(Reading time: 15 - 30 minutes)

ஆனால் வகுப்பை விட்டு வெளியே வந்தவளின் முக பாவமோ அப்படியே மாறியிருந்தது.பொறுப்பான ஆசிரியராய் எதிர்படும் மாணவர்களின் வணக்கங்களை ஏற்றவாறு ஸ்டாஃப் ரூமிற்குள் நுழைந்தநேரம் எச்அ ஓடி அவளின் எதிர் நின்றார்.

என்ன ஜீவிகா முதல் நாளே ஆரம்பிச்சாச்சா?”

ஹா ஹா பாவம் சார் பைனல் இயர் கொஞ்சம் என்ஜாய் பண்ணிக்கட்டும்

ம்ம் இவங்களுக்கு பாவம் பாத்தா உன் நிலைமை பாவம் ஆய்டும்..உங்க பேட்ஞ்ச்ல எனக்கு ஆனமாதிரி”,என்று கூறி சிரித்தார்.

ஐயோ சார் இன்னும் நீங்க அதெல்லாம் மறக்கலையா..”

மறக்குற பேட்ச்சா நீங்க எல்லாம்.ஆமா உன் ப்ரெண்ட் ஆத்விக் எப்படி இருக்கான்.”

நல்லா இருக்கான் ஸார் நா இங்க ஜாயின் பண்றேன்னு சொன்னவுடனேயே உங்களைப் பத்தி தான் விசரிச்சான்.”

ம்ம் அவன் என்ன விசாரிச்சுருப்பான்னு எனக்கு தெரியும்.சரிம்மா க்ளாஸ்க்கு டைம்ஆச்சு வரேன்”,என்றவர் நகர அவள் தன்னிருக்கையில் அமர்ந்தாள்.

சரியாய் அந்த நேரம் அவளின் அன்னை அவளை அழைத்திருந்தார்.

சொல்லும்மா நா தான் சொன்னேன்ல லஞ்ச் டைம்ல கூப்டுறேன்னு

ஒண்ணுமில்ல ஈவ்னிங் உன்னை பொண்ணு பார்க்க வராங்க அதான் சீக்கிரம் வர முடியுமானு கேட்கலாம்னு பண்ணிணேன்.”

ம்மா ஏன்மா இப்படி பண்ற முதல் நாள் இப்போதான் வேலைக்கு சேர்ந்திருக்கேன் அதுகுள்ள ஆரம்பிச்சுட்டியா..இதனால தான் என் ஐடி வேலையையே விட்டேன்.இப்பவும் இப்படி பண்ணிணா.ப்ச்ச்

ஆமாம் டீ உனக்கு என்ன எல்லாம் பேசுவ.நல்லாயிருந்த உங்கப்பா நம்மளை விட்டுட்டு போவார்னு எதிர்பார்த்தோமா அப்படி எனக்கும் எதுவும் ஆகுறதுக்குள்ள உனக்கு ஒரு நல்லது பண்ணணும்னு நினைச்சா நீ என்னையே குறை சொல்லு”,என்றவர் அவள் பதில் கூறும் முன் அழைப்பை துண்டித்திருந்தார்.

ஜீவிகாவோ தலையை இறுகப் பற்றியவாறு அமர்ந்துவிட்டாள்.ஜீவிகா 25 வயது கணிணி அறிவியலின் முதுகலை பட்டதாரி.நடுத்தர குடும்பம் அவளுடையது.அவளின் பதினாறு வயதில் அவளது தந்தை சட்டென ஏற்பட்ட மாரடைப்பால் அவர்களைப் பிரிந்துவிட்டார்.

எதிர்பாராத இந்த இழப்பு அவளுக்கும் அன்னைக்கும் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருந்தது.அதுவும் ஒற்றை மகளான அவளை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற கவலையே அவளது அன்னையை பெரிதாய் மிரட்டியது.

