“நானே திருந்த நினைச்சாலும் விட மாட்டியே நா திருந்திட்டேன் மா இன்றிலிருந்து உனக்கு உதவி செய்யப் போகிறேன்..”
“ம்ம் இப்படி சொல்லிட்டு தான் ஒருத்தர் காய் வாங்க போறேன்னு மார்க்கெட்டுக்கு போய்ருக்காரு வந்தா தான் தெரியும் உதவியா இல்லையானு?”
“என்னது அப்பா எனக்கு முன்னாடியே எழுந்துட்டாறா?என்ன கொடுமை சரவணா!!!”
“ம்ம் இதெல்லாம் ஒரே ராத்திரில மாறப்போற விஷயம் கிடையாது அதனால ஒழுங்கா போய் உன் வேலையை பாரு..எனக்கு ஒரு உதவியும் பண்ண வேணாம் போ போய் குளி..அதுவே பெரிய உதவி தான்.”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“மிஸஸ் மரகதம் வர வர உங்கள் கொழுப்பு மிகவும் அதிகரித்துவிட்டது கவனித்துக் கொள்கிறேன்..”,என்றவாறே அவர் இடுப்பில் குறுகுறுப்பு மூட்டிவிட்டு ஓடினாள்.
“வந்தேன்னா கன்னம் பழுத்துரும் கழுதை..”,என பதிலுக்கு கத்தியவாறே சமையலை கவனித்தவருக்கு உதட்டில் புன்னகை அரும்பியது..
சற்று நேரத்தில் குளித்து தயாராகி வந்தவளுக்கு ஹாலில் சத்தம் அதிகமாகவே கேட்க தனதறையிலிருந்து வெளியே வந்தாள்.
“என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்”,என கோவை சரளா பாணியில் கேட்க மரகதம் அவளை முறைத்தார்.
“ஏற்கனவே செம கோவத்துல இருக்கேன்..உங்கப்பாவ அடிக்க முடியாததையும் சேர்த்து நீ வாங்கி கட்டிட்டு போயிராத ஓரமா போ சொல்லிட்டேன்..”
“என்னப்பா பண்ணீங்க உங்கள் சதி இத்தனை கோபமாக இருக்கிறாரே?!”
“ஏன் டா மது அவளை இன்னும் காண்டாக்குற..நா ஒண்ணுமே பண்ணல டா அம்மாக்கு ஹெல்ப் பண்ணலாமேனு மார்கெட்க்கு போய் காய் வாங்கிட்டு வந்தேன்.அதுக்குப் போய் இப்படி திட்றா”
“ம்ம் வெறும் காய் இல்ல வண்டு விழுந்த அழுகிய தரமான காய்கறினு சொல்லுங்க..”
“அப்பா!!!!”
“நீயே பாரு டி உன் அருமை அப்பா வாங்கிட்டு வந்துருக்க அழகை..கத்திரிக்காய்ல அத்தனை சொத்தை..தக்காளி இரண்டு மூணு ஒரே அழுகல் வெண்டக்காய் ஒரே முத்தல்..”
“ம்மா ம்மா நிறுத்து பார்த்தாலே தெரியுது எல்லாத்தையும் சொல்லி நீ இன்னும் டென்ஷன் ஆகாத..அப்பா என்னப்பா இது..”
“மது டா நா என்ன பண்ணட்டும்..உங்கம்மா வழக்கமா வாங்குவேன்னு சொன்ன கடைக்குத் தான் போனேன்.அவன் தான் என்னை பார்த்தவுடனே வாங்க வாங்க சார் என்ன அக்கா வரலையா இன்னைக்கு குடுங்க நானே போட்டுத் தரேன் எல்லாத்தையும்னு போட்டு கொடுத்தான்.இப்படி ஆகும்னு எனக்கு என்ன தெரியும்..”
“ம்ம் அதை தானே நானும் சொல்றேன் உங்களுக்கு ஒண்ணும் தெரியாது அமைதியா உங்களுக்கு தெரிஞ்ச வேலையை மட்டும் பாருங்கனு..கேட்டாதான..இனி அப்பாவும் பொண்ணும் வந்து உதவி பண்றேன் அது இதுனு வந்தீங்க அவ்ளோ தான் சொல்லிட்டேன்..
இருக்குற வேலை பத்தாதுனு இது வேற எனக்கு..யாராலையும் ஒரு உதவியும் கிடையாது..எல்லாம் நாம தான் பண்ணணும்..என்னத்த பண்றது நா வாங்கிட்டு வந்த வரம் அப்படி..”,என கத்தி புலம்பியவாறே சமையலறைக்குச் செல்ல அப்பாவும் மகளும் பாவமாய் முழித்தனர்.
“ஏன் டா மது யாரும் உதவி பண்ணலங்கிறா நா பண்ணிணதுல ஆயிரம் தப்பு சொல்றா உனக்கு எதாவது புரியுது?”
“ஹா ஹாஹா அப்பா எனக்கு தெரிஞ்சு இது எல்லா மனைவிகளின் பொதுவான குணம் போல..மே பி எதிர்காலத்துல நானும் இதில் அடக்கம்..புருஷனையும் குழந்தையையும் ஒரு வேலை செய்ய விடாம அக்கறையா பாத்துப்பாங்க.ஆனா கோவத்துல யாரும் ஒண்ணும் பண்றதில்லனு அவங்களையே திட்டவும் திட்டுவாங்க போல..”என்றவள் சத்தமாகவே சிரித்தாள்.
“இன்னும் அங்க என்ன வெட்டிகதை பேசிட்டு இருக்கீங்க இரண்டு பேருக்கும் ஆபீஸ் போற ஐடியா இருக்கா இல்லையா..”
“இதோ நா ஓடிட்டேன்..அப்பா தான்ம்மா கிளம்பாம பேசிட்டே இருக்காரு”,என அவள் பங்குக்கு வைரவனை கோர்த்துவிட்டு ஓடிவிட்டாள்.
{kunena_discuss:1240}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.