(Reading time: 10 - 19 minutes)

சரியாய் ஐந்தரை மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வந்துவிட மதுமிதாவின் நெருங்கிய சொந்தமென நான்கு பேரை மட்டும் வைரவன் அழைத்திருந்தார்.

வழக்கமான வரவேற்பு உபசரிப்புகள் முடிய பெண்ணை அழைத்து வருமாறு பெரியவர் ஒருவர் கூறினார்.

ஹாலிற்கு வந்தவள் அனைவருக்கும் பொதுவாய் வணக்கம் வைத்து நிற்க அவளையும் அமருமாறு ஸ்ரீகாந்த்தின் தாய் கூறினார்.

அவளுடன் அவர் எதார்த்தமாய் சில நிமிடங்கள் பேசியிருந்து விட்டு பெண்ணோடு தனியே பேசி வா என மகனை அனுப்பி வைத்தார்.

பக்கத்து அறைக்குள் இருவருமாய் அமர்ந்திருக்க ஸ்ரீகாந்தே பேச்சை ஆரம்பித்தான்.

“நீங்க எந்த ப்ளோர்ல இருக்கீங்க..ஒரே கம்பனில இருந்துருக்கோம் ஆனா பாத்துக்கவேயில்ல பாருங்க..”

“யா நா கூட அததான் நினைச்சேன்..நா த்ர்ட் ஃப்ளோர் பினான்ஸ் டிப்பார்ட்மெண்ட்..”

“ஓ..ஓகே..சோ..எனக்கு உங்களை பிடிச்சுருக்கு..வாட் இஸ் யுவர் ஒபினியன் இன் திஸ்..எதுவாயிருந்தாலும் சொல்லுங்க..நோ ப்ராப்ளம்..”

“எனக்கும் பெருசா எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்ல..பட் கல்யாணத்துக்கு அப்பறமும் வேலையை கன்டினியூ பண்ணுவேன்.ப்ரொப்பைல பாத்துருப்பீங்க..கேரியர் எனக்கு ரொம்ப முக்கியம்.இஃப் யூ டோண்ட் ஹவ் எனி இஷுஸ் இன் தட்..எனக்கு ஓ.கே தான்.”

“கமான் வேலைக்கு போறதெல்லாம் பொதுவான ஒரு விஷயமா மாறியாச்சு எப்பவோ..அதனால இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல..அதுமட்டுமில்லாம எந்த பேமிலி பேக்ரௌண்ட்ம் இல்லாத  மிடில்கிளாஸ் கேட்டகிரி தான் நாம..சோ வேலை ரொம்பவே தேவை தான்..நா எதார்த்தத்தை சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்கக..”

“இல்ல இல்ல நீங்க சொல்றது தான் ப்ராக்டடிகாலிட்டி..இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு..இந்த மேரேஜ் கமிட்மெண்ட் நினைச்சு கொஞ்சம் இல்ல ரொம்பவே பயம் இருந்துச்சு நவ் ஹேப்பி தட் அண்டர்ஸ்டாண்டபிலா பார்ட்னர் கிடைச்சுருகீங்க..”,என மறைமுகமாய் தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

அவளின் பதிலுக்கு சிரித்தவனாய் போலாமா என கேட்டு பெரியவர்களோடு சென்று அமர்ந்தனர் இருவருமாய்.

அவர்களின் சம்மதம் கிடைத்து மற்ற விஷயங்களும் எல்லாம் பொருந்தி வர திருமண தேதி குறித்து விடலாம் என முடிவு செய்து ஜாதகத்தை கொடுத்திருந்த ஜோசியரிடமே ஸ்ரீகாந்தின் தந்தை போனில் பேசி தேதியை முடிவு செய்தார்.

அடுத்த மாதத்தில் வரும் முகூர்த்ததில் நிச்சயம் செய்து மூன்று மாதத்திற்கு பின் வரும் முகூர்த்தத்தில் திருமணம் என முடிவு செய்தனர்.

வந்தவர்களை கவனித்து சிற்றுண்டி வழங்கி உபசரித்து என நேரம் வேகமாய் பறக்க கிளம்பும் நேரம் விடைபெறும் பொருட்டு ஒரு தலையசைப்போடு ஸ்ரீகாந்த் நகர அவளறியாமல் சிவந்த முகத்தை மறைக்கப் பாடுபட்டு தோற்றாள் மதுமிதா..

ஒருவழியாய் அனைவரும் கிளம்பிய பின் புடவையை மாற்றி இரவு பைஜாமாவிற்கு மாறியவள் ஹாலில் அமர்ந்திருந்த தாய் தந்தையோடு வந்து அமர்ந்து கொண்டாள்.

“ஷப்பா..என்ன காஸ்டியூம் மா இந்த புடவை முடில..எப்போ எங்க கழண்டுக்குமோனு பீதிலேயே வேற இருக்க வேண்டியிருக்கு..எப்படி நீயெல்லாம் நாள் பூரா இதையே போட்டுட்டு சுத்துற?”

“எல்லாம் பழக்கம் தான் டீ இப்போ என்னால நீ போடுற ஜீன்ஸை போட்டுட்டு பத்து நிமிஷம் கூட இருக்க முடியாது ஆனா அதான் உனக்கு கம்போர்டபிள்னு சொல்லுவ..அந்த மாதிரி தான்..”

“ம்ம் உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா..”

“சரி அது இருக்கட்டும் உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சுருக்கு தான..எந்த கட்டாயமும் இல்ல..பிடிக்கலனா சொல்லிடு டா..”

“ம்மா..கல்யாண தேதியே குறிச்சாச்சு இப்போ வந்து இப்படி சொல்ற சாய்ந்திரம் அப்பாவ மட்டும் திட்டின?”

“கல்யாணமே வேணாம்னு சொல்றதுக்கு தான் திட்டினேன்.நா மாப்பிள்ளை பிடிக்குதா இல்லையானு உன்னை கேட்கனும்..அதான் முறையும் கூட..எடுத்தோம் கவுத்தோம்னு செய்ற விஷயமா இது..உன் வாழ்க்கை டா..

நாங்க ஆயிரம் பேர்ட்ட விசாரிச்சு உனக்கு ஏத்த மாப்பிள்ளையா தான் கொண்டு வருவோம் ஆனா அது உன் மனசுக்கு பிடிச்சதா இருக்கனும் அதுதான் ரொம்பவே முக்கியம்.”

“லவ் யூ லவ் யூ மா..நீ ஏன் இவ்ளோ ஸ்வீட்டா இருக்க?”

“ஐயே கன்னத்தை எச் பண்ணாத டீ பச்ச குழந்தைனு நினைப்பு..”

“என்னடா மது அப்பாவ இப்படி டீல்ல விட்டியே..”

“ப்பா என்ன தான் சொல்லுங்க அம்மா அம்மா தான் நீங்க இவ்ளோ தெளிவெல்லாம் இல்லப்பா..பொண்ணு பாசத்துல ஓவரா திங்க் பண்ணுவீங்க..ஆனா அம்மா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான் எப்பவுமே..”

“ம்ம் அது என்னவோ உண்மைதான் உங்கம்மா இப்படி குடும்பத்தை பொறுப்பா கவனிச்சுகிட்டதுனால தான் என்னால நிம்மதியா வேலையை மட்டும் பாத்துக்க முடிஞ்சுது..அம்மா ஆல்வேஸ் கிரேட் தான்..”

“என்னப்பா இப்படி பொசுக்குனு சரண்டர் ஆய்ட்டீங்க..சோ சேட்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.