(Reading time: 15 - 30 minutes)

இன்ட்ரொடக்ஷன் னா பேர் மட்டும் கிடையாது உங்க ஹாபி,எய்ம் இதெல்லாமும் கூட சொல்லலாம்.இப்படி மொக்க வாங்கினீங்கனா எப்படி கேம்பஸ் ல செலெக்ட் ஆவீங்க.

வருஷத்தோட முதல் நாள் முதல் க்ளாஸ் இப்படி ஆக்குறீங்களே.அதுவும் போக எனக்கு லெக்ச்சரரா இதுதான் முதல் க்ளாஸே..”

ஹே அப்போ நாங்க உங்களை ரேகிங் பண்ணலாமா?”,நடு பென்ஞ்சில் இருந்து குரல் மட்டும் வர சற்றே எட்டிப் பார்த்து,

டேய் கருப்பு சட்டை நீதான??எங்ககிட்டையே வா நான் இந்த காலேஜ் ஓல்ட் ஸ்டூடண்ட் டா..ரொம்பத் தெளிவு தெரிஞ்சுக்கோ

மேம் நீங்க சான்ஸே இல்ல போங்க..செம டைமிங்ல இருக்கீங்களே உங்களை எப்படி இங்க வேலைக்கு சேர்த்தாங்க?”

உனக்கு ஏன்மா இந்த உயர்ந்த உள்ளம்.நானே ஏழெட்டு பிட்டை நச்சுனு நங்கூரம் மாதிரி போட்டு கெஞ்சிகூத்தாடி உள்ளே வந்துருக்கேன்.உனக்கு அது பொறுக்கலையா?”

மேம் அவ நினைச்சதையே தான் நானும் நினைச்சேன் இப்போவே இப்படி னா காலேஜ் டேஸ்ல பயங்கர ரவுடி பேபியா இருந்துருப்பீங்களே அது தெரிஞ்சும் எப்படி சேர்த்தாங்க.ஏன் கேக்குறேன் னா இங்க வேலை பாக்குற எல்லாருமே ட்ரெஸ் அயர்ன் பண்ணும் போது போட வேண்டிய கஞ்சியை ரெண்டு பேக் அவங்களுக்கும் போட்டுட்டு வந்தமாதிரி விரைப்பாவே தான் இருப்பாங்க.அதான் சேற்றில் முளைத்த செந்தாமரையாய் நீங்க எப்படி??”

அம்மா தாய்குலமே தமிழ் உவமை எல்லாம் நல்லாதான் இருக்கு நீ இப்போ சொன்னதெல்லாம் நம்ம காலேஜ் வாசல் சுவத்துல பதிச்சு வச்சுட்டு பக்கத்துலயே பத்திரமா உக்காந்துக்கோ என் பெருமையெல்லாம் பல தலைமுறைகள் தெரிஞ்சுகட்டும்.

இருந்தாலும் இந்த தேவையில்லாத புகழ்ச்சியெல்லாம் எனக்கு பிடிக்காத ஒரே காரணத்துனால அதாவது பேஸிக்கலி ஐ அம் ஷை யூ நோ சோ நமக்குள்ளேயே அடக்கி வாசிக்கலாம் சரிதானா?”

மேம் நீங்க வேற லெவல் மேம்

ஹேய் மூஞ்சிக்கு முன்னாடி புகழாத எனக்கு பிடிக்காது….”

மேம் கண்டிப்பா நீங்க லாஸ்ட் பென்ஞ்ச் ஸ்டண்ட் தான?”

ஆமா ஏன்?”

பின்ன இந்த பர்ஸ்ட் ரேங்க் வாங்குற கூட்டத்துக்கெல்லாம் சிரிப்புனா எந்த கடையில் விக்குதுனு கேப்பாங்க மேம்

என்னை என்ன பெயில் ஆகுற கேஸ்னு முடிவே பண்ணிட்டியா?நா காலேஜ் டாப்பர் கோல்ட் மெடலிஸ்ட் ஆக்கும்.”

அதைக் கேட்டவர்கள் அத்தனை பேர் முகத்திலும் ஈயாடவில்லை.ஒருவரை ஒருவர் திருதிருவென பார்த்திருக்க அவளே மௌனத்தை கலைத்தாள்.

லிசன் படிப்புக்கும் என்டர்டெயின்மெண்ட்க்கும் சம்மந்தமே கிடையாது.இந்த காலேஜ் லைப் தான் உங்க வாழ்க்கையோட அதிகபட்ச சந்தோஷம்.அதோட ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவிச்சு என்ஜாய் பண்ணணும்.அதே நேரம் சொல்லித் தர பாடத்தை கொஞ்சம் கவனிச்சு காதுல வாங்கிகனும்.

அவ்ளோ தான் பெஸ்ட் டேஸ் ஆப் யுவர் லைப்பா இருக்கும் இந்த டேஸ்.ஆல்ரெடி ரெண்டு வருஷம் முடிச்சுட்டீங்க இருக்குற இந்த ஒரு வருஷத்தை சந்தோஷமா அனுபவிங்க அதே நேரம் அரியர் வைக்காம பாஸ் பண்ணி லைப்ல அடுத்த ஸ்டேஜ்க்கு போறதுக்கான வேலையையும் சைட் பை சைட் பாத்துக்கணும்.

கொஞ்சம் படிப்பு நிறைய கலாட்டா ப்யூச்சர் வில் பீ ப்யூட்டிபுல் கைஸ்..”

ஹேஹேஹேஹே!!!”

ஏய் ஏய் அடங்க மாட்டீங்களா இப்போதான சொன்னேன் என் க்ளாஸ்க்குள்ள மட்டும்தான் உங்க அராஜகமெல்லாம் இருக்கனும் அதை விட்டுட்டு வெளில போற யாராவது ஒருத்தர் கேட்டாலும் பிரச்சனை தான்.சோ என்னோட ஆல் ட்ம்ஸ் அண்ட் கண்டிஷனுக்கு ஓகே னா மட்டும் தான் இப்படியே இருக்கும் க்ளாஸ்.”

.கே ஓ.கே மேம் நாங்க கேக்குறோம்”,என்று மெதுவாகவே மாணவர்கள் கூற,

ஆங் அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க..”,என்று அவள் கூறியதும் மீண்டும் அங்கு சிரிப்லை நிறைந்தது.

அதற்குள் வகுப்பு முடிவிற்கான மணி அடிக்க மாணவர்கள் அனைவரும் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நெஞ்சில் துணிவிருந்தால்..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

என்ன டா இது அட் அ டைம்ல அத்தனை பேரும் ப்யூஸ் போய் உக்காந்துட்டீங்க?!”

எச்ஓடீ க்ளாஸ் மேம் இப்போ

ஆத்தி நா எஸ்கேப் ஆகுறேன் அட்வைஸ் பண்ணியே ஒரு வழி ஆக்குவார்.என்ஜாய் பண்ணுங்க டா என் செல்வங்களே”,என்றவள் வெளியே சென்றதும் அவளைப் பற்றிய பேச்சுகள் தான் மாணவ மாணவிகளுக்குள்.

என்ன கரெக்டர் டா சான்ஸே இல்ல..எப்படி இப்படி கவுண்டர் கொடுக்குறாங்க..”

எனக்கு இந்த மேம்ஐ ரொம்ப பிடிச்சுருக்கு டி..ரொம்ப லைவ்லியா இருக்கு க்ளாஸ்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.