(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - என்னவளே - 18 - கோமதி சிதம்பரம்

ennavale

கீதா, வந்து நின்ற கோலத்தை பார்த்து சதாசிவம் ஆடி போய் விட்டார்....

ஒருமுறை, அவரது கண் முன் அவரது மனைவி லட்சுமி வந்து நிற்பது போல உணர்ந்தார்.

இன்று, தன் முன் நிற்கும் கீதாவின் கோலம் சதாசிவத்திற்கு அவரது திருமண நாள் அன்று தனது மனைவியை ஞாபக படுத்தியது.

இப்பொழுது, லட்சுமி இங்கு இருந்து இருந்தால் ..... கீதாவை அவளது மகள் என்று கூட கூறி இருக்கலாம்....

எங்க  அந்த பொண்ணு தேன்மொழி பாவம்ங்க.... இந்த ஒரு ஜோடி வளையலை அவகிட்ட நான் கொடுத்ததா சொல்லுங்க... பாவம் புள்ளத்தாச்சிங்க.... என்று தன் மனைவி கூறியது இன்று அவர் காதில் கேட்டது.

லட்சுமி அன்று நீ கொடுத்த நகைகளை என் தங்கை மீது இருந்த பாசத்தில் நான் தேன்மொழிக்கு கொடுக்க வில்லை.

ஆனால், இன்று அவளது மகள் நீ ஆசைப்பட்டபடியே உனது நகை மற்றும் பட்டு புடவையை கட்டி கொண்டு இருக்கிறாள்...

இது தான் விதி என்பதா??????

கீதா, அவளது தாயின் வயிற்றியில் இருக்கும் போதேயே அவளுக்கு ஆதரவாக நீ மட்டும் தான் இருந்தாய்....

கீதா, இன்று உயிரோட இருப்பதற்கும் நீ தான் காரணம்.

உன்னோடைய ஆசிர்வாதம் அவளுக்கு என்றும் உண்டு என்பது எனக்கு நன்றாகவேயே தெரியும்.

அதேயே போல, ரிஷியும் கீதாவும் சேர்ந்து வாழவும் நீ தான் துணை நிற்க வேண்டும். என்று மனதிற்குள் தனது மனைவிடம் கேட்டு கொண்டார்.

அதற்குள், கீதா ரிஷியின் பக்கத்தில் வந்து விட்டாள்...... பருவதம் அம்மாள் கீதாவிற்கு திருஷ்டி சுற்றி தன் கைகளால் நெட்டி முறித்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எப்படி இந்த நகை புடவை எல்லாம் epadi உனக்கு கிடைத்தது என்று கண்களாளேயே கேட்டார்.

கீதாவும், ரிஷியை கண் காட்டினாள்....

பருவதம் அம்மாவிற்கு அனைத்தும் புரிந்து விட்டது.

கீதாவிற்கு, தான் நேற்று கொடுத்த நகையை போடா விடாமல்... ரிஷி, அவனது தாயின் நகையையும் புடவையும் கொடுத்து இருக்கிறான்.

திரும்பி, சதாசிவத்தை பார்த்து புன்னைகைத்தவர். பார்த்திங்களா அண்ணா .... நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை என்று ரிஷி மீது கோபப்படுவதை போல காட்டி கொண்டார்.

ரிஷியும், அவரது பொய்யான கோபம் புரிந்து பருவதம் அம்மாள்யை  பார்த்து அசடு வழிந்தான்.

சதாசிவமும் ரிஷியை பார்த்தார். ரிஷியோ, உங்களிடம் அனுமதி வாங்கி இனி நான் ஏதும் செய்ய வேண்டியது இல்லை.

அதற்க்கான தகுதியை நீங்க இழந்த ரொம்ப நாள் ஆச்சு என்று குற்றம் சாற்றும் பார்வையை தனது தந்தையை மீது வீசினான்.

அவனது பார்வையை புரிந்து கொண்டவர். என்னிடம் கேட்காமல் நீ கீதாவிற்கு நகைகள் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை.... என்னிடம் இருக்கும் அனைத்தும் உனக்கு மட்டுமேயெ...

ஆனால், நாளை கீதாவிற்கு உண்மை தெரிய வரும்பொழுது காதலோடு  நீ கொடுத்த நகைகள் கூட உனக்கு எதிராக திரும்பி விட கூடும்.

நான் செய்த தவறை என்னால் திருத்த முடியாது என்பது எனக்கு தெரியும்.... ஆனால், உன்னை அது எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பது தான் என் ஆசை.....

இன்று நான் செய்வது எல்லாம் உனக்கு தவறாக தெரியலாம்.....  ஆனால், எதிர்காலம் உனக்கு அனைத்தையும் புரிய வைக்கும் என்று ரிஷியின் முகத்தை பார்த்தவரேயே மனதில் நினைத்து கொண்டார்.

சதாசிவம், மனதில் நினைத்ததை அறியாத ரிஷி அவரை முறைத்து கொண்டு இருந்தான்.

சிவகாமி அம்மாவிற்கு அந்த இடத்தில் இருக்க கூட பிடிக்கவில்லை.

பார்த்தியா டா கோபி .... சேகர் யோட பொண்டாட்டின்னு உள்ள வந்த.... அப்புறம் குழந்தையை பார்த்துக்குறேனு சொன்னா... ரிஷியை காதலிக்குறானு சொன்னாங்க.... இப்ப பாரு, அந்த வீட்டு எஜமானி அம்மாவா மாறிட்டா..... எவ்ளோ நகை போட்டு இருக்க பாரு....

எப்படி டா.... எல்லாரையும் அதுக்குள்ள கைக்குள்ள போட்டுக்கிட்டா ..... என்று பொருமி தள்ளினார்.

அக்கா.... நீ பேசுறது யார் காதுலையாவது விழ  போது கொஞ்ச நேரம் பேசாம இரு... என்று சிவகாமி அம்மாவை அடக்கினான்.

பையன் வீட்டு சார்பாக சதாசிவம் தாம்பூல தட்டை  எடுத்து கொடுக்க பருவதம் அம்மாள் கீதாவின் தாயார் என்ற முறையில் இருந்து தட்டினை பெற்று கொண்டார்.

கீதா நன்றியுடன் பருவதம் அம்மாளை பார்த்து கை கூப்பினாள். அவளது கண்கள் கலங்கி இருந்தது.

பருவதம் அம்மாள் அழக்கூடாது என்று சைகை செய்தார். கீதாவும் சரி என்று தலை ஆட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.