(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 15 - சகி

Uyiril kalantha urave

நாட்கள் மிக வேகமாக நகர ஆரம்பித்தன….புயலில் சிக்கிய படகானது ஒன்று கரை சேர வேண்டும் அல்லையேல், உடைய வேண்டும்; இரண்டிற்கு மத்தியில் நடகே்கடலில் படகினால் பல தினங்கள் தாக்குப்பிடிக்க இயலாது. படகானது காற்றின் நோக்கமறிந்து செயல்படும் என்றால் இறைவனின் அருளினால் அது கரை சேருவது உறுதி!!காற்றே தன்னை கரைசேர்க்கும் என்ற மாயவலையில் சிக்கும் என்றால் இறைவனின் எச்சரிக்கை நிச்சயம் அந்தப் படகிற்கு கேட்காது!!!காலச்சக்கரத்தின் மையத்தில் சிக்கி இருந்த தர்மாவிற்கு இதே நிலை தான். காதலென்னும் காற்றினை முழுமையாக நம்பி வாழ்பவளுக்கு நடக்கப்போகும் விபரீதம் தெரியவில்லை.

“அம்மாவுக்கு ஏதோ சந்தேகம் வருதுன்னு நினைக்கிறேன். நீங்க வந்து அவங்கக்கிட்ட பேசுங்க!” கண்ணீர் பெருக அவர் கூறியதை கேட்டு சற்றே மௌனம் காத்தார் சூர்ய நாராயணன். அவரது மௌனம் சற்றே திகைப்பை ஏற்படுத்திய கன்னியின் மனத்தில் திகில் பரவ ஆரம்பித்தது.

பொறுமையாக அவர் முன்னிலையில் சென்றவர், தாழ்ந்திருந்த சிரத்தை தாடைப்பிடித்து உயர்த்தி அவர் கண்களை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களில் முழுதுமாக சூழ்ந்திருந்த வெகுளித்தனத்தை நாராயணன் உணராமல் இல்லை. “என்னைவிட்டு போக மாட்டீங்க தானே!” உடைந்துப் போனது அவள் குரல். சட்டென உயிர் உறைய, உணர்வெல்லாம் உணர்விழக்க தானறியாமல் கண்கலங்கினார் நாராயணன்.

“ஏ..ச்சீ! பைத்தியம்! என்ன இது? நான் உன்னைவிட்டு எப்படிப் போவேன்?” அவளது கேசத்தை கோதி, அவளது நெற்றியில் முத்தமிட்டார் நாராயணன். அர்ப்பரிக்கும் அந்த நதிக்கரை அச்சமயம் அமைதியாகி மௌனம் சாதித்தது. ஆனால், அவள் சாமாதனம் ஆகவில்லை. மீண்டும் மீண்டும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

“ஏ…! என்னைப் பாரு! எதுக்காக அழுற?” இம்முறை காரணமின்றி அவர் குரலும் உடைந்துப் போனது.

“பயமா இருக்குங்க!” இறைவனானவன் பயம் என்னும் உணர்வை அவளுள் தோற்றுவித்த போதும், அவள் அதை சட்டைச் செய்யவில்லை.

“என் கூட வா!” அவளது கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றார். எங்கு, என்ன என்று எதையும் கேட்காமல் அவளும் சென்றாள். அது ஒன்றே அவளது நம்பிக்கைக்கு சாட்சியாக இருந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தனது இல்லத்தினை நோக்கி வாகனத்தை செலுத்தினார் அவர். அன்றைய இரவு தர்மாவின் வாழ்வையே புரட்டிப்போடும் என்று இருவருமே எதிர்நோக்கி இருக்க மாட்டார்கள். சூர்ய நாராயணனின் இல்லத்தில் தனித்துவமானது என்றால் அது அவரது தாய்,தந்தையின் புகைப்படம் வைத்திருக்கும் பிரத்யேக அறை தான்!!அவ்வாறு தன்னவளை அழைத்துச் சென்றவர் தன் எதிரே தர்மாவை நிற்க வைத்தார்.

