(Reading time: 15 - 30 minutes)

“ஏன் ஆத்வீ வீட்டை கட்ட சொன்னா கப்பலை கட்டி வச்சுருக்காங்க..ஏரியா பேரை வச்சே இதை நா எதிர்பார்த்துருக்கனுமோ!”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜீ…அவரு அப்படி பழகுற ஆள் இல்ல..ஜாலியா வா..”,என்றவாறு காரை விட்டு இறங்கும் போதே ரேஷ்வா அவர்களை வாசலில் வந்து வரவேற்றான்.

“ஹாய்..வாங்க வாங்க..வா ஆத்வி..வாங்க ஜீவிகா..தேங்க்ஸ் பார் கமிங்..”

அன்றைக்கு பார்த்தவனா இவன் எனுமளவிற்கு க்ளீன் ஷேவ் செய்து டீஷர்ட் ஜீன்ஸில் ஹீரோ தோரணையோடு இருந்தான்.

அத்தனை பெரிய வீட்டில் அவன் மட்டுமா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை ஜீவிகாவால்.

“என்ன ஜீவிகா என்ன யோசனை?”

“இல்ல அவ்ளோ பெரிய வீட்ல தனியா மஇருந்தா வாழற ஆசை கண்டிப்பா போய்டும் தான்.”,என்றவளை தலையிலேயே தட்டினான் ஆத்விக்.

“வந்தவுடனே ஆரம்பிக்காத உன் வாயை..”

“விடு ஆத்வி அவங்க சொல்றதும் உண்மைதான..”

“ஆமா அதென்ன அவன மட்டும் நீ வா னு சொல்றீங்க என்னை மட்டும் ஏதோ பெரியவங்களை கூப்டுற மாதிரி வாங்க போங்கனு சொல்றீங்க?”

“இனி அப்படி சொல்லல..”

“ம்ம் சரி நாம எதுக்கு இங்க வந்தோம்?”

“என்ன??”

“இல்ல சாப்ட வாங்க வாங்கனு கூப்ட்டு சாப்பாட்டை கண்ணுலயே காட்ட மாட்றீங்களே பசி உயிர் போகுது..”

“சோ சாரி வாங்க வாங்க எல்லாம் ரெடியா தான் இருக்கு.”

“ஏன் ஜீ நீ எப்பவும் ஒரு மணிக்கு மேல தான சாப்டுவ இன்னைக்கு அதுகுள்ள பசிக்குதா?”

“இல்ல டா ஹெவியா சாப்டுற போறோமேனு காலைல இருந்து ஒண்ணுமே சாப்டல அதனால தான்..”

“எப்போ பாத்தாலும் சோறு சோறு..”

“சோறு அதானே எல்லாம் நீ இன்னும் அந்த ஜென் நிலையை அடையல தம்பி..வளரணும்..”

“நல்லா வாய்ல வந்துரும் போய் கொட்டிக்கோ போ..”

இருவருக்குமாய் பரிமாறியவாறே ரேஷ்வாவும் உண்ண ஆரம்பித்தான்.

“உங்களுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்குனு கேள்விபட்டேன்..கங்க்ராட்ஸ்.”

“தேங்க் யூ..ஆனாலும் இப்படி அப்பப்போ யாராவது நியாபகப்படுத்தினா தான் உண்டு..”

“ஏன் என்னாச்சு?”

“என்னாச்சா போன் நம்பர்கூட தரலைங்க..அவருதான் கொடுக்கலைனா இந்த பெருசுங்களுக்காவது அறிவு வேணாம்.ஒண்ணும் வாயே திறக்கல..நம்மாளைப் பத்தி ஒண்ணும் தெரியாது.

அவரை பத்தி தெரிலனானாலும் பரவால்ல பயபுள்ள பார்த்த வரை அமைதியாதான் இருந்தது.ஆனா என்னைப் பத்தி எதுவுமே தெரியாம வந்து சிக்க போறாரேனு நினைச்சாதான்..ப்ப்ச்ச்..கடவுளுக்கு இரக்கமே இல்ல..என்னடா ஆத்வி..”,என்று சீரியசாய் கூற ரேஷ்வாவோ அடக்க மாட்டாமல் சத்தமாகவே சிரித்துவிட்டான்.ஆத்விகுமே சிரித்துக் கொண்டு தான் இருந்தான் ஆனாலும் ரேஷ்வாவை அப்படி பார்ப்பதற்கு நிறைவாய் இருந்தது.

“நீ வேற லெவல் ஜீவிகா..என் லைஃப்ல நா இப்படி சிரிச்சு பல வருஷம் ஆச்சு..”

“அடப்பாவிகளா என் கல்யாணம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா?சரிதான்..ஆமா நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?”

“ம்ம் அப்படி ஒரு ஃபீல் யார் மேலேயும் வரல”

“பார்ரா என்னா என்னா பீலீங்கு…காலாகாலத்துல கல்யாணம் பண்ணி பொண்டாட்டி புள்ள குட்டினு செட் ஆகாம இந்த பக்கியோட சுத்திட்டு இருக்கீங்களே!”

“என்ன ஏன் டீ இழுக்குற?”

“ஆமா இவரு வயசு பொண்ணு கையை பிடிச்சு இழுத்தாங்க..நீங்க சொல்லுங்க ரேஷ்?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“கல்யாணத்தை பத்தியெல்லாம் யோசிச்சது இல்ல..எனக்கு ட்ரீம் அக்டிங்ல பெரிய இடத்துக்கு வரணும்..நிறைய படம் பண்ணணும்..சம்பாதிக்கணும்னு சொல்றத விட என்னோட ப்ஷேன் ஆக்டிங் அதுல பெஸ்டா வரணும்..

ஆனா இப்போ எல்லாம் அதுவும் டல்லா தான் போகுது..மைண்ட் மொத்தம் தேவையில்லாத எண்ணங்கள் தான் நிறைய இருக்கு.”

“ம்ம் உங்களுக்கே தெரியுதுல தேவையில்லாததுனு அப்பறம் ஏன் மைண்டை குப்பைத் தொட்டியா வச்சுருக்கீங்க?எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு கேரியர் பத்தி யோசிங்க.

அண்ட் நம்மளோட சந்தோஷமோ துக்கமோ அதுக்கு நாம தான் எப்பவும் காரணமா இருக்கனும்.மத்தவங்க கையில நம்ம சந்தோஷத்தை கொடுத்தோம்னா வாழ்க்கை நரகமாய்டும் ரேஷ்..

உங்களை நீங்களே ஹேப்பியா வச்சுக்கோங்க..எது என்னவானாலும் லைஃப் ஹஸ் டு மூவ் ஆன் இல்லையா..சோ எப்பவுமே ஒண்ணு மைண்ட்ல வச்சுகோங்க கோ வித் அ ஃப்லோ..அவ்வளவு தான் சிம்பிள்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.