(Reading time: 10 - 20 minutes)

மணமக்கள் இருவரும் மாலை மாற்றி கொண்டனர். கீதா, ரிஷியை மாலை மாற்றும் போது கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவளது கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் சிவந்து இருந்தது. நேற்று, ரிஷியின் மார்பில் உரிமை உடன் சாய்ந்தவள் தான்.... ஆனால். இன்று என்னவாயிற்று.....  ஓர கண்ணால்  ரிஷியை பார்த்தாள் ஆண்மைக்கேயே உரிய கம்பிரத்தில் அழகுடன் உட்கார்ந்து இருந்தான்.....

ரிஷி, என்னுடைய கணவன் என்று மனதில் நினைத்து கொண்டாள்..... சிறகு இன்றி வானத்தில் பறப்பது போல உணர்ந்தாள்.

அடுத்து, கீதாவும் ரிஷியும் மோதிரம் மாற்றி கொண்டனர்.

கீதா, தன் அருகில் உட்கார்ந்து இருந்ததில் இருந்து ரிஷியின் பாடுதான் திண்டாட்டம் ஆகிவிட்டது.

அவளது, அழகு அவனை கவர்ந்து இழுத்தது.... சந்தோஷத்திலும் வெட்கத்திலும் அவளது முகம் பௌர்ணமி நிலவு போல பிரகாசமாக ஜொலித்தது.

அதும் தனது தாயின் பட்டு சேலையும் நகையும் அவளுக்கு மிக பொருத்தமாக இருந்தது.

ரிஷி, அவனது தாயுடன் அதிக நாட்கள் இருக்கவில்லை.... அதனால், ரிஷியும் தனக்கு தாய் இல்லாததை  பற்றி  பெரிதாக கவலை பட்டதும் இல்லை.

கீதா, மருத்துவ மனையில் இருந்த போது தான் தனது தாய் லக்ஷ்மியை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டான்.

ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பது தன் காதல் கணவன் என்று தெரிந்தும் எதிர்த்து நின்று இருக்கிறார்.

கடைசிவரைக்கும் அந்த பெண்ணிற்காக போராடி இருக்கிறார்.... கீதா, இப்பொழுது உயிர்யுடன் தன் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பதற்கு காரணம் கூட அவர்தான்.

ஒருவேளை,  அம்மா தன் சிறுவயதில் இறந்ததற்கு காரணம் கூட இதுவாக இருக்கலாம்.

இப்பொழுது எல்லாம் ஏனோ அவன் மனம் தனது தாயின் மடியை அதிகம் நாடியது ஏன் என்று அவனுக்கேயே தெரியவில்லை.

(அதற்குள் ரிஷியின் மனசாட்சி அவனை கேள்வி கேட்க ஆரம்பித்தது... அப்படி பட்ட தாய்க்கு பிறந்த நீ இப்படி செய்யலாமா?? உன்னை உயிர் யாக நினைப்பவளை உன் சுயநலத்திற்காக ஏமாற்றலாமா????இதை உன் தாய் மன்னிப்பாரா ???? உனக்கும் உன் தந்தையின் புத்தியே வந்து இருக்கிறது....உன் தந்தை தன் தங்கைக்காக கீதாவின் அம்மாவின் வாழ்க்கையில் விளையாடினார்... நீயோ,இப்பொழுது காதல் என்னும் பெயரில்  கீதாவின் வாழ்க்கையில் விளையாடுகிறாய்.... உண்மை தெரிய வரும் போது கீதா உன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு செல்ல தான் போகிறாள்... என்று ஆக்ரோஷத்துடன் கத்தியது).

ரிஷியால் தன் மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் தவித்தான். இவை அனைத்திற்கும் காரணமான தன் தந்தையின் மீது கொலை வெறி கொண்டான்.

ரிஷியின் மன நிலையை அவனது முகபாவத்தை வைத்தேயே க்ரிஷ் புரிந்து கொண்டான். ஒரு பக்கம் ரிஷியின் நிலையை நினைத்து அவனுக்கு பரிதாபமாக கூட இருந்தது.

அண்ணாவால் அண்ணியிடம் உண்மையை கூற முடியவில்லை. ஒரு வேளை அண்ணியிடம் கூறி இருந்தாள் இப்பொழுது இந்த நிச்சயதார்த்தம் நடந்து இருக்காது.

கண்டிப்பாக, அண்ணி வீட்டை விட்டு சென்று இருப்பார். பின், ரிஷி அண்ணாவின் நிலைமை என்னவாகி இருக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

ஏற்கனவேயே, அண்ணியை பிரிந்து மூன்று வருடம் கஷ்டப்பட்டுவிட்டார்.

சதாசிவம் சார் செய்த தப்பிற்கு அண்ணா என்ன செய்வார்???? கடவுளையே, அண்ணா அண்ணியின் மீது வைத்து இருக்கும் காதல் உண்மையானது....  அந்த காதல் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மனதிற்குள் வேண்டி கொண்டான்.

ரிஷியின் பின்னால் நின்று இருந்தவன் குனிந்து ரிஷிக்கு மட்டும் கேட்கும் விதமாய்  அண்ணா.... கண்டதை யோசிக்காதிங்க... அண்ணியை பாருங்க..... எவ்ளோ சந்தோசமா இருக்காங்கன்னு..... இப்ப இது தான் நமக்கு முக்கியம்.... முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கோங்க.... என்று கூறி நிமிர்ந்தான்.

அதேயே  நேரம், கீதாவின் பின்னால் நின்று கொண்டு இருந்த நித்யா அவளது ஜடையை சரிசெய்து விட்டு நிமிர்ந்தாள்.

தனக்கு பின்னால் நித்யா குனிந்து இருப்பது தெரியாமல் வேகமாக நிமிர்ந்தவான் அவளது தலையுடன் சற்று வேகமாகவே முட்டி கொண்டான்.

முட்டிய பின்தான் அது நித்யா என்று அவனுக்கு தெரிந்தது....

வலியுடன் தலையை தேய்த்து கொண்டவன் சாரி.... தெரியாம என்று சொல்வதற்கு முன் நித்யா முந்தி கொண்டாள்.

இன்னும்  கொஞ்ச நேரத்தில் கோபி தன்னை என்ன செய்ய போகிறானோ என்ற டென்ஷன்யில் நின்று கொண்டு இருந்தவாள்.

க்ரிஷ் இடித்ததில் காளி அவதாரம் எடுத்து இருந்தாள்.

ஹேய்! என்று கை நீட்டி கத்தியவளை க்ரிஷ் தன் வாய் மீது கை வைத்து அமைதியாக பேசு என்று சைகை செய்தான்.

அப்பொழுது தான் அவளும் தன்னை சுற்றி நடப்பதை பார்த்தாள். ஐயர் முகூர்த்த பத்திரிகையை வாசித்து கொண்டு இருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.