(Reading time: 17 - 33 minutes)

“அடங்க மாட்றாளே!ம்மா மொதல்ல சாப்பாட்டை போட்டு இவ வாயை அடை இல்லனா பேசியே கொன்று வா”

நால்வருமாய் அமர்ந்து உணவை சாப்பிட ஆரம்பிக்க ஜீவிகா வழக்கம் போல் சலசலத்துக் கொண்டிருந்தாள்.

“குட்டியேய் உன்னை பொண்ணு பாக்க வரப் போறதா ஆத்வி சொன்னான் என்னாச்சு?”

“ஜஸ்ட் மிஸ்ல க்ரேட் எஸ்கேப் ஆன்ட்டி..”

“யாரு நீயா??”

“ச்சச்ச அந்த பையனை சொன்னேன்..”

“அதான பாத்தேன்.ஆமா இவ்ளோ பேசுறீயே அம்மா முன்னாடி மட்டும் அப்படி பம்முற..இப்போ கூட அம்மாக்கு தெரியாம தான வந்த?”

“ஆமாடா ரொம்ப கடுப்பாதான் இருக்கு ஆனாலும் சொன்னா மட்டும் அவங்க போய்ட்டு வானு சொல்லுவாங்களா கண்டிப்பா மாட்டாங்க.கல்யாணம் ஆகாத பொண்ணு அது இதுனு ஆரம்பிச்சுருவாங்க..

பாவம் லைப்ல நிறைய கஷ்டப்பட்டுடாங்க நானும் டென்ஷன் குடுக்க வேண்டாமேனுதான் சொல்றதில்ல.ப்யூசர்ல என்னை கட்டிக்க போறவனாவது எங்க அம்மா மாதிரி இல்லாம இருந்தா நா தப்பிச்சேன்.இல்ல ஜீவி உன் நிலைமை ரொம்ப பாவம் டீ.”,என்றவாறு மேலே பார்த்து கடவுளை வேண்டுவதைப் போல் செய்கை செய்தாள்.

“என் செல்ல பிள்ளை டா நீ..அம்மாவுக்கு தனியா இருக்கோம்ங்கிற பயம் ஒவ்வொரு விஷயத்துலயும் ரொம்ப பாதுகாப்பா இருக்கணும்னு நினைக்குறாங்க..அவங்களை சொல்லி தப்பில்ல.ஆனா அதேநேரம் நீயும் அவங்களை புரிஞ்சு நடந்துக்குற பாரு..

எப்பவுமே ஒரு அளவுக்கு மேலே அடக்கி வளர்க்கப் படுற குழந்தைங்க மூர்க்கமாவும் தவறான பாதையிலேயும் போறதுக்கான வாய்ப்பு தான் அதிகம்.ஆனா நீ சின்ன வயசுலயே அத்தனை பக்குவமா இருக்கியே இந்த மனசுக்கே நீ எப்பவும் நல்லா இருப்ப டா குட்டி..”

“தேங்க்ஸ் அங்கிள்..ஆனாலும் சீன் ரொம்ப லென்தா போகுது..இதுக்கு மேல முடியாது நா அழுதுருவேன்..”

“வந்த பிள்ளையை சாப்பிட விடாம தொணதொணனு நீ சாப்பிடு டா குட்டி..”

அன்றைய பொழுது முழுவதும் அங்கு அமர்ந்து கதை பேசிவிட்டு மாலைப் பொழுதில் கிளம்பிச் சென்றாள்.

அடுத்த வாரத்தின் முதல் வகுப்பே மாணவர்கள் அனைவரும் தூங்கி விழாத குறையாய் அமர்ந்திருக்க இரண்டு நொடி பாடத்தை ஆரம்பித்தவளுக்கே தூக்கம் வந்துவிடும் போல் இருக்க புத்தக்கத்தை மூடி டேபிளில் வைத்தவாறு அனைவரைம் பார்வையிட்டாள்.

“வாரத்துல முதல் நாள் முதல் க்ளாஸ் ஏன்டா இப்படி பங்கமா மானத்தை வாங்குறீங்க..அவ்ளோ மொக்கையாவா எடுக்குறேன்.”

