Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஐ லவ் யூ - 19 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - ஐ லவ் யூ - 19

I love you

ப்படி பொசுக்குன்னு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்ட? அந்த பொண்ணு நடிக்க வந்த பொண்ணுன்னு தெரிஞ்சே கல்யாணம்ன்னு பேச்செல்லாம் தேவையா?” – அரசி.

அரசியின் பேச்சு காதில் விழாததை போல சலனமே இல்லாமல் இருந்தாள் சந்திரிகா.

“உன்ன தான் கேட்குறேன்?” – அரசி சந்திரிகாவின் தோளை தட்டிக் கேட்டாள்.

“என்ன கேட்டீங்க?”

“வேறென்ன, சுரக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்!”

“கோபப் படாதீங்க. இந்த பொண்ணு பொய் அமுதினி பாவம்ல?”

“ஆமா ஆமா காதலின்னு நடிச்சு இப்போ கல்யாணத்துக்கும் தலைய தலைய ஆட்டுற ரொம்ப நல்லவ பாவம் தான்! பொய் அமுதினி, உண்மை அமுதினின்னு! என்ன கொடுமை இது!”

“அவளை ஏன் தப்பு சொல்றீங்க எல்லாம் இந்த வெற்றி செய்ற வேலை”

“உனக்கு எப்போவும் வெற்றி கிட்ட குறை கண்டுபிடிக்குற வேலை! சரி நீ சொல்ற மாதிரியே இருந்தாலும் கல்யாணம் செஞ்சு வச்சிருவீயா? அவனை நேரா கூப்பிட்டு நமக்கு எல்லா உண்மையும் தெரியும்னு சொல்லிடலாம். பய எப்படி முழிக்குறான்னு பார்க்கலாம். நாலு திட்டு திட்டலாம். அதோட எல்லாம் முடிஞ்சிடும்”

“அதெல்லாம் முடியாதுக்கா. வெற்றி முழிக்க மாட்டான், புதுசா ஏதாவது கதை சொல்வான்”

“எதுவா இருந்தாலும் கேட்ருவோம் சந்திரிகா”

“வேண்டாம் எல்லாம் நடக்குற மாதிரி நடக்கட்டும்”

“எது நடக்கட்டும்? கல்யாணமா? உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு? ஊரு பேரு யாரு என்னன்னு முழுசா தெரியாத பொண்ணை பிடிச்சு உன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க போறீயா?”

சந்திரிகாவிடம் மர்ம புன்னகை மட்டும் பதிலாக!

“எனக்கு எதுவும் புரிய மாட்டேங்குது சந்திரிகா. உன் மனசில என்ன இருக்கு?”

“பெருசா ஒன்னுமில்ல. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வாங்கன்னு நானும் எதிர்பார்க்கலை. அதும் அந்த பொண்ணும் சொல்வான்னு நான் நினைக்கலை”

“பணம் பத்தும் செய்யும். அதும் இந்த காலத்தில பத்து என்ன ஆயிரம் கூட செய்யும்”

“அப்படி தான் போலருக்கு”

“இப்போ உன் ஐடியா என்ன?”

“அவங்க கல்யாணம் நடக்க போறதில்ல. அதுக்கு முன்னாடி அவங்க வாயில இருந்தே உண்மையை வர வைக்க போறேன்”

“ஒருவேளை அது நடக்கலைனா?”

“அவங்களை மாதிரியே நாமளும் ஒரு பொய்யை கண்டுபிடிச்சு கல்யாணத்தை நிறுத்திரனும். அவ்வளவு தான்.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பொய் கல்யாணம் என்ற போதும் தமிழ்ச்செல்வியினுள் புது மாதிரி படபடப்பு ஏற்பட்டு இருந்தது.

இது ஒரு பொம்மை கல்யாணம். அதுவும் அந்த திமிர் பிடித்த, மரியாதை இல்லாத, தலைகனம் கொண்ட வெற்றியுடன் நடக்க இருக்கும் டிராமா கல்யாணம்!