அவளின் தந்தை அரசுப் பணியில் இருந்ததால் தெரிந்தவர்களை வைத்து வாரிசு வேலையை அவள் அன்னைப் பெற்றிருந்தார்.சிக்கனமானவர் ஆனதால் ஓரளவு பிரச்சனை இல்லாமல் வாழ்க்கை நகர ஆரம்பித்தது.

ஆனால் சிங்கிள் பேரண்டிங் என்ற ஒரு விஷயம் அவரை வெகுவாய் பாதித்தது.மகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜீவிகா இடத்தில் அவர் சற்று கடுமையாகவே நடந்து கொண்டார்.

சர்வாதிகாரம் என்றெல்லாம் கூறிவிட முடியாது தான் இருந்தாலும் மனதில் நினைப்பதையெல்லாம் ஜீவிகாவால் அவரிடம் பேசிவிட முடியாது.தொலைக் காட்சியில் எதாவது காமெடி பார்த்து சத்தமாக சிரித்தாளானால் பொம்பள பிள்ளையா அடக்க ஒடுக்கமா இல்லாம இதென்ன இப்படி சிரிக்குற ஜீவி என்ற அவரின் பேச்சு அந்த சிரிப்பை இருந்த இடம் தெரியாமல் நிறுத்தியிருக்கும்.

பதினாறு வயது என்பது இரண்டும் கெட்டான் வயது தானே அவரின் பேச்சுகளை நல்ல விதத்தில் எடுத்துக் கொள்ளும் பக்குவம் அத்தனை எளிதில் அவளுக்கு வந்திருகக்கவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பல நேரங்களில் இரவில் தனிமையில் அழுவாள்.தந்தையை நினைத்து ஆதரவு தேடி பரிதவித்துப் போவாள்.பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சை முடிந்த பின்பு அந்த விடுமுறையில் கம்பூயூட்டர் கோர்ஸ் சேருவதாய் கூறி  தன் கவனத்தை அதில் செலுத்த ஆரம்பித்தாள்.

அங்கு அவள் பேட்சில் ஒரு ஆறேழு பேர் தான் இருந்தனர்.இவளும் இன்னொரு பெண்ணும் தவிர மற்றவர்கள் ஆண்பிள்ளைகள்.முதலில் தன் அன்னையை கருத்தில் கொண்டு யாரிடமும் அவ்வளவாய் ஒட்டாமலேயே இருந்தாள்.

ஆனால் அவள் கூறும் சிறு சிறு விஷயங்கள் கூட நகைச்சுவையாய் இருப்பதை வைத்து அனைவரும் அவர்களாகவே அவளிடம் பேச ஆரம்பித்தனர்.ஓரளவு அனைவர் மீதும் ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக ஒருகட்டத்தில் அவளும் தன் கூட்டை விட்டு வெளிவரத் தொடங்கியிருந்தாள்.

ஆனால் அனைத்தும் அந்த நண்பர்களிடம் மட்டுமே வகுப்பை முடித்து வெளியில் வந்தால் அப்படியே மாறிப் போவாள்.அதை எப்போதுமே தனக்கான பலமாய் எண்ணுவாள்.எந்த சூழலிலும் தன்னால் பழகிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை பெற்றிருந்தாள்.

அதன் பின் இளங்கலை படிப்பு பெண்கள் பிரிவு கல்லூரியிலேயே.அதுவும் அவளின் மதிப்பெண்களுக்கு இன்ஜினியரிங்கே அரசு கோட்டாவில் இடம் கிடைத்திருக்கும் ஆனால் இந்த சொந்தகார தெய்வங்களின் தேவையற்ற போதனைகள் அவள் அன்னை மஞ்சுளாவை மேலும் நன்றாக குழப்பிவிட்டிருக்க அவள் கேட்ட அனைத்திற்கும் பெரிய நோ சொல்லி தன் தோழி ஒருத்தியின் மூலம் பி எஸ் ஸி கம்பூயூட்டர் சயின்ஸ் சேர்த்துவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.