(Reading time: 14 - 27 minutes)

வாழ்க்கையை இந்த கோணத்துல யோசிச்சு பாரு தேவையான பக்குவம் நிறையவே வரும் உனக்கு..”

“ம்மா நீ சான்ஸே இல்ல எல்லா அம்மாவும் கல்யாணம் பண்ண போற பொண்ணுகிட்ட புருஷனை உன் கைக்குள்ள வச்சுக்கோ முந்தானைல முடிஞ்சுக்கோனு தான சொல்லுவாங்க நீ என்ன இப்படியெல்லாம் சொல்ற..”

“ம்ம் இன்னொன்னும் சொல்றேன் கல்யாணத்துக்கு அப்பறம் அம்மா பேச்சை வச்சு எந்த முடிவும் எடுக்காத..உதாரணமா இப்போ நாளைக்கு நா உன் மாமியாரை பத்தி எதாவது சொல்றேன்னு வை..அவங்களை பாத்தா ரொம்ப செலவாளி போல இருக்கு மதுனு சொல்றேன்னு வை..

அதுக்கப்பறம் உனக்கு உன்னையறியாமையே அவங்களை அந்த கண்ணோட்டத்துல தான் பார்க்க தோணும்.சின்ன விஷயமும் பூதாகரமா தெரியும்.நான் ஒரு அம்மாவா என் பொண்ணு வாழ்க்கைனு யோசிச்சு பேசுவேன்.ஆனா நீ அந்த குடும்பத்து மகளா எல்லாரையும் மனசுல வச்சு நடக்கணும் இரண்டுக்கும் நிறைய நிறைய வித்தியாசம் இருக்கு தான?”

“ம்மா அப்பா ரொம்ப லக்கி உன்னை மாதிரி ஒரு ஃவைப் கிடைச்சதுக்கு..”

“ம்ம் சத்தமா சொல்லிராத உங்கப்பா அவ்ளோ தான்..இதெல்லாம் அனுபவத்துல கத்துகிட்டது தான்.நானும் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அல்பமா சண்டை போட்டவ தான்.இப்போ அதெல்லாம் நினைச்சா ரொம்ப கேவலமா இருக்கு ..ச்சீ இதுக்கு போயா இப்படி சண்டை போட்டோம்னு..

இந்தமாதிரி இன்னும் நிறைய இருக்கு மது கண்ணா..சொல்லி தெரியுறத விட அனுபவம் உனக்கு நிறைவே கத்துக் கொடுக்கும்..”

“என்ன தான் சொல்லு நீ ஒரு படிக்காத மேதை மா..”

“அடி கழுத யாரைப் பார்த்து படிக்காதவனு சொல்ற நானெல்லாம் பி எஸ் சி மேத்ஸ் கோல்ட் மெடலிஸ்ட் ஆக்கும்..”

“ம்மாமாமாமா என்னம்மா சொல்ற??!!!!”

“எதுக்கு டீ இப்போ இப்படி கத்துற?”

“நா கேட்டப்போ எல்லாம் டிகிரி டிகிரினு மட்டும் தான சொல்லிருக்க..”

“ஆமா என்ன படிச்சுருக்கனு கேட்டா டிகிரினு தான சொல்லனும்..பாஸா பெயிலானு நீ கேக்கல நானும் சொல்லல..”

“ஆனாலும் உனக்கு குசும்பு ஜாஸ்தி மா..நானெல்லாம் லட்சத்துல ஒண்ணா இன்ஜினியரிங் படிச்சுட்டு பர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் பண்ணதுக்கே சீஇஓ ரேஞ்ச்க்கு கனவு காணுறேன்.நீ கோல்ட் மெடலிஸ்ட்னு சொல்ற எப்படி வேலைக்கெல்லாம் போகாம இருக்க?”

“அது உனக்கு பிடிச்சுருக்கு இது எனக்கு பிடிச்சுருக்கு அவ்ளோ தான்.சொல்லப் போனா உன் ஆசையை விட இதுதான் ரொம்ப கஷ்டம்..முழு நேரமும் மனசும் மூளையும் நாலு சுவத்துக்குள்ள நடக்க வேண்டிய வேலைகளை பத்தி மட்டுமே நினைச்சுட்டு இருக்கனும்..”

“இன்னைக்கு நீ மொத்தமா எனக்கு புதுசா தெரியுறம்மா..”

“ஆமா ஆமா இன்னும் மூணு மாசத்துல நீயும் இந்த லிஸ்ட்ல வரப் போற இல்ல அதான் அப்படி தெரியுறேன்.விட்டா விடிய விடிய பேசுவ தள்ளு நா போய் பால் சூடு பண்றேன் அப்பா வர்ற நேரமாச்சு..”

மரகதம் எழுந்து சென்ற சில நொடிகளில் வைரவன் உள்ளே நுழைந்தார்.தந்தையை சந்தேகமாய் பார்த்தவளாய்,

“என்னப்பா அம்மா உள்ளே போன டைமிங்கும் நீங்க உள்ளே வந்த டைமிங்கும் இடிக்குதே..அப்போவே வந்துட்டீங்களா?”

“மதும்மா ஆனாலும் அநியாயத்துக்கு அப்பாவை இப்படி கண்டுபிடிக்க கூடாது..உன்னை பொண்ணு பாத்துட்டு போனதுக்கே உன் அம்மாவை பத்தி இவ்ளோ தெரிய வருது இன்னும் உன் கல்யாணத்துக்குள்ள உங்கம்மாவை பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்கலனு நிலைமை மாறிடும் போல..”

“ம்ம் என்ன தான் நீங்க பெஸ்ட் அப்பாவா இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் பெஸ்ட் ஹஸ்பண்டா இல்லையோனு தோணுதுப்பா..”

“எனக்கே அதான் தோணுதுடா மது..அவ நம்மளபத்தி புரிஞ்சுகிட்டதில்ல நாம பாதிகூட புரிஞ்சுக்கல அவளை..”

“ம்ம் சரி விடுங்க இதுக்கு அப்பறம் அதெல்லாம் எப்படி சரி பண்றதுனு பார்க்கலாம்..ஃப்ரீயா விடுங்க பா..”

“அப்பறம் அடுத்த வாரத்துல ஒரு நாள் நிச்சயப் புடவை எடுக்கப் போறதா  சம்மந்தி வீட்ல இருந்து போன் பண்ணாங்க மது..உனக்கு என்ன கலர் பிடிக்கும்னு கேட்டாங்க..மறுபடியும் காலைல போன் பண்ணி பேசுறேன்னு சொன்னாங்க..”

“ம்ம் சரிப்பா..அம்மாகிட்ட கேக்குறேன் எனக்கு புடவை பத்தியெல்லாம் ஐடியாவே இல்ல..”

அன்றைய பொழுது அப்படியாய் கரைய மறுநாள் வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்து கொண்டாள் மது.பல் துலக்கிவிட்டு சமையலறைக்குச் சென்றவள் சமையல் மேடையில் ஏறி அமர்ந்து தாய் கொடுத்த காபியை குடிக்கத் தொடங்கினாள்.

“என்ன டீ இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட..ஆபீஸ்க்கு சீக்கிரம் போணுமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.