(Reading time: 17 - 33 minutes)

“அம்மாவுக்கு நம்ம விஷயம் தெரிந்துப் போச்சுங்க!” கண்ணீருடன் அவர் கூறிய போதும் கல்லாய் நின்றார் நாராயணன்.

“அதுக்கு என்னை என்னப் பண்ண சொல்ற?” உணர்வில்லாமல் வந்தது அவர் குரல். எக்கவலையும் இன்றி அவர் உரைத்த கூற்று தர்மாவை திடுக்கிட வைத்தது.

“என்ன சாதாரணமா சொல்றீங்க? நா…நான் இன்னொரு விஷயத்தை உங்கக்கிட்ட சொல்லணும்!” அந்தப் பதற்றமான சூழலிலும் அவளிடத்தில் ஓர் பூரிப்பு!!

“சும்மா! என் டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்காதே! முதல்ல கிளம்பு!” நாடி வந்த கதவும் மூடியது. விளக்கம் அறியாமல் நின்றவளை கண்டு எள்ளி நகையாடியது வந்திருந்த மதுமதியின் குரல்!!

“ஐயோ பாவம்! என்ன தர்மா எதுவும் புரியலையா? நான் விளக்கட்டுமா? இவன் உன் காதலிக்கலை. உன் அம்மாவை பழிவாங்க தான் உன்னைப் பயன்படுத்திக்கிட்டான்.” உண்மையை உடைத்தாள் அவள். தனது உலகம் தனக்கு எதிராய் திரும்பியதாய் ஓர் எண்ணம் அவளுக்குள்!!

“விளையாடாதீங்க! விஷயம் விளையாடுற மாதிரி இல்லை. நான்…நான்…உங்க வாரிசை சுமந்துட்டு இருக்கேன்!” அவளது கண்ணீர் அனைவரையும் உலுக்கிப் பார்த்தது. சிலையாகி நின்றார் சூர்ய நாராயணன்.

“பார்டா!பெரிய ஆள் நீ! நான் ஒண்ணு யோசித்தால் நீ பத்து மடங்கு அதிகம் பண்ற? சரி ஆனது ஆகியச்சு! என்ன நஷ்ட ஈடு வேணுமா?” என்று உள்ளே சென்றவள் சில நொடிகளில் திரும்பி வந்தாள் கையில் பணத்துடன்!!

“அன்னிக்கு நீ இவன் கூட இருந்த ஒரு நைட்க்காக இதை வைத்துக்கோ!” என்று மாடியிலிருந்து பணத்தை வீசி எறிந்தாள். அவள் செய்த காரியம் அனைவரையும் உறைய வைத்தது. எழுந்த சினத்தை பற்களை கடித்து கட்டுப்படுத்தினார் சூர்ய நாராயணன். அவளோ மனதளவில் இறந்தேப் போனாள். கேள்வியாக மௌனம் காத்த சூர்ய நாராயணனைப் பார்த்தாள்.கனத்த மௌனம் நிலவியது அங்கே!! நடைப்பிணமாய் திரும்பி தான் வந்த திசைநோக்கி நடக்கத் தொடங்கினாள் தர்மா. தடுக்க மனம் துடித்தப்போதும் மௌனம் காத்தார் சூர்ய நாராயணன். நடந்தவற்றை எல்லாம் கண்ணீருடன் கவனித்தார் நவீன்குமார். தன் தமையன் அருகே வந்து,

“ பிரமாதம்ணா! பழி வாங்கிட்டீங்க?திருப்தியா? நம்பி வந்தவளை காப்பாற்ற முடியலை நீ எல்லாம் என்னண்ணா ஆண்மகன்?” முதல்முறையாய் எதிர்த்து நின்றார் அவர்.

“நவீன்!” அவர் கொதித்து எழ, இருவரையும் கேவலமாய் ஓர் பார்வைப் பார்த்து அங்கிருந்து வெளியேறினார் அவர்.

நடைப்பிணமாய் வந்தவரை தடுத்தது ஓர் குரல்!

“மா! பார்வதியம்மா உங்களை ஊர் எல்லைக்கு கூட்டிட்டு வர சொன்னாங்கம்மா!” தாயாரின் கட்டளை எதற்கு என்று நிச்சயம் புரிந்திருக்கும்.

“வரேன்!” உணர்வில்லாமல் கூறினாள் அவள்.

“கையோட கூட்டிட்டு வர சொன்னாங்கம்மா!” என்றார் கண்ணீருடன்.

“வரேன்!” சற்றே அழுத்தி, உரக்க அவள் கூற மிரண்டுப் போய் பின் நகர்ந்தார் அவர். அவளதுப் பயணம் இலக்கின்றி முன்னேறியது. இலக்கின் எல்லையில் அவள் இறைவனின் தேவாலயம்!!

“எல்லாம் முடிந்தாச்சு ஈஸ்வரா! நீங்க எனக்காக இதுநாள் வரை நிறைய உதவி பண்ணி இருக்கீங்க! நான் தான் நன்றி மறந்துட்டேன். நான் தப்பானப் பொண்ணா? நீங்க என்னை அப்படித்தான் வளர்த்தீங்களா?அவங்க எல்லாரும் என்னை…” பேச்சு வராமல் தவித்தாள் அவள்.

“வேணாம்! யாருக்கும் எந்தக் குறையும் வரக்கூடாது! இனி எனக்கு எல்லாம் நீங்கதான்! இவங்க யாரும் வேணாம். நானும்,என் குழந்தையும் வந்துடுறோம்! நான் இங்கே என் வாழ்க்கையை ஏன் நாசம் பண்ணன்னு கேட்க வரலை!என்னுடைய செயல்களுக்கு நான்தான் பொறுப்பு! அதோட பாரத்தை நான் உங்கக்கிட்ட கொடுக்க முடியாது. நான் செய்த தவறுக்கு என் குழந்தையும் தண்டனை அனுபவிக்கப் போறானா?என்னை மன்னித்துவிடு கண்ணா!” என்றாள் தன் புதல்வனிடம்!

“எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்ததுக்கு நன்றி மஹாதேவா!!” தன்னை இரட்சிக்கும் இறைவனிடம் நன்றிக் கூறி ஊர் எல்லையை நோக்கி நடந்தாள்!! இறைவனும் நிச்சயம் அச்சமயம் கண்ணீர் வடித்திருப்பான். தன் புதல்வியின் இந்நிலைக்கு பழிவாங்க அவனும் குரோதம் கொண்டிருப்பான். அதில் ஐயமில்லை!!!

தன்னுயிரை தியாகிக்க வரும் புதல்வியைக் கண்டு சிறிதும் இறக்கம் சுரக்கவில்லை தாய் மனதிற்கு!!

“அம்மா!கொஞ்சம் இறக்கம் காட்டுங்கம்மா!” ஊரார் அறிவுறுத்தினர். அவரோ பிடிவாதமாய் நின்றார்.

“அவளை கட்டிப்போடுங்க!” உத்தரவிட்டார் பார்வதி.

“தேவையில்லை..நான் இதை ஏற்றுக்கத்தான் வந்தேன்!” என்று தானே சென்று விறகின் மீது அமர்ந்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.