(Reading time: 15 - 30 minutes)

நிச்சயமாய் குயில் போன்ற குரலெல்லாம் இல்லை ஆனாலும் சுதா ரகுநாதன் பாம்பே ஜெயஸ்ரீ போன்ற தனித்தன்மையான குரல் அவளுக்கு.அதற்கேற்றாற் போன்ற பாடலையும் தேர்ந்தெடுத்து பாடியது அவள் குரலை இன்னும் அழகாய் மாற்றியிருந்தது.

பாடி முடித்த நொடி அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்த பொதுவாய் புன்னகைத்துவிட்டு ஆத்விக்கிடம் மைக்கை கொடுத்துவிட்டு இறங்கிவிட்டாள்.

அன்றிலிருந்து அவளை தினமும் ஒருமுறையாவது மறைந்திருந்து பார்த்துவிடுவான் ஆத்விக்.அதே நேரம் படிக்கும் வயதில் கண்டதையும் பேசி அவளை தொந்தரவு செய்யவும் அவன் விரும்பவில்லை.

அவன் நன்றாகப் படிப்பவன் தான் இருந்தாலும் எப்படியாயினும் தந்தையின் தொழில் என்ற ஒன்று இருக்கிறது.ஆனால் அவள் நிலைமையும் குடும்ப சூழலும் தெரியாத போது தன்னால் எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்று நினைத்திருந்தான்.

அவளின் மூன்றாவது வருட முடிவில் அவளிடம் பேச வேண்டும் இல்லையெனினும் பெற்றோரிடம் கூறி நேரடியாக பெண் கேட்க வேண்டும் என்ற எண்ணத்திலே இருந்தான்.

அப்படி அவன் அவளை சந்திக்கும் பொழுதுகளில் பார்த்திருக்கிறான் எந்த ஒரு பையனையும் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டாள்.வகுப்பிலும் பெண் தோழிகள் மட்டுமே.இப்படிபட்டவளிடம் பேசி சம்மதம் என்ற ஒன்று நிச்சயம் கிடைக்காது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் அமைதி காத்தான்.

அந்த வருடம் அவன் படிப்பு முடிந்து முதுகலைப் படிப்பிற்காக கல்லூரி மாறியிருந்தான்.அங்குதான் ஜீவிகாவின் நட்பு கிடைத்தது.அனைவரிடமும் இயல்பாய் பேசுபவன் தான் எனினும் நெருங்கிய பெண் தோழி என்று யாரும் இருந்ததில்லை.

ஆனால் ஜீவிகாவின் இயல்பு அவனுக்குப் பிடித்திருந்தது.எந்த ஒரு சூழலிலும் அவனின் பணத்தையோ குடும்பத்தையோ பற்றி பெரிதாய் அவள் கேட்டுக் கொண்டதில்லை.

அவன் பெற்றோரை வெளியே தற்செயலாய் சந்திக்கும் வரையிலுமே அவளுக்கு அவனைப் பற்றி அதிகமாய் எதுவும் தெரியாது.அதுமட்டுமன்றி அவளும் தன் அன்னையும் விரைவிலேயே நட்பாகிவிட அவர்களே அவளை வீட்டுக்கு அழைக்கும் அளவு நட்பு நெருக்கமாகியிருந்தது.

அவளிடம் தான் முதலில் ஷான்யாவைப் பற்றிக் கூறியிருந்தான்.அவளோ அமைதியாய் அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அடுத்தமுறை அவன் அன்னையைப் பார்த்த நேரம் விஷயத்தை போட்டுக் கொடுத்துவிட்டாள்.

“ஆன்ட்டி உங்க பையன் உங்களுக்கு மருமகளை ஏற்கனவே ரெடி பண்ணிட்டானாம் தெரியுமா?”

“குட்டி நிஜமாவா சொல்ற..அப்பாடா நா கூட பொண்ணு பாக்குற பெரிய வேலையை எனக்கு குடுப்பானோனு நினைச்சு ரொம்ப பீல் பண்ணேன்.இப்போ தான் நிம்மதியா இருக்கு.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அட ஆன்ட்டி என்ன இப்படி சொல்லிட்டீங்க நா கூட இந்த படத்துல எல்லாம் வர்ற மாதிரி நா விஷயத்தை சொன்னவுடனே வேகமாக எழுந்து ஆத்விவிவிவினு நீங்க கத்துவீங்க அது இந்த வீடு மொத்தம் ஆத்வி ஆத்வி ஆத்வினு எக்கோ  எல்லாம் அடிக்கும்னு நினைச்சுருந்தேன்.

அப்படினா நான் கண்டதெல்லாம் கனவா..சொல் லதா கனவா!!”

“குட்டியேய் நீ இருக்க பாரு..ஆத்வி எங்களுக்கு ஒரே பையன் அவன் விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சு சந்தோஷபடாம வேற என்ன பண்ண போறோம் சொல்லு.நானாவது பரவால்ல அங்கிள் இன்னும் மோசம்..”

“அடக் கொடுமையே நல்ல பேமிலி போங்க..டேய் ஆத்வி உன் லவ் ஓகே ஆய்டுச்சு இங்க வாயேன்..”,என கீழிருந்தே ஜீவிகா கத்த அடித்துப் பிடித்துக் கொண்டு மாடியிலிருந்து ஓடிவந்தான் ஆத்விக்.

“ம்மா இந்த குட்டிச்சாத்தான் சொல்றத எல்லாம் நம்பாதீங்க..”

“அடப்பாவி முழு பூசணிக்காவயே சோத்துல மறைக்குறியே..”

“நீ வாய மூடு அம்மா கிட்ட என்ன சொன்ன?”

“சொன்னாங்க சோத்துல உப்பில்லனு நம்ம ஷான்யா பத்தி தான்டா சொன்னேன்..”

“ஐயோ மா நம்பாத நா இன்னும் அந்த பொண்ணுகிட்டயே விஷயத்தை சொல்லல..இவ ஏதோ உளர்றா..”

“என்னது பொண்ணுக்கே விஷயம் தெரியாதா நாசமா போச்சு போ..என்னடீ ஜீவி இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் போலயே!”,என்று கூறி முடித்து சிரிக்க ஜீவிகாவோ விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“இங்க என்ன நடக்குது..பையன் லவ் பண்ற விஷயத்தைக் கேட்டு இப்படி காமெடி பண்ற ஒரே குடும்பம் இதுவா தான் இருக்கும்.அப்போ உங்களுக்கு ஓகேங்குறீங்க..நாளேக்கே போய் அவளை பாக்குறேன் லவ்வை சொல்றேன்.”

“டேய் டேய் நானும் வரேன் டா..”

“எதுக்கு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே என் காதலை பெட்ரோல் ஊத்தி கொளுத்தவா?”

“என்னடா இப்படி சொல்லிட்ட நா அப்படியெல்லாம் பண்ணுவேனா?”

“எதோ ப்ளான் பண்ற..ம்ம் எதாவது அங்க வந்து சொதப்பின மகளே கொன்றுவேன்..”

கெஞ்சி கொஞ்சி மிரட்டி ஜீவிகாவை கல்லூரிக்கு அழைத்துச் சென்றிருந்தான்.பழைய மாணவன் என்பதால் அவனை உள்ளே அனுமதிப்பதில் தயக்கமில்லாமல் இருக்க நேராய் இங்க்லீஷ் டிபார்ட்மென்டைநோக்கி நடந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.