வெற்றியை போலவே வேண்டுமென்றே தலையை சிலுப்பிக் கொண்டாள்.

ஊர் உலகத்தில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் அவரவர் மனைவியை பார்த்து பயந்து நடுங்குகிறார்கள், இவனையும் கல்யாணத்திற்கு பின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.

அவளின் பகல் கனவை கலைத்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கே வந்தான் வெற்றி.

“இந்தா cz காலேஜில உனக்கு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் அட்மிஷன் வாங்கிட்டேன்”

இன்ப அதிர்ச்சியுடன் அவன் தந்த அட்மிஷன் பேப்பரை கையில் வாங்கியவள் அதில் இருந்த அவளின் பெயரை பெயரை படித்து சந்தோஷப் பட்டாள்.

அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தவனுக்கு நன்றி சொல்ல நிமிர்ந்து பார்த்தால், அவன் அவளிடம் இன்னுமொரு பேப்பரை நீட்டினான்.

“இது நான் சொன்ன லீகல் பேப்பர். பொறுமையா நல்லா படிச்சு கையெழுத்து போட்டுக் கொடு. சந்தேகம் இருந்தா அதில இருக்க லாயர் ஆபிஸ்க்கு போன் போட்டு கேளு. என் பேரை சொன்னா சீனியர் லாயரே பேசுவார்”

பேசி முடித்து விட்டு வந்தது போலவே அவன் சென்று விட, தமிழ்ச்செல்வி புரியாத உணர்வில் நின்றாள்.

இலவசமாக எதுவும் கிடைப்பதில்லை. அவளின் எதிர்காலத்திற்காக அவள் பணயம் வைக்க போவது அவளின் கல்யாண வாழ்க்கையை.

அவளுக்கு கல்யாணத்தின் மீது பெரிய ஈடுபாடும் இல்லை. ஊரில் நடக்க இருந்த அந்த கர்ண கொடூர கல்யாணத்திற்கு இந்த டிராமா கல்யாணமே மேல்!

இதனால் அவளுக்கு உண்மையான திருமணம் நடக்காவிட்டாலும் பரவாயில்லை. மாய்ந்து மாய்ந்து குடும்பத்தை காப்பாற்றும் வேலை அவளுக்கு எதற்கு? அதில் அவளுக்கு விருப்பமும் இல்லை.

பேனாவை எடுத்து வெற்றி கொடுத்த காகிதத்தில் கையெழுத்து போட போனவள், கடைசி நிமிடத்தில், கையெழுத்து போடாமல் யோசித்தாள்!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்!

தொடரும்!

Episode 18

Episode 20

Go to I Love You story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Chillzee Story

On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 19 - Chillzee Storymadhumathi9 2019-01-15 06:59
Nice epi. :clap: (y) waiting to read more. :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 19 - Chillzee StoryRaVai 2019-01-14 13:07
பொங்கல் வாழ்த்துக்கள்!
ஆமாம், சில்ஸீ டீம் ஒரு பக்க தொடர்கதை சாதனை படைக்கப் போகிறார்களா? புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 19 - Chillzee StoryAdharvJo 2019-01-14 12:20
Ouch matha ji's bale bale but aunty unga plan sounds fishy :Q: ninga cancel.panuvingan thonalai let's wait and watch... interesting update ma'am 👏👏 prenupital agreement la entha change-um illaye 😜 selvi eyes finger nah hand vittu attungal 👍😍😍 good luck! Thank you team. Happy Thai thirunal 🌸🌸
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 19 - Chillzee Storymahinagaraj 2019-01-14 12:06
வாவ்... சோ கியூட்... :clap: 👏👏
ரெண்டும் செம ஜோடி... ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 10 Aug 2019 22:46
“தமிழ்! தமிழ்ச்செல்வி! தமிழ்!”

கனவு பிரதேசத்தில் மேகங்கள் நடுவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தமிழ்ச்செல்விக்கு யாரோ எங்கேயோ கூப்பிடுவது போலக் கேட்டது.

“தமிழ்!”

