(Reading time: 17 - 33 minutes)

தேவையில்லாத பேச்சோ பார்வையா சீண்டலோ எதுவும் இல்ல.இரண்டு நாள்ல காலேஜ் ஃபுல்லா விஷயம் கொஞ்சம் பரவ ஆரம்பிச்சுது.மேனேஜ்மென்டும் ஸ்டண்ட்ஸை எதிர்க்க வேண்டாம்னு முடிவு பண்ணி அவரை சஸ்பெண்ட் பண்ணாங்க.

அந்த ஸ்ட்ரைக் முடிஞ்ச அன்னைக்கு நாங்க வெளியே வந்தப்போ சில லேடி ஸ்டாப்ஸ் எங்ககிட்ட வந்து கேட்டாங்க,

“வர வர பொம்பள பிள்ளைங்களுக்கு தைரியம் கூடிப் போச்சு இப்படியா எட்டு மணிநேரம் பூட்டின க்ளாஸ்ல இத்தனை பசங்களோட இருப்பீங்கனு கேட்டாங்க.”

அப்போ என் ப்ரெண்ட் என் கையை பிடிச்சு இழுத்து அவன் பக்கத்துல நிறுத்தி தோளை அழுத்திப் பிடிச்சு சொன்னான்,

“எங்க அம்மாவோ அக்காவோ தங்கையோ எங்க கூட இப்படி இருக்குறது பயப்படுவாங்களா மேம் அதுக்கு அவங்களுக்கு எந்தவித தனி தைரியமும் தேவையில்லைல.அப்படிதான் இவங்களும் எங்களுக்கு.அவங்களை பத்திரமா பாத்துக்க வேண்டிய பொறுப்பு எங்களோடதுனு”,சொன்னான்.கேட்ட மேம்க்கு முகத்துல ஈயாடல.

அந்த நேரம் அந்த வழியா வந்த நம்ம ஹெச் ஓடி அதை ஒரு மாதிரியான சிரிப்போட பாத்துட்டு போனார்.அப்பறம் எங்களைத் தனியா கூப்டு நிறையவே பேசினார்.அவருக்கு அவ்ளோ சந்தோஷம்.

இதெல்லாம் இப்போ உங்ககிட்ட ஏன் சொல்றேன்னா எப்பவுமே பொண்ணுங்களை கிண்டல் பண்றது மீம் போடுறதுனு பசங்க நிறைய பண்ணாலும் அவங்க அவங்க கூடப் படிக்குற பொண்ணுங்களையாவது விட்டுக் கொடுக்காம இருங்க.இந்த ஒரு பழக்கமே பொண்ணுங்களை எப்பவும் மதிக்க வைக்கும். “

அவள் முடிப்பதற்கும் கல்லூரி மணி அடிப்பதற்கும் சரியாய் இருக்க அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றாள்.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்க ஒருநாள் மாலை கல்லூரி முடிந்து ஜீவிகா வீட்டிற்கு வந்தபோது வாசலில் நிறைய செருப்புகள் இருப்பதைக் கண்டு குழம்பினாள்.

“என்னடா இது நம்ம வீட்ல இத்தனை பேர் வர்றதுக்கு வாய்ப்பில்லையே..சொந்தகாரன்னு எவனாவது வந்து டேரா போட்டானா அப்போ எனக்கு ஆப்பு அடிக்காம போக மாட்டானுங்களே..ஜீவி இவ்ளோ சின்ன வயசுல உனக்கு இத்தனை சோதனையா..ம்ம் சமாளிப்போம்..”,என்றவாறே உள்ளே செல்ல அங்கு அமர்ந்திருந்தவர்கள் யாரையுமே அவளுக்குத் தெரியவில்லை.

இருந்தும் அசட்டு சிரிப்பை உதிர்த்வளாய் தன் தாயின் அருகில் சென்று நின்றுகொண்டாள்.

“இன்னைக்கு முக்கியமான ஸ்டாப் மீட்டீங் இருந்ததுனால தான் அவளால லீவ் போட முடில..”

“அதனால என்னங்க பரவால்ல..இப்படி இயல்பா பாக்குறது தான் நல்லாவும் இருக்கு வாழ்க்கை பூரா அவங்க என்ன மேக்கப் போட்டுட்டா இருக்க போறாங்க”

“என்னது மேக்கப் வாழ்க்கை பூராவா???!இந்தம்மா சொல்ற எல்லாமே நான் சிங்க்ல போகுதே..மைடியர் மஞ்சு எனக்கு எதோ ப்ளான் போடுருச்சு போலயே!!!”

“என்னம்மா திடீர்னு வந்ததுல டென்ஷன் ஆயிட்டியா?நாங்க இன்னைக்கு முடிலனா பரவால்லனு தான் சொன்னோம் அம்மா தான் பரவால்லனு சொன்னாங்க அதான் வந்துட்டோம்.”

“நீங்க பேசிட்டு இருங்க இதோ ரெண்டு நிமிஷத்துல வரேன்..”,என்றவர் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

“என்னம்மா நடக்குது இங்க?”

“பார்த்தா தெரிலயா பொண்ணு பார்க்க வந்துருக்காங்க”

“அது தெரியுது ஆனா இப்படி அவசரமா நடக்குற அளவு இப்போ என்ன நடந்து போச்சு?”

“இது அவசரம் இல்ல அவசியம்..போய் முகத்தை கழுவிட்டு வந்து அங்க உக்காரு..”

“ம்மா !!!”

“இங்க பாரு ஜீவி இது என்னோட மிகப் பெரிய பொறுப்பு இதை முடிச்சாதான் எனக்கும் நிம்மதி.இதெல்லாம் உனக்கும் தெரியும்.இருந்தும் பிடிவாதம் பிடிக்குறனா யரையாவது விரும்புறியா?”

“ஐயோ ம்மா என்ன தான் ஆச்சு உனக்கு?”

“நீ பண்றதெல்லாம் அப்படி தான் இருக்கு அதனால தான் இதெல்லாம் கேக்குறேன்.”

“இப்போ என்ன வந்து உக்காரனும் அவ்ளோ தான வா”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அதுக்கு முன்னாடி சொல்ல வேண்டியதை சொல்லிட்றேன்.பையன் பேரு ஜெயந்த்.சொந்த ஊர் மதுரை..ஆனா இங்க வந்து செட்டில் ஆகி நாப்பது வருஷம் ஆச்சாம்.வீட்டுக்கு ஒரே பையன்.இங்க சைதாப்பேட்டைல தான் பெரிய சூப்பர் மார்க்கெட் வச்சு நடத்துறார்.

நல்ல சம்பாத்யம் எந்த கெட்ட பழக்கமும் இல்ல.ஆனா உன் படிப்பை பத்தி தான் யோசிக்குறாராம்.”

“படிப்பா ஏன் அவரு என்ன படிச்சுருக்கார்?”

“கரஸ்பான்டன்ஸ்ல டிகிரி முடிச்சுருக்கார்.”

“!!!!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.