(Reading time: 17 - 33 minutes)

“நவீன்! நீ…நீ அவளைப் பார்த்தியா? அவ எங்கே இருக்கா?சொல்லுடா!விளையாடாம சொல்லு! நான் பண்ணதுக்கு அவ காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன்!எங்கே என் தர்மா?” சூர்ய நாராயணனின் இந்த நிலை உண்மையில் பரிதாபமாக இருந்தது.

“அண்ணி தன்னுடைய உயிரை விட துணிந்தாங்கண்ணா! உயிரோட அவங்களை எரிக்கப் பார்த்தாங்க!” வெறித்தப்படி கூறினார். மனதில் திக்கென்ற உணர்வு பரவியது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்னால தான் எல்லாம்! நான் பாவி! என் சுயநலத்துக்காக அவளை…ஐயோ கடவுளே!” தலையில் அடித்துக் கொண்டவரை தடுக்கவில்லை இளவல்.

“அவங்களை மெட்ராஸ்க்கு அனுப்பி இருக்கேன்! அவங்கஅங்கே பத்திரமா இருப்பாங்க! உடனே கிளம்பலாம். ஆனா, நீங்க அவங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டு தான் ஆகணும்!” ஏனோ ஆறுதல் நல்கின அவ்வார்த்தைகள்!

“எனக்கு அவ கிடைத்தால் போதும்!அவ என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டால் போதும்!அவளுக்காக நான் வேணுனாலும் செய்வேன்!” வாக்களித்தார் அவர்.ஆனால்,விதி உண்மையில் யாரை விட்டது??தர்மாவை அழைத்துச் சென்ற ஓட்டுனரிடமிருந்து அழைப்பு வந்தது.

“சின்னய்யா!அவங்களை காணோம்!நான் எங்கே எல்லாமோ தேடி பார்த்தேன். அவங்க எங்கேன்னு கூட தெரியலை!” பெரிய இடியை இறக்கினார் அவர்.

“என்ன சொல்ற நீ?எப்படி நடந்துச்சு இது?” சீறினார் நவீன்குமார்.

“அவங்க கோவிலுக்கு போகணும்னு காஞ்சிபுரம் பக்கத்துல நிறுத்த சொன்னாங்கய்யா! அப்பறம் அவங்க கோவிலில் இருந்து வரவே இல்லை. நான் எல்லா இடத்திலும் தேடினேன். அவங்க காணோம்!”நவீன்குமாரின் கை வழுவி உடைந்தது கைப்பேசி!!அவள் எப்படி கிடைப்பாள் தன்மானத்தை இழந்து!!!!அன்று அவள் தொடங்கிய பயணத்தை இன்று தர்மாவின் புதல்வன் தொடர்கிறான்!!!

Episode 14

Episode 16

தொடரும்!

{kunena_discuss:1149}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.