இப்போது உரக்க அழைத்தது குரல்!

டக்கென்று எழுந்து அமர்ந்தாள். எழுந்த வேகத்தில் கீழே விழப் போனவள் எப்படியோ சமாளித்துக் கொண்டு திவானின் கைப்பிடியை கெட்டியாக பிடித்துக் கொண்டு விழாமல் சமாளித்துக் கொண்டாள்.

***********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-32
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 03 Aug 2019 20:49
வேக வேகமாக ஓடிய மரங்களை ரசித்துப் பார்த்தாள் தமிழ்ச்செல்வி.

பிரவுனும், பச்சையும் கலந்த கோடுகளைப் போல அவை ஓடி மறைவதை பார்க்க அவளுக்குப் பிடித்திருந்தது.

முதல் வகுப்பு ட்ரெயின் பயணம் இந்த அளவுக்கு கூட குதூகலத்தை கொடுக்கா விட்டால் எப்படி?

குடும்பத்தினர் மொத்தமாக கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி இந்த பயணத்தை நிறுத்த என்ன எல்லாமோ செய்துப் பார்த்தான். ஆனால் ராஜமாதாவின் முன் ஒன்றும் எடுப்படவில்லை.

சொகுசான இருக்கையில் காலை நீட்டி அமர்ந்துக் கொண்டாள் தமிழ்ச்செல்வி.

************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-31
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 20 Jul 2019 21:01
கிங் – க்வீன் suite போல இரண்டு பகுதிகளை கொண்ட விஸ்தாரமான அறை அது. வெற்றி ஒரு பகுதியை எடுத்துக் கொண்டிருந்தான். தமிழ்ச்செல்வி இன்னொரு பகுதிக்கு இன்று மாறி இருந்தாள்.

ஒரே அறை என்றாலும் இரண்டு பகுதிக்கும் தேவைக்கு அதிகமான ப்ரைவசி இருந்தது.

இடைப்பட்ட பகுதியில் இருந்த கட்டில், டிவி போன்ற வசதிகளை வெற்றியை வைத்துக் கொள்ள விட்டு விட்டு அந்த க்வீன் பகுதியை மட்டும் அவளுக்காக எடுத்துக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி.

இரவு தூங்குவதற்கு முன் அவள் இருந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு செல்ல இருந்த கதவை மூட முயன்றாள்.

******************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-30
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 06 Jul 2019 18:47
“அதென்ன அது நான் எதை சொன்னாலும் கேட்க கூடாதுன்னு ஒரு அடம்?” – சந்திரிகா.

கேள்வியில் எரிச்சலும் கோபமும் கலந்திருந்தது.

“அடமும் இல்லை படமும் இல்லை. அந்த வீட்டுல இருக்குறது எங்களுக்கு வசதியா இல்லம்மா” – வெற்றி.

“காதலிச்சு, அடம் பிடிச்சு, வீட்டை விட்டு வந்து கல்யாணம் செய்துக்கிட்டவங்களுக்கு தனி வீடு வசதியா இல்லையாமே! இதென்ன புது கதையா இருக்கு!?” – அரசி.

*********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-28
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 29 Jun 2019 17:35
தமிழ்ச்செல்வி இதுவரை தங்க செயின் போட்டுக் கொண்டதில்லை. இப்போது அவள் கழுத்தில் கனமான தங்கத்தாலி இருந்தது.

அதை பார்த்து அவளுக்கு சந்தோஷமாகவும் இல்லை வருத்தமாகவும் இல்லை!

அவளுடைய தற்போதைய பிரச்சனை தலைவலி! தலைவலி என்றால் சாதாரண வலி இல்லை, தலையைப் பிளப்பது போல வலித்தது!

இந்த தலைவலி போதாது என்று அங்கிருந்த அமைதியான சுழல் கூடுதலாக அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

பொய்க் கல்யாணம்! சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிந்த உடன் நேராக வீட்டிற்கு போகலாம் என்று அவள் நினைத்தது நடக்கவில்லை.

**********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-27

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top