(Reading time: 17 - 33 minutes)

“இங்க பாரு ஜீவி படிக்குறது சம்பாதிக்குறதுக்கு தான்.அவருக்கு அதுல எந்த குறைச்சலும் இல்லையே அப்பறம் என்ன பிரச்சனை.வீட்ல ஒருத்தர் நல்லா படிச்சுருந்தா போதாதா?நல்ல பையன் அதைவிட வீட்டுக்கு ஒரே பையன்..அதனால இதெல்லாம் குறையா சொல்லி தட்டிக் கழிக்க வேண்டிய அவசியமில்லனு தோணுது”

“கல்யாணமாவது நா பண்ணிக்க போறேனா இல்ல நீயா?”

“ஜீவிகா!!!”

(ஐயையோ உணர்ச்சிவசப்பட்டு மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டனே!!சோத்துல விசம் வச்சுருவாங்களே...)

“பின்ன என்னம்மா எல்லாமே நீயே பேசி முடிவு பண்ணிட்டு எனக்கு வெறும் இன்பர்மேஷன் குடுக்குற.நா ஒரு காலேஜ் லெக்ச்சரர் என் வாழ்க்கையை டிசைட் பண்ற உரிமை கூட எனக்கு இல்லனு நினைச்சா எவ்ளோ கஷ்டமா இருக்குனு உனக்கு புரியாது மா.

இப்பவும் உன்னை எதிர்த்து நா எதுவும் பண்ண போறதில்ல.கல்யாணத்தை பத்தி எனக்கு பெருசா எந்த ஐடியாவும் இதுவரை இருந்ததில்ல அதனால நீ சொல்ற இவரை கல்யாணம் பண்ணிக்குறேன்.

ஆனா நீ பண்றது பெரிய தப்பு மா..உனக்காக மட்டும் தான் நா கல்யாணம் பண்றத தள்ளிப் போட்டேன்.உனக்கே அது பாறமா இருக்கும் போது நா என்ன பண்றது.ஒரே நல்லது சென்னைல இருக்குற பையனாவே பாத்தியே அதுவரை சந்தோஷம்.என்ன பண்ணணும்னு சொல்லு பண்றேன் அவ்வளவு தான்.”,என்றவள் ஹாலில் சென்று அனைவரையும் பார்த்து புன்னகைத்தவாறு அமர்ந்து கொண்டாள்.

அன்று இரவு ஆத்விக்கிற்கு விஷயத்தை மெசெஜ் அனுப்பிவிட்டு மொபைலை அணைத்து வைத்துவிட்டு உறங்கி விட்டாள்.மறுநாள் காலை அவளை சந்திப்பதற்காக கல்லூரிக்கே வந்துவிட்டான் ஆத்விக்.இருவருமாய் கேன்டீனில் சென்று அமர ஆத்விக் இருவருக்குமாய் டிபன் வாங்கி வந்தான்.

“ஏன்டி லூசா நீ?”

“நல்லா கேளுங்க எசமான் கேளுங்க..”

“அடிச்சு பல்லை கழட்டிருவேன்.இது ஒண்ணும் விளையாட்டு காரியம் இல்ல ஜீ..”

“டேய் எனக்கும் தெரியும் ஆனா என்ன பண்ண சொல்ற அம்மா பேசுறதுலயே தெரியுது அவங்க முடிவு எடுத்துட்டாங்கனு..”

“முடிவெடுத்தா.. வாழப் போறது நீ தான் டி..”

“கரெக்ட் தான்..உனக்குத் தெரியுது..”

“ப்ச்ச்ச்”

“சரி டென்ஷன் ஆகாத..பயபுள்ள என்கிட்ட சிக்கணும்னு விதி இருந்தா அதை யாரால மாத்த முடியும் சொல்லு..”

அவள் பேச்சில் இன்னும் கடுப்பானவனாய் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“ஆத்வி கண்ணா நிஜமாவே எனக்கு இதுல வருத்தம்னு பெருசா எதுவும் இல்ல.ஒரு சாதாரண நடுத்தர குடும்ப பொண்ணுங்க எல்லாருக்குமே கல்யாணம்ங்கிறது இப்படி தான் நடக்கும்.பிடிச்சுருக்கா பிடிக்கலையானு கேட்டு பொறுமையா யாரும் பண்ண மாட்டாங்க.

சாதாரணமாவே அப்படி தான்னு சொல்லும் போது..தி க்ரேட் மஞ்சுளா ஜி என்ன பண்ணுவாங்க சொல்லு.ஒரு வேளை அவங்களே என்கிட்ட கேட்கணும்னு நினைச்சுருந்தாலும் சொந்தகாரன்னு ஒருநாலு பேர் ஓசி அட்வைஸ் பண்ண இருப்பானே என்ன சொல்லிருப்பான்.

இதென்ன புது பழக்கம் பொண்ணுகிட்ட விருப்பம் கேட்குறது.நாம பாத்து யாருக்கு கழுத்தை நீட்ட சொல்றோமோ நீட்ட வேண்டாமா?

இல்ல உன் பேச்சுக்கு மதிப்பு குடுக்காத மாதிரி தான் பொண்ணை வளர்த்து வச்சுருக்கியானு நல்ல ஏழெட்டு பிட்டை நச்சுனு போட்டு அவங்களை மொத்தமா கன்ப்யூஸ் பண்ணி விட்டுருப்பாங்க.

பாவம் டா அம்மா வாழ்க்கைல நிறைய கஷ்டப்பட்டுடாங்க என்னாலயும் கஷ்டம் வேண்டாமேனு பாக்குறேன்.அவங்களுக்கு இதான் சந்தோஷம்னா அதுக்காக இந்த கல்யாணம் பண்றதுல தப்பில்ல தான டா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அதுமட்டுமில்லாம பையன் சூப்பர் மார்கெட் ஓனரம்..மாசமாசம் வீட்டுக்கு மளிகை சமான் வாங்குற வேலை மிச்சம் அவனே தேவையானதை எல்லாம் வாங்கி வச்சுருவான்ல எப்பூடிடிடி”,என்று கண்ணடித்தவளைப் பார்த்தவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

அதை மறைக்காமல் சிரித்தவாறே அவள் பின்னந்தலையில் தட்டினான்.

“உன்னை கட்டிகிட்டு அந்த மனுசன் என்ன பாடு படப் போறானோ..பாவம் தான்…சரி எப்போ கல்யாணம் டேட் எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டாங்களா?”

“இல்ல டா பாத்துட்டு இருக்காங்க..எப்படியும் இந்த செமஸ்டர் லீவ்ல வைப்பாங்கனு நினைக்குறேன்.நாலு மாசம் டைம் இருக்குல.நல்ல வேளை வேலைக்கெல்லாம் போகக் கூடாதுனு சொல்லல அதுக்காகவே அந்த ஜீவனுக்கு வாழ்க்கை கொடுக்குற முடிவுக்கு வந்துருக்கேன்.”

“ம்ம் எதுக்கும் டீயெல்ஸ் எல்லாம் குடு ஒரு தடவை பையனைப் பத்தி விசாரிச்சுருவோம்..நீ சந்தோஷமா இருந்தா போதும் ஜீ..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.