(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 40 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

கியிடம் அலைபேசியில் பேசியது அவனது தந்தை புகழேந்தி தான், அவன் அழைப்பை ஏற்றதும், “எங்கே இருக்கிறாய்?” என்றுக் கேட்டார்.

“நான் ரெஸ்ட்டாரன்ட்க்கு வந்துட்டேன் ப்பா.. அருள், இலக்கியா ரெண்டுப்பேரும் எழில் அத்தை வீட்டுக்கு போயிருக்காங்க..” என்று விவரத்தை கூறினான்.

“அப்படியா.. ரெண்டுப்பேரும் தனியாவா போயிருக்காங்க..”

“இல்லப்பா.. அமுதனும் அங்க போறதா இருந்ததால அவனோட அனுப்பிச்சிட்டு நான் இங்க வந்துட்டேன்..”

சரி அதுவும் நல்லதுக்கு தான், அருள் விஷயமாக உங்கிட்ட கொஞ்சம் பேச வேண்டும்.. வீட்டுக்கு வர முடியுமா?” என்றுக் கேட்டார். தனக்கு பிறகு இருக்கும் ஒரே ஆண்மகன் மகி, அவனிடம் முதலில் கலந்து பேசலாம் என்று தான் முதலில் அவனுக்கு அழைத்தார்.

என்ன விஷயமாக அருளைப் பற்றி பேச கூப்பிடுகிறார் என்பது தெரியாமல், “சரிப்பா நான் உடனே வீட்டுக்கு வரேன்..” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

மகி  பேசும்போது சுடரும் அவனது அருகில் தான் இருந்தாள். “மாமா பேசினாரா மகிழ்.. என்னவாம்?” என்று அவள் கேட்க,

“என்னன்னு தெரியல அருள் பத்தி பேசணும்னு சொன்னாரு.. அவ இல்லாத நேரம் பேச கூப்பிட்றாரு.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு உன்னை வீட்ல விட்டுட்டு அவங்களை கூப்பிட்டிக்கிட்டு வீட்டுக்கு போலாம்னு நினைச்சேன்.. ஆனா இப்போ அது முடியாது போல, சரி வா போற வழியில உங்க ஏரியாக்கிட்ட விட்டுட்டு வீட்டுக்குப் போறேன்.. அவங்க ரெண்டுப்பேரையும் அத்தைக்கிட்ட சேஃபா அனுப்பி வைக்க சொல்றேன்..” என்று சொல்ல,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அருள் விஷயமாக பேச அப்பா கூப்பிட்டார்..” என்ற வார்த்தையை கேட்டு அப்படியே உறைந்து போனவள், அடுத்து அவன் என்ன பேசினான் என்று தெரியாததால், தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.

அருள் விஷயமென்றால் கண்டிப்பாக அவர்கள் இருவரது திருமணத்தை பற்றி பேச தான் புகழேந்தி மாமா மகியை கூப்பிடுகிறார் என்று நினைத்து உள்ளுக்குள் பயந்தவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

மகி ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட்டதும், அங்கிருந்து தனியாக அவள் வீட்டுக்கு வரும்போது அமுதன் கிளம்பியிருந்தான். அதனால் அருளும் இலக்கியாவும் அங்கு இருப்பதால் அவர்களோடு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாததால், தனது அறைக்குச் சென்றவள், உடனே அமுதனுக்கு அழைப்பு விடுத்து விஷயத்தை சொல்லி புலம்பினாள்.

“கவலைப்படாத சுடர்.. இப்போ தானே பேசப் போறாங்க.. மகியும் அருளும் இதுக்கு ஒத்துக்கணுமில்ல.. மகிக்கிட்ட சீக்கிரமா நான் பேசறேன்..” என்று சொல்லி சமாதானப்படுத்த முயற்சி செய்தான் அவன்,

இங்கு வீட்டுக்கு வந்த மகியிடம் புகழேந்தி அருள்மொழியை பெண் கேட்டு சென்ற விஷயத்தை பற்றி கூறவும், “எதுக்குப்பா இப்பவே அருள்க்கு கல்யாணம் செய்ய அவசரப்பட்றீங்க.. அவ இப்போ தான் எக்ஸாமே எழுதி முடிச்சிருக்கா, இன்னும் ரிசல்ட் கூட வரல.. அடுத்து அவ மேல படிக்கட்டும்பா..  அப்புறம் கல்யாணத்தை பத்தி பேசலாம்..” என்றான்.

“அருள் கல்யாணம் செஞ்சுக்கிட்டு அப்புறம் படிக்கட்டுமே மகி.. கண்டிப்பா மாப்பிள்ளை வீட்ல படிக்க வைப்பாங்க..” என்று கலை சொல்ல,

“ஆமா மலர்க்கு அப்படி தான் வந்த சம்மந்தத்தை விட்டுடக் கூடாதுன்னு கல்யாணம் செஞ்சு வச்சோம்.. ஆனா அடுத்து வீட்டை பார்க்கணும், குழந்தையை பார்க்கணும்னு அக்கா படிப்பை பத்தி யோசிக்கலையே.. இப்படி அவசரமா கல்யாணம் செய்ய அப்படி என்ன அவசியம் இருக்கு அத்தை.. அவளுக்கு வயசிருக்கு, பார்க்க நல்லா லட்சணமா தானே இருக்கா.. அவளை கல்யாணம் செய்ய மாப்பிள்ளைங்க க்யூல நிப்பாங்க அத்தை..”

“அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டு வந்த நல்ல சம்பந்தத்தை விட வேண்டாம்னு தான் எனக்கு தோனுது.. இப்போ அவளுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்ல அவளுக்கு சின்ன வயசுமில்லையே, இருபது ஆயிடுச்சுல்ல.. இப்போ பேச ஆரம்பிச்சா கல்யாணம் முடியும் போது 21 ஆகிடும்..” என்று திரும்ப கலை சொல்லவும்,

“அப்படி வந்த முதல் சம்பந்தத்தையே முடிக்கணும்னு என்ன இருக்கு அத்தை..” என்று மகி கேட்டான்.

“இந்த சம்பந்தத்தை விடக் கூடாதுன்னு கலை நினைக்கிறா, அதை மறுத்து நாம என்ன சொன்னாலும் அவளுக்கு அதை ஏத்துக்க மனசு வராது.. அதனால் அவங்களை வரச் சொல்லி மாப்பிள்ளையை பார்ப்போம், அதுக்குப்பிறகு திருப்தின்னா  நம்ம அருளை கொடுக்கலாம்.. அப்போ கலைக்கும் நிம்மதியா இருக்கும்.. என்னங்க சொல்றீங்க?” என்று புகழேந்தியிடம் பூங்கொடி கேட்டார்.

“எனக்கும் அது தான் சரின்னு படுது..” என்று அவரும் அதை ஆமோதிக்க,

“எதுவா இருந்தாலும் முதலில் கலைக்கிட்ட அருள்க்கு சம்மதமான்னு கேட்டுட்டு முடிவு பண்ணுங்கப்பா..” என்று மகி கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.