(Reading time: 16 - 32 minutes)

“நா கிளம்புறேன் உனக்கு எப்போ வரத் தோணுதோ வா கண்ணம்மா..டேக் கேர்..”,என்றவன் சுலோச்சனாவிடம் தலையசைப்போடு விடைபெற்று விறுவிறுவென வெளியே சென்றுவிட்டான்.

அவன்அங்கிருந்து நகர்ந்ததும் வெண்பாவின் கண்கள் கண்ணீரில் நிறைந்தது.ஒரே நாளில் தன்னைச் சுற்றி இருந்த அனைத்தும் பொய்த்துவிட்டதாய் ஒரு பிரமை.என்ன நடக்கிறது என புரியாத போதும் அதை திவாவிடம் தெளிவுபடுத்த வேண்டும் என ஒரு மனம் முரண்டினாலும் அந்த பிரின்ஸிபாலின் பேச்சு அவளை ரொம்பவே நோகடித்திருந்தது.

முகம் கூட பார்த்திராதவர் ஏன் தங்களிடம் பொய் கூற வேண்டும் என எண்ணிணாள்.அதற்குள் அவளருகில் வந்த அன்னையின் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.

அந்த நேரத்தில் அவளுக்கான ஆறுதலாய் அவரை எண்ணிணாள்.”ம்மா ஏன் மா எனக்கு மட்டும் சந்தோஷம்னு ஒண்ணு நிலைக்கவே மாட்டேங்குது.முதல்ல உன்னையும் அப்பாவையும் பிரிஞ்சேன்..இப்போ திவா மேல இப்படி ஒரு பழி..நம்பவா வேண்டாமானு கூட தெரில..மனசு தவிக்குதும்மா..நா பாத்தது கேட்டது எல்லாமே பொய்யா இருக்க கூடாதானு தவிப்பா இருக்கு..”

“அழாத டா..கண்ணால நீயே பார்த்த அப்பறமும் அது பொய்யாகும்னு எப்படி நம்புற..ஆனா நீ அவரை பார்த்து நேராவே கேட்டுருக்கலாம் ஏன் இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் பண்ணாருனு..”

“முடியலையே மா..அவரு முகத்தை பார்த்து என்னால வாயை திறக்க முடில பேச ஆரம்பிச்சா கண்டிப்பா உடைஞ்சுருவேன்.நா கேட்டு அதை சமாளிக்க அவரு ஒரு பொய்யை சொல்லி அது பின்னாடி தெரிய வந்தா நா உயிரோடையே இருக்க மாட்டேன் மா..”

அத்தனை அழுகையிலும் அவனுக்காக பேசும் மகளை பார்க்க எரிச்சலாக இருந்தது.

“சும்மா இப்படி கோழை மாதிரி பேசாத வெண்பா..உன்னை மாதிரி பொண்டாட்டிங்க இருக்குறதுனால தான் இந்தமாதிரி சில ஆண்கள் தைரியமா தப்பு பண்றாங்க பொண்டாட்டி கிட்ட பொய் சொல்றாங்க..என்ன இருந்தாலும் பெரியவங்க பார்த்து வைக்குற கல்யாணம் போல வருமா..நீ இதெல்லாம் அனுபவிக்கனும்னு விதி போல..சரி விடு கொஞ்ச நேரம் தூங்கு..மார்னிங் பேசிக்கலாம்..”

அங்கு வீட்டிற்குச் சென்றவனை கண்ட சிந்தாம்மா,”என்னப்பா பாப்பா எங்க??”

“அவ அவங்க அம்மாவோட தங்கிட்டு வரேன்னு சொலிட்டா சிந்தாம்மா..நீங்க சாப்ட்டு படுங்க..நா வெளிலேயே சாப்ட்டேன்..”,என்றவன் சட்டென தனதறைக்குள் புகுந்து கொண்டான்.

கட்டிலில் விழுந்தவனுக்கு வெண்பாவின் வார்த்தைகளே காதில் உழன்றது.

“என் கண்ணம்மாவுக்கு இப்டியெல்லாம் கூட பேச தெரியுமா..அப்படி என்ன என் மேல கோவம்..எதுவாயிருந்தாலும் அதை நேரடியாக பேசித் தீர்த்திருக்கலாமே..ஒரு வேளை அந்த பைலை பார்த்துவிட்டாளோ!!”

என்றவன் வேகமாய் கப்போர்டை திறந்து தேட அந்த பைல் அவன் வைத்த இடத்திலேயேதான் இருந்தது.வேறு என்னதான் பிரச்சனையாய் இருக்கும் என குழம்பித் தவித்து தூக்கத்தை தொலைத்தான்.

காலையில் எழுந்தவள் பல்துலக்கி காபி குடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்புவதாகக் கூறினாள்.

“என்ன உன் ரோஷமெல்லாம் அவ்ளோ தான அதுக்குள்ள அவரை பார்க்காம இருக்க முடியலையா?”

“ம்மா நீயும் என்ன உன் பேச்சால கொல்லாத..”

“பின்ன என்ன நேத்து அப்படி பேசிட்டு காலையிலே விடிஞ்சும் விடியாமயுமா கிளம்பி நிக்குற..வேற எப்படி பேச சொல்ற?”

“தப்பு பண்ண அவரே தைரியமா இருக்கும் போது நா ஏன் இங்க ஓடி ஒழியணும்..அதனால தான் போறேன்..என்னதான் நடக்குதுனு பாக்குறேன்.எத்தனை நாள் அவரு என்னை ஏமாத்துறாருனு பாப்போம்.நா வரேன் முடிஞ்சா நீ ஊருக்கு கிளம்பிடு மா..இனி நா இங்க வரமாட்டேன்..”

“என்ன உளர்ற வெண்பா..அங்க உன்னை தனியா விட்டுட்டு என்னால எப்படி போக முடியும் பேசாம நீயும் என்கூடவே வந்துரு..நீ கஷ்டபட்டதெல்லாம் போதும்..உனக்கான வாழ்க்கை இது இல்ல..”

“என்ன சொல்ல வர்ற? ?என்னையும் அவரு மாதிரி இந்த தாலிக்கு துரோகம் பண்ண சொல்றியா..இந்த ஜென்மத்துல அவரு தான் என் புருஷன்..அதுக்காக அவரு என்ன தப்பு பண்ணாலும் பொறுத்துப்பேன்னு அர்த்தம் இல்ல..அதுக்கு அவருக்கான தண்டனையை அவரு கூட இருந்து நா கொடுப்பேன்.

நீ உன் வேலையை மட்டும் பாரு..தேவையில்லாம இதுல தலையிடாத..நா வரேன்..”

ஏதோ ஒரு உந்துதலில் தாயிடம் பேசிவிட்டு வந்தவளுக்கு அவனை எப்படி எதிர்கொள்வது என்று தவிப்பாகவே இருந்தது.வாழ்க்கை நொடியில் இப்படியெல்லாம் மாற வேண்டுமா என தன் விதியை நொந்து கொண்டவளாய் தன் பிளாட் வாசலை அடைந்தாள்.

கால்கள் பின்னிக் கொள்ள கஷ்டப்பட்டு நடையை போட்டவள் அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஒரு நெடு மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.

சிந்தாம்மா வந்து கதவை திறக்க ஒன்றும் கூறாமல் அவரை கடந்து உள்ளே செல்ல எத்தனித்தவளை,

“என்ன கண்ணு ஒரு வார்த்தை சொல்லிட்டு போய்ருக்கலாம்ல நா பயந்தே போய்ட்டேன்.தம்பி முகமே சரியில்ல எதுவும் பிரச்சனையோ என்னவோனு..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.