(Reading time: 8 - 16 minutes)

ருள்மொழியும் இலக்கியாவும் வீட்டுக்கு வந்ததுமே, அனைவரும் சாப்பிட்டு முடித்து வரவேர்பறையில் அமர்ந்திருக்க அப்போதே புகழேந்தி அவளை நேருக்கு நேராக பார்த்து அவளை பெண் கேட்டு வந்த விஷயத்தைக் கூறினார்.

“என்னது அருள்க்கு கலயாணமா? அய்யோ பெரியப்பா அப்படி ஒரு தப்பை இப்போதைக்கு செஞ்சுடாதீங்க.. அருள்க்கு கல்யாணம்னா, உடனே அப்பா எனக்கும் ஒரு மாப்பிள்ளையை பார்க்க ஆரம்ப்ச்சிடுவாரு.. அதனால் அருள் கல்யாணத்தை கொஞ்சம் தள்ளிப் போடுங்க..” என்று இலக்கியா புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

“அடிப்பாவி எதுக்குல்லாம் கவலைப்பட வேண்டியிருக்கு உனக்கு..” என்று பூங்கொடி வாயைப்பிளக்க,

“ஆமாம் பெரியம்மா என்ன செய்ய எங்க அப்பாவை பத்தி தான் உங்களுக்கு தெரியுமில்ல..” என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“மாணிக்கத்தை பத்தி எங்களுக்கு தெரியாதா? அவன் கலையை விட அவசரக்காரனா ஆச்சே.. உனக்கு இன்னுமாடி மாப்பிள்ளை பார்க்காம இருக்கான்.. அதிசயமா இருக்கே.. பார்த்துடீ நீ வீட்டுக்கு போறதுக்குள்ள உனக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்சு இருக்க போறான்..” என்று பாட்டி அவளை கேலி செய்தார்.

“அய்யோ பாட்டி விட்டா நீங்களே என்னோட அப்பாக்கு போன் போட்டு மப்பிள்ளை பார்க்க சொல்லிடுவீங்க போல.. அப்படி எதுவும் செஞ்சு வச்சிடாதீங்க.. அவரே என்னவோ அதிசயமா அமைதியா இருக்காரு.. அது உங்களுக்கு பொறுக்கலையா?” என்று சொன்னதும் அனைவரும் சிரித்தனர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்னம்மா அருள் அமைதியா இருக்க.. மாப்பிள்ளை வீட்ல வர சொல்லட்டுமா?” என்று புகழேந்தி அவளைப் பார்த்துக் கேட்டார்.

“அதற்கு அருள் அவளது அன்னை கலையை பார்க்கவும், “இதுல உன்னோட விருப்பம் தான் முக்கியம்.. எதுக்காகவும் யாருக்காகவும் தயங்காத.. உன்னோட மனசுல இருக்கறதை சொல்லு.. உன்னை மீறீ எதுவும் நடக்காது..” என்று மகி கூறினான்.

“ஆமாம் அருள் உன்னோட விருப்பம் தான் முக்கியம், அம்மா ஆசைப்பட்ராளேன்னு யோசிக்காத..” என்று பாட்டியும் கூறினார். எங்கே அருள் அவளது அன்னைக்காக சம்மதித்து விடுவாளோ என்பது அவரது கவலை, அப்படி சம்மத்திதுவிட்டால் அவரது ஆசை நிறைவேறாதே,

மகளிடம்  முன்பே சொல்லியும் பார்த்துவிட்டார். “கொஞ்ச நாள் பொறு கலை, நான் புகழ்க்கிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லி மகிக்கும் அருள்க்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன்..” என்றதற்கு,

“அப்போதும் அண்ணன் இதுக்கு ஒத்துக்கலன்னா என்னம்மா செய்றது.. அண்ணன் என்னோட பொண்ணை விட்ற மாட்டாரு தான், ஆனாலும் எதிர்காலத்துல நிலைமை எப்படி வேணும்னாலும் மாறலாம்.. அதனால அருள்க்கு சீக்கிரம் கல்யாணம் செய்றது தான்ம்மா நல்லது.. அருள்க்கு முடிஞ்சா தனேம்மா அடுத்து மகிக்கும் நல்ல பொண்ணா பார்க்க முடியும்.. அதையும் நாம யோசிக்கணுமில்ல..” என்று சொல்லி அவரது வயை அடைத்துவிட்டார்.

அதனால் அருள்மொழியின் மனதை மாற்ற அவர் முயற்சி செய்தார். அன்னைக்கு இதில் விருப்பம் என்பது அருள்மொழிக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் இப்போது திருமணம் வேண்டாமென்பதும் அவளது எண்ணமாக இருந்தது. அன்னையின் பேச்சை எதிலும் மீறாதவளுக்கு இதற்கு என்ன பதில் கூறுவதென்பது யோசனையாக இருக்க,

“எதுவா இருந்தாலும் சொல்லு அருள்.. மகி, பாட்டி சொன்னது போல உன்னோட விருப்பம் தான் முக்கியம். அதனால நீ இப்பவே சொல்லணும்னு கூட இல்ல.. மெதுவா கூட சொல்லு..” என்று புகழேந்தி கூறினார்.

“ஆமாம் அருள் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லு.. அதான் பெரியப்பா உன்னோட விருப்பம்னு சொல்றாரே.. தைரியமா சொல்லு.. கலை அத்தைக்கு பயப்பாடாத..” என்று இலக்கியாவும் அவள் காதில் கிசுகிசுத்தாள்.

ஒருவேளை சார்லஸை மனதில் வைத்து பதில் சொல்ல தயங்குகிறாளோ என்பது போல் இலக்கியாவிற்கு தோன்றியது. ஆனால் அருள் பேசும் விதத்திலோ, இல்லை சார்லஸோடு பழகும் விதத்திலோ எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் அவள் மனது அவளுக்கே தெரியாமல் இருக்கலாமே, அதனால் அப்படி அவளிடம் இலக்கியா பேசினாள்.

புகழேந்தி, மகி, இலக்கியா, பாட்டி இப்படி அனவரும் அவள் விருப்பம் தான் முக்கியம் என்று சொன்னதால், தன் அன்னையை மீண்டும் ஒருமுறை பார்த்தவள்,

“எனக்கு இப்பவே கல்யாணம் செஞ்சுக்கிறதில் விருப்பமே இல்லை மாமா.. எப்படியோ இன்னும் 3,4 வருஷமாவது போகட்டும்னு தான் நான் நினைக்கிறேன்.. அதனால இப்போதைக்கு என்னோட கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாமே..” என்று புகழேந்தியிடம் கூறினாள்.

“உன்னோட விருப்பத்தை சொல்லிட்ட இல்ல.. இதுக்கு மேலே உன்னை கட்டாயம் படுத்த மாட்டோம் சரியா?” என்று புகழேந்தி சொல்லவும் அருள் மகிழ்ந்தாள் என்றால், மகள் தன் பேச்சை மறுத்தது குறித்து கலையரசி மனதளவில் வருத்தம் கொண்டார்.

உறவு வளரும்...

Episode # 39

Episode # 41

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.