அதே போல குறைவா நிரப்பி டேங்க் புல்ன்னு சொன்னாலும் நான் நம்பமாட்டேன். இப்போதைக்கு பஸ்ல பெட்ரோல் காலிதான், அதனால இந்த பேப்பர்ல இருக்கற மாதிரி பெட்ரோல் ஊத்து, நான் செக் பண்ணுவேன் ஏமாத்த நினைக்காத ஆமா ஓனர் எங்க”

“உள்ள இருக்காருங்க”

“சரி சரி நீ பெட்ரோல் நிரப்பு” என சொல்லிவிட்டு அங்கேயே நிற்க அந்த வேலைக்காரனும் டிரைவரை ஒரு முறை முறைத்துவிட்டு தன் வேலையைச் செய்யலானான். மாதவியும் நெம்பர்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்க அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கணிப்பின் படி சரியாக இல்லையென்றால் என்னாகுமோ என பயந்தார் திருமால், அவர் நினைத்த மாதிரியே பிரச்சனை உருவானது.

டேங்க் புல்லாகாமலே பெட்ரோல் ஊற்றுவதை பணியாள் நிப்பாட்ட அவள் கத்தினாள்

”என்னப்பா இது இன்னும் 10 லிட்டர் ஊத்தனும், இதப்பாரு பேப்பர்ல போட்டிருக்கு பாரு ஊத்து”

“இல்லை மேடம் பஸ்னா இவ்ளோதான் ஊத்தனும், இதுக்கு மேல ஊத்தினா வழிஞ்சிடும் வேஸ்ட்தான்”

“யாரை ஏமாத்த பார்க்கற, நான் முதல்லயே என்ன சொன்னேன், இதுல எவ்ளோ சொல்லியிருக்கோ அவ்ளோதான் ஊத்தனும்னு, நீ லாபம் சம்பாதிக்க இப்படித்தான் வர்ற கஸ்டமர்களை ஏமாத்தறியா” என கத்த அவன் ஓனரை அழைத்து வர ஓடினான்.

திருமாலோ மாதவியிடம் வந்தார்

”என்னமா ஆச்சி, ஏன் சத்தம் போடற”

“பாருங்கப்பா இந்த வண்டிக்கு இவ்ளோதான் பெட்ரோல் போடனும்னு பேப்பர்ல போட்டிருக்கு ஆனா, அவன் 10 லிட்டர் குறைவாவே போட்டு அவ்ளோதான் டேங்க் புல்லாயிடுச்சிங்கறான். இது தப்புத்தானே”

“சரி விடும்மா எவ்ளோ வரைக்கும் பெட்ரோல் போட்டானோ அதுவரைக்கும் பணம் கொடுத்துட்டு போலாம் வாம்மா நேரமாகுது”

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாராஜேந்திரன் 2019-04-15 19:18
அருமையான பதிவு சரவணனின் நிலைமை பாவம்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாViji. P 2019-04-15 18:00
super episode. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாAdharvJo 2019-04-15 16:25
:clap: :clap: nice update sasi ma'am (y) confusion is on :D facepalm Already Vaidhegi waiting...madhavi on hold (indha ponnu anaiku oduradhula busy ya irundhadhu pole irukku ;-) ) and swapna kann vizhithu swarpannam kangiral :Q: Saravana!! Govinda Govinda :dance: esply if u listen to masi arogara thaan :D

Look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாvijayalakshmi 2019-04-15 11:11
nice episode all the best saravanan madhavi ungaludun seravendum.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாதீபக் 2019-04-15 08:48
Super sis story. Really going interestingly :clap: . Eagerly waiting for next part sis (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாmadhumathi9 2019-04-15 08:22
:Q: ippadi oru kuzhappam uruvaaguthey? Enna seivathu? Maadhavikku ean ninaivu illai enna kaaranam sasi? V.v.v.very interesting aaga irukku. :thnkx: 4 this epi. :clap: (y) :GL: sasi.nice epi.egarly waiting 4 next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாராணி 2019-04-15 07:48
மாதவிக்கு இப்படியொரு கஷ்டம் தன் தோழியாலயே வரனுமா இதுல சரவணன் நல்லா மாட்டிக்கிட்டேன் சரவணனால 3 பொண்ணுங்களும் கஷ்டப்படுவாங்க போல மாதவிக்கும் சொப்னாவுக்கும் சரவணனை பிடிச்சிருக்கு சரவணனுக்கு மாதவியைதான் பிடிச்சிருக்கு இதுல சுந்தரி ரொம்ப குழம்பிட்டா அடுத்த ஊர்ல இன்னும் என்னென்ன வேடிக்கை நடக்கப் போகுதோ :grin:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top