(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 02 - ஸ்ரீ

Unnaale naan vazhgiren

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே, விழுவது ஒரு சுகம்..

அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே, கலைவதும் ஒரு சுகம்..

என்னோடு புது மாற்றம் தந்தாள்..

எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்..

என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்..

அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ..

கண் தூங்கும் போதும் காதல் தந்தாள்..

அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தால்..

ஹோ.. ஹோ..

என் வானில் மேகங்கள், சொல்லாமல் தூறுதே

என் காதல் வானிலை, சந்தோசம் தூவுதே

நீ தந்த பார்வை, நனைந்தாலே பாவை

அன்பே அன்பே எந்தன் நெஞ்சில்..

ஒளி வீசும் காலை, இருள் பூசும் மாலை,

உந்தன் முகம் எந்தன் கண்ணில்..

மின்சாரம் இல்லா நேரத்தில், மின்னலாய் வந்து ஒளி தருவாள்”

ரகதத்தின் அன்றைய நாளின் பேச்சிற்குப் பிறகு வைரவன் நிறையவே மாறியிருந்தார்.ஆபீஸ் முடிந்து வந்த பின்பு தன்னால் முடிந்த உதவிகளை செய்தவாறு மனைவியோடு தனக்கான நிமிடங்களை செலவு செய்தார்.

நிச்சயமாய் அவர் கொடுமைக்கார கணவன் என்றெல்லாம் இல்லை தான்.மிக மிக அன்பானவர் ,கோபமே படத் தெரியாதவர் தான்.ஆனால் மகள் என்றால் அத்தனை உயிர்.மகளுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்.மகளின் சொல்லே வேதவாக்கு.

அதே நேரம் அவர் வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் எந்த வேலையும் செய்து பழக்கமில்லை.திருமணத்திற்கு பிறகும் மரகதத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றெல்லாம் எண்ணியதில்லை.சொல்ல போனால் கணவர்களின் வழக்கமான வாசகமான,

உனக்கென்ன வீட்ல சும்மா தான இருக்க என்னை மாதிரி நாலு இடம் போய் வந்தா தெரியும்னு”,அசால்ட்டா தன்னுடைய கடுப்பை மனைவியிடத்தில் காட்டிவிடுவார் பல நேரங்களில்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மரகதமும் அதை பெரிதாகவெல்லாம் எடுத்துக் கொள்ளமட்டார்.பதிலுக்கு பதில் கத்திவிட்டு அந்த நொடியே மறந்தும் விடுவார்.

ஆனால் தன் மனைவி மனதில் இருந்ததையெல்லாம் பேசி கேட்ட பிறகு வைரவனுக்கு ரொம்பவே வருத்தமாகிப் போனது.ஏதோ ஒரு விதத்தில் நிச்சயம் சிறந்த கணவனாக தான் இல்லை என எண்ண ஆரம்பித்திருந்தார்.

அதனாலேயே அவரோடு தனக்கான நேரத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.

“ஏன் டீ இதெல்லாம் ஒரு நாள் கூட என்கிட்ட சொன்னதில்ல?”

“இதெல்லாம் சொல்லிட்டு இருப்பாங்களா..இது எல்லா பொண்ணுக்கும் சாகுற வரை மனசுல இருக்குற விஷயங்கள் தான்.எத்தனை உறவு பொறுப்பு வந்தாலும் அம்மாவும் அப்பாவும் எப்பவும் வேற தான்.”

“ம்ம் ஆனாலும் மனசு கஷ்டமாவே இருக்கு இத்தனை வருஷம் உன்கூட வாழ்ந்து என்ன ப்ரோஜனம் உன்னைபத்தி யோசிக்காமயே இருந்துருக்கனே..”

“அடடடா இப்போ என்ன அதான் நானே பெருசா எடுத்துக்கலைனு சொல்லிட்டனே..அப்பறம் ஏன் நீங்க அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க..”,என ஒரு அதட்டலில் அந்த பேச்சை நிறுத்தினார்.

சமையலறையில் நடந்த இந்த சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்த மதுமிதாவின் முகத்தில் மெல்லிய சிரிப்பு தோன்றியது.

எதை எதையோ கண்டுபிடிக்கணும் தெரிஞ்சுக்கணும்னு ஓடுறோம்.ஒரு சாதாரண குடும்பதலைவியான நம்ம அம்மாவை பத்தி தெரியாமயே இருந்துருக்கோமே என்று தான் தோன்றியது அவளுக்கு.

மூவருமாய் சேர்ந்து இரவு உணவை முடித்துவிட்டு வைரவன் வழக்கமான தன் வேலையாய் காலார நடந்து வருவதாகக் கூறி கிளம்பிச் சென்றார்.

ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த தாயின் மடியில் வந்து படுத்துக் கொண்டாள் மதுமிதா.

“என்னடீ செல்லம் கொஞ்சல் அதிகமா இருக்கு என்ன விஷயம்?”

“என்ன மம்மி இப்படி சொல்லிட்ட நா செல்லம் கொஞ்சாம வேற யாரு கொஞ்சுவா சொல்லு..”

“ம்ம் சரி சரி விஷத்தை சொல்லு..”

“நீ கற்பூரம் மா..எப்படி கரெக்டா கண்டுபிடிச்ச?”

“ரொம்ப ஐஸ் வைக்காம விஷயத்தை சொல்லு..”

“உன்னோட இத்தனை வருஷ கல்யாண வாழ்க்கைல என்னைக்காவது எங்களுக்கு தெரியாம அழுதுருக்கியாமா?”

“ம்ம் நிறைய தடவை அழுதுருக்கேன் ஏன் கேக்குற?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.