(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01 - கண்ணம்மா

Un manathil iruppathu naanum en kathalum mattume

காதலியியின் கடிதம்

என் அன்பே,

இங்குள்ளார் எல்லோரும்

சேமமாய் இருக்கின்றார்கள்;

என் தோழியர் சேமம்!

வேலைக்காரர் சேமம்! இதுவுமன்றி

உன்தயவாம் எனக்காக உன்வீட்டுக்

களஞ்சியநெல் மிகவுமுண்டே,

உயர் அணிகள் ஆடைவகை ஒவ்வொன்றில்

பத்துவிதம் உண்டு. மற்றும்

கன்னலைப்போல் பழவகை பதார்த்தவகை

பட்சணங்கள் மிகவுமுண்டு.

கடிமல்ர்ப்பூஞ் சோலையுண்டு. மான் சேமம்.

மயில் சேமம். பசுக்கள் சேமம்.

இன்னபடி இவ்விடம்யா வரும் எவையும்

சேமமென்றன் நிலையோ என்றால்,

'இருக்கின்றேன்; சாகவில்லை' என்றறிக.

இங்ஙனம் உன்,

எட்டிக்காயே

   ஏய்.... நிறுத்து நிறுத்து. என்ற குரலைக்கேட்டு சிரித்தாள் நம் காவியத்தின் தலைவி.

என்ன   இது, நான் உன்னை என்ன கேட்டேன் நீ என்ன டீ சொல்லிடே போர? வேகமா எதையோ எழுதி வேறு வைத்திருக்க எனக்கு நீ சொன்னது பாதிக்கு.. ஏன் முக்கால் வாசி கூட புரியவில்லை டி.  தமிழில் எழுத சொன்னா என்ன பௌவ் ஏதோ வேறு லாங்வேஜ்ல லாம் சொல்ர? ஆமாம் நடுவுலலாம் ஏதோ சொன்னியே அதெல்லாம் என்ன லாங்வேஜ் டி என்று படு சீரியசாக கேட்டாளே ஒரு கேல்வீ....

லக்ஸ் கொஞ்சம் கிட்ட வாயேன் என்று அதுவரை இவள் கேட்ட ஒரே காரணத்திற்காக இவள் காதலனுக்கு கொடுக்வென காதல் கடிதத்தை டிக்டேட் செய்தவள் இவளை அழைக்க நம் உயிர்த் தோழியல்லவா நம்மைப் பாசமாக அழைக்கின்றாள் என்று நம்பி அவள் அருகில் சென்றாள் லக்ஸ். என்ன பௌவ் என்று கேட்டபடி.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தப்.... என்ற ஒலியுடன் அவள் காதுகலிலே விழுந்தது அவள் தோழி அறைந்த அரை. பாவமாக முகத்தை வைத்து கொண்டு என்ன பௌவ் இப்படி பண்னிடாய் என்று அவள் வருத்தக் குரலுடன் கேட்க ஒரே ஒரு நொடி ஐயோ.... தோழியை அடித்து விட்டோமே என்று பௌவ்விர்க்கும் சற்று மனம் காயதான் செய்தது. ஆனால் அது தோன்றிய அடுத்த நொடியே இவளை ஒண்ணