(Reading time: 10 - 19 minutes)

“ஏய் என்ன அப்பாவும் பொண்ணுமா என்ன வச்சு காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா?”

“ம்மா உண்மையை சொன்னா கூட நம்ப மாட்ற பார்த்தியா..”

“ம்ம் யாரை வேணா நம்பலாம் ஆனா உங்களை மட்டும் நம்பவே மாட்டேன்..”

“சரி சரி ம்மா நா ஒண்ணு கேட்கட்டுமா?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்ன?”

“இல்ல சாய்ந்திரம் ஏன் அப்படி சொன்ன?')”

“எப்படி??”

“இல்ல தாத்தாவ பத்தி சொன்னியே?”

“ம்ம் உண்மை தான இப்போ உங்கப்பா பீல் பண்ற மாதிரி தான அப்போ என் அப்பாவும் பீல் பண்ணிருப்பாரு..”

“ம்ம்”

“மதும்மா..எல்லா அப்பாவுக்கும் மகள் எப்போதுமே இளவரசி தான்..என் கல்யாணத்தப்போ எனக்கு 19 வயசு..அதுவரை என் வீட்ல ராஜகுமாரி தான் நா..என் பேச்சுக்கு எந்த எதிர்பேச்சும் இருந்ததில்ல.அதுவும் அப்பாவுக்கு நாதான் எல்லாமே..

அப்படியிருக்க திடீர்னு கல்யாணம் பண்ணி நீ அப்பாவ விட்டு தூரமா யாரோ ஒருத்தரோட வீட்ல தான் இனி வாழ்க்கை மொத்தமும் இருக்கணும்னு சொன்னா எப்படியிருக்கும்.

இந்தகாலத்து பொண்ணுங்களுக்கு இருக்குற தெளிவும் தைரியமும் அப்போ எல்லாருக்கும் கிடையாது டா..

கல்யாண சந்தோஷத்தை தாண்டி பயம் தான் அதிகமா இருக்கும்.அப்படி தான் எனக்கும் எங்கம்மா என்னை திட்டி திட்டி தான் வளர்த்தாங்க அதனால அவங்களை பிரியுறத நினைச்சு கூட பீல் பண்ணல ஆனா அப்பா..

கல்யாணத்துக்கு முதல் நாள் நைட் உக்காந்து அப்படி அழுதேன் இந்த கல்யாணம் வேணாம் இந்த மாப்பிள்ளை வேணாம் உங்க கூடவே இருக்கேன்னு..

உங்க பாட்டி என் முதுகுலயே ரெண்டு போட்டாங்க..விடிஞ்சா கல்யாணத்தை வச்சுட்டு என்ன பேச்சு பேசுறனு..அப்பறம் அப்படி இப்படினு சமாதானம் ஆகி அப்போவோட மனைவியா வாழ்க்கையை வாழத் தொடங்கினேன்.

அதுக்கப்பறம் விளையாட்டா கூட என் புருஷனை எங்கப்பாகிட்ட விட்டு கொடுத்ததில்ல.இதான் பெண்களோட வாழ்க்கையே..

கல்யாணம் ஆகி போகும் போது தான் அப்பாவை ரொம்பவே உணருவோம்.அதே மாதிரி நமக்கு ஒரு குழந்தைனு வந்தப்பறம் தான் நம்ம அம்மாவை பத்தி முழுசா உணருவோம்..

நீ பொறந்தப்போ உங்க பாட்டி என்னை எப்படி பாத்துகிட்டாங்க தெரியுமா..கண்ட நேரத்துல எல்லாம் நீ அழுவ சலிக்காம எழுந்து பால் காய்ச்சி கொடுத்து உன்னை தூங்க பண்ணி மறுநாள் காலையில வழக்கம் போல எழுந்து வீட்டு வேலையும் பாத்துட்டு வாய்ப்பே இல்ல..

அதைவிட நீ வளர்ந்து அப்பாவோட செல்லம் கொஞ்சி என்னை கிண்டல் செய்யும் போதெல்லாம் எங்கம்மாவவை நான் நினைச்சுப்பேன்..நாம இப்படியெல்லாம் பண்ணப்போ அம்மாக்கும் இப்படிதான கஷ்டமா இருந்துருக்கும்னு..

ஒவ்வொரு ஸ்டேஜ் ஆப் லைப் ஒவ்வொண்ணும் நமக்கான பாடங்களை கத்து கொடுத்துகிட்டே தான் இருக்கும்.அதை ஒழுங்கா கத்துகிட்டு லைஃவ்ல பாஸாகுறோமா இல்ல பெயில் ஆகுறோமாங்கிதுல தான் சஸ்பென்ஸே இருக்கு..”

என்றவர் நிறுத்திவிட்டு இருவரையும் பார்க்க கண்கொட்ட மறந்து அமர்ந்திருந்தனர் தகப்பனும் மகளும்.

 

தொடரும்!

Episode # 02

{kunena_discuss:1240}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.