Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 10 - 19 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It

தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 01 - ஸ்ரீ

Unnaale naan vazhgiren

அடியேஉன்ன பார்த்திட பார்த்திட     

நான் தொலைஞ்சேனே     

அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேனே     

பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே     

அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே     

உசுரே உன் ஓர பார்வை     

சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…      (அடியே)

          

உன்ன நான் நெனச்சு திமிராகி போகுறேன்     

விளக்கு திரி நான் விடிவெள்ளி ஆகுறேன்     

எத்தனையோ வார்த்த தெரிஞ்சாலும்     

வாய மூடுறேன் ஒத்த பனை ஓல     

அத போல நான் ஆடுறேன்

ந்த மாலை மங்கும் நேரத்தில் வைரவனின் வீடே ஒருவித பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது.

“மரகதம் என்ன டீ பண்ற உள்ளே இங்க பாரு இன்னும் பூக்காரம்மா வரல..வந்து என்னனு பார்க்கலாம் தான..?”

“ஐய்யையே உங்களோட என்ன இது இப்படி அக்கப்போரா இருக்கு..உங்க பொண்ணை பொண்ணு பார்க்க வராங்கனா அதுக்காக பூக்காரம்மாக்கு வேற வேலை இருக்காதா அவங்க வர வேண்டிய நேரத்துக்குதான் வருவாங்க..சும்மா தொணதொணனு என் உயிரை எடுக்காம உங்க பொண்ணுகூட போய் உக்காருங்க போங்க..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இன்னொரு தடவை என் பேரை ஏலம் விட்டீங்க என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன்..”,என்றபடி அவரை பலமாய் முறைத்துச் சென்றார்.

தலையை சொறிந்தவாறே தன் மகளறைக்கு வந்தவர் கட்டிலில் அமர மறுபுறம் அமர்ந்து தன் நகையை போட்டுக் கொண்டிருந்தவள் அவரை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“ஏன்ப்பா இப்படி அம்மாகிட்ட திட்டு வாங்கிகிட்டே இருக்கீங்க.. பாவம் அவங்களும் எத்தனை வேலை பார்க்குறாங்க..”

“ம்ம் நா என்ன டா பண்றது நேத்து வரையுமே நீ எனக்கு ஸ்கூல் யூனிஃபார்ம் போட்ட மதுமிதா வா தான் தெரிஞ்ச.. திடீர்னு உன்னை கல்யாண வயசுல என்னால நினைச்சு பார்க்கவே முடிலடா..”

“ப்பா ஐ அம் 24 ஆல்ரெடி நீங்கதான கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோனு என்னை கன்வின்ஸ் பண்ணி சம்மதிக்க வச்சீங்க.. இப்போ இப்படி சொன்னா என்ன அர்த்தம்..சரி இவ்ளோ பீல் பண்றீங்கனா சொல்லுங்க இன்னும் ஒரு இரண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்குறேன்.. என்ன சொல்றீங்க..”

“சொல்லிரப் போறேன் எதாவது..தெரியுமே அங்க இருந்து வந்து இங்க இப்படி எதாவது தான் பண்ணிட்டு இருப்பீங்கனு.நானே கொஞ்சி கெஞ்சி அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுருக்கேன்..இவ வயசுல எனக்கு இவ மூணு வயசு குழந்தை..இதுவே லேட் இதுல இன்னும் இரண்டு வருஷமா..மொத்தமா  முதலுக்கே மோசமாக்கிருவீங்க போலயே..

மதுப்பா உங்களை கெஞ்சி கேக்குறேன்..என் மேல இரக்கம் காட்ட கூடாதா..”

“ரொம்பதான் நக்கல் பண்ற டீ..ஏன் உனக்கெல்லாம் பீலிங்க்ஸே இல்லையா?”

“இருந்துச்சு எங்கப்பா என் கல்யாணத்துக்கு இதே மாதிரி பீல் பண்ண அப்போ இருந்துச்சு..”,என்றவர் விறைப்பாய் சென்றுவிட்டார்.

அப்பாவுக்கும் மகளுக்கும் அந்த வார்த்தைகளின் வீரியம் எத்தனை வலியுடையது என்று நன்றாக புரிந்தது.இருந்தும் அப்போது அந்த பேச்சை வளர்க்கவிடாமல் அடுத்தடுத்த வேலைகள் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டது.

வைரவன் மரகதம் தம்பதியரின் ஒரே மகள் மதுமிதா..இன்ஜினியரிங் முடித்து ஐடி கம்பெனியில் டீம் லீடராக பணிபுரிந்து வருகிறாள்.சீஇஓ ஆக வேண்டும் என்பதே அவளின் கனவு.

அதே நேரம் ஒரே மகளாய் தாய் தந்தைக்கு அத்தனை ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் எண்ணம் கொண்டவளாய் இருந்தாள்.அவர்களின் தற்போதைய ஆசை அவளின் திருமணம்.

எத்தனையோ எடுத்துக் கூறியும் மரகதம் பிடிவாதமாய் இருக்க வேறு வழியின்றி ஒத்துக் கொண்டாள்.

அதன்படி அவளுக்காக வந்த முதல் வரன் தான் ஸ்ரீகாந்த் ஜாதகம் பொருந்தியிருந்ததால் மேற்கொண்டு பேச முடிவெடுத்து இன்று பெண் பார்க்க வருகிறார்கள்.

ஸ்ரீகாந்த் அவனும் அதே கம்பனியின் வேறு பிரிவில் மேனேஜராகப் பொறுப்பில் இருந்தான்.இருவரும் ஒரே கம்பனி எனினும் ஒருவரை ஒருவர் இதுவரை நேரில் பார்த்ததில்லை.அம்மா அப்பா தங்கை விருதுநகர் அருகில் சொந்த வீட்டில் வாழ்ந்து வர இவன் வேலை நிமித்தமாய் சென்னைக்கு வந்தவன் அப்படியே ஒரு டூ பிஎச்கே பிளாட் வாங்கி தனியே சமைத்து சாப்பிட்டு வேலைக்குச் சென்று வருகிறான்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Sri

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 01 - ஸ்ரீsasi 2018-12-24 15:57
நல்லாயிருக்கு ஆரம்பம் நைஸ் story
வாழ்த்துக்கள் மேம்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 01 - ஸ்ரீSAJU 2018-12-22 19:40
wow SUPER UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 01 - ஸ்ரீஸ்ரீ 2018-12-22 16:51
Thank you so much everyone😍😍😍
Reply | Reply with quote | Quote
# Very nice startminmini 2018-12-29 08:29
Nicely written both the epis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 01 - ஸ்ரீmahinagaraj 2018-12-22 10:43
அருமையான முதல் பதிவு... :hatsoff: :clap: 😘
அற்புதமான பெண்களின் உணர்வை சொல்லீருக்கீங்க... :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 01 - ஸ்ரீAdharvJo 2018-12-22 10:30
Arranged marriage arranged marriage than 😁😍👍cool n cute start Sri ma'am :clap: :clap: aunty Oda point of view about mom was simply cool and then those finishing lines about life was well expressed :hatsoff: yes every phase of life has saved different lessons!
Indha simple arranged marriage Oda rollercoaster ride eppadi.pogumn therindhu kola waiting. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 01 - ஸ்ரீSahithyaraj 2018-12-22 09:32
Sri sis sema start. Madhu Amma super :cool:
.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 01 - ஸ்ரீRaVai 2018-12-22 09:23
Great! Interesting start. Congrats
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 01 - ஸ்ரீSrivi 2018-12-22 06:11
Sis.. startinge amarkalam .. kalakks sis. Cute family of Madhu.. Madhu amma 😍
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top