“மேம் க்ளாஸ் கவனிக்குற மூட்டே இல்ல மேம்..”

“வாடி என் ராசாத்தி..இப்படி சொல்லியே என் எல்லா க்ளாஸையும் பங்க் பண்ணிணா எக்ஸாம் முடிஞ்சு வீட்ல சமைச்சு சாப்பிட பெரிய முட்டையா எடுத்துட்டு போக வேண்டியது தான்.”

“சரி எல்லாரும் க்ளாஸை ஒழுங்கா கவனிச்சா கடைசி பதினஞ்சு நிமிஷம் ப்ரீயா விடுறேன்.டீலுக்கு ஓகே னா இருங்க இல்லனா எழுந்து வெளியே போய்டுங்க பார்க்கலாம்.”

அவள் கூறிய கடைசி பதினைந்து நிமிடங்களுக்காக ஒட்டு மொத்த வகுப்பறையும் வெகு சிரத்தையாய் பாடத்தை கவனிக்க ஆரம்பித்தனர்.கூறியபடியே சரியான நேரத்திற்கு புத்தகத்தை மூடிவிட்டு அமர்ந்தாள்.

“சரி இன்ட்ரஸ்டிங்காக எதாவது டாப்பிக் பேசலாம்..சரி இந்த காலேஜ் லைப் பத்தி சொல்லுங்க கேட்போம்.”

ஒவ்வொருவராய் தங்களுக்குத் தோன்றியதை கூறி முடிக்க ஒரு மாணவன் ஜீவிகாவிடம்,”மேம் உங்க பேட்ஜ் பத்தி சொல்லுங்களேன்.”

“ம்ம் எங்களோடது ஒரு பாமிலினு தான் சொல்லனும்.பசங்க பொண்ணுங்க வித்தியாசம் இல்லமா ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்ளோ அன்பா பழகினோம்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஒருத்தருக்குப் பிரச்னை னா மொத்த க்ளாஸும் பின்னாடி நிப்பாங்க..ஒரு தடவை இன்னொரு டிப்பார்ட்மெண்ட் ப்ரொபசர் ஒருத்தர் எங்க க்ளாஸ் பொண்ணுகிட்ட ரொம்ப ரூடா பிகேவ் பண்ணிட்டார் எதோ ஒரு விஷயத்துக்காக.

பசங்க முன்னாடி ரொம்ப அவமானம் ஆய்டுச்சுனு பீல் பண்ண அந்த பொண்ணு சூசைட் அட்டெம்ட் பண்ணிட்டா..சோ எங்க பசங்க எல்லாம் ஸ்ட்ரைக்ல இறங்கிடாங்க.அதுல க்ளர்ஸ் நாங்க ஒரு பத்து பேர் இருந்துருப்போம்னு நினைக்குறேன்.

மூணு நாள் க்ளாஸ் குள்ளேயே போராட்டம் பண்ணோம் எந்த ப்ரோபசரையும் க்ளாஸ்குள்ள வரவிடல.அந்த ப்ரொபசர் மேல ஆக்க்ஷன் எடுக்க மேனேஜ்மென்ட்ல தயங்கினாங்க..

அந்த மூணு நாளும் எப்பவும் போல க்ளாஸுக்கு வருவோம் எல்லாரும் வந்தவுடனே கதவை லாக் பண்ணிடுவோம்.அமைதியா இருப்போம்.ஹாஸ்ட்டல் பாய்ஸ்க்கும் சேர்த்து டேஸ்காலர்ஸ் கொண்டு வர சாப்பாட்டை ஷேர் பண்ணி சாப்பிடுவோம்.

அந்த மூணு நாள்ல தான் ஆண்கள் மேல ஒரு மாதிரியான மரியாதை வந்துச்சுனு சொல்லுவேன்.அத்தனை பசங்களும் ஒரு பொண்ணை கூட தப்பான நோக்கத்தோட ஒரு சின்ன பார்வை கூட பார்க்கல.எங்களோட கஷ்டங்களும் புரிஞ்சு அவ்ளோ செக்யூர்டா பாத்துகிட்டாங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.