“இதோ இவங்க தான் உன் மாமனார் மாமியார்!” என்றார் புன்னகையுடன். விழிகளில் விளக்க இயலாத அன்போடு தன் மறு தாய் தந்தையரின் முகத்தைத் தரிசித்தாள் அவள்.

“எனக்கு இவங்க தான் தெய்வம்!நவீன் மாதிரி கடவுள் நம்பிக்கை இல்லைனாலும் என் நம்பிக்கை எப்போவும் இவங்க தான்!” என்று ஒரு பெட்டியை வெளி எடுத்தார்.

“இது எங்க அம்மாவோட தாலி! வீட்டோட முதல் மருமகளுக்கு அவங்க கொடுத்த அதிகாரம்! அவங்க அடிக்கடி சொல்லுவாங்க! இந்தத் தாலியை என்னுடைய முதல் மருமகளுக்கு கொடுக்கிறேன். அவளுக்குத்தான் இந்த வீட்டில் சகல மரியாதையும், உரிமையும் கிடைக்கணும்னு சொல்வாங்க!”-என்றப்படி அதை எடுத்துக் காண்பித்தார்.

“இது உனக்கானது!” என்று சட்டென அம்மாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டினார் சூர்ய நாராயணன். எதிர்நோக்கா செயலே, ஆயினும் அவள் அதை தடுக்க முனையவில்லை. சிலையாகிப் போய்விட்டனள் காரிகை!! அவர்களின் உறவிற்கான அடையாளம் என்றோ ஓர்நாள் உலகறிய நிகழும் என்று நம்பிய விதி மாற்றி, இறைவன் அறிய, மூவுலகம் அறிய, பிரம்மாண்டம் முழுதும் பறையடிக்க, நிலமகள் சாட்சியாகி, விண்ணோர் முன்னோர் சாட்சியாகி, தாய் தந்தை பார்வையில் அவள் எனது சரிபாகம் என அறிவித்தார் சூர்ய நாராயணன்.

“இனி என்னைச் சார்ந்திருந்த எல்லாம் உன்னைச் சார்ந்ந்திருக்கும், என்னையும் உட்பட!!” அவள் நெற்றியில் மெல்ல மோதினார் அவர். தான் எதிர்நோக்கா திருப்பம் ஏற்படுத்தியவனின் நெஞ்சத்தில் மயிலிறகாக தஞ்சம் அடைந்தாள் அவள் கண்ணீரோடு!!

“தர்மா..ஏ..! என்னாச்சு?” அவளை ஆறுதல் செய்யும் முயற்சியில் தடம் பதித்தார் அவர்.

“இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது!” என்று தன்னவளின் நெற்றியில் இதழ் பதித்தார் அவர். அவளிடம் இனி எவ்வித விலகலும் வேண்டியதில்லை என்ற உரிமையும், மாங்கல்யத்தால் உண்டான சம்பந்தமும் இருவரையும் கட்டுப்படுத்தவில்லை. இருவரும் அன்றிரவு தங்களுக்குள் எவ்வித எல்லைகளையும் வகுக்கவில்லை.

நாட்கள் உருண்டோடின…

“தர்மாம்மாவை அந்த வெளியூர்காரன் கூட அடிக்கடி பார்க்கிறேன்மா! மனசுக்கு சரியாப்படலை! நம்ம அம்மா தங்கம் தான்! அவுக எப்படின்னு தெரியலீங்களே!” செவிக்கு வந்த செய்தி பார்வதியை திடுக்கிட வைத்தது.

“சரி நீ போ!” தகவல் அளித்தவரை வெளியேற்றினார் அவர்.

“கல்யாணி! தர்மாவை வரச்சொல்லு!” தன் பணியாளிடம் ஆணைப் பிறப்பித்தார் அவர். பார்வதியின் சொல்லை ஏற்று அவளும் தர்மாவின் அறை நோக்கிச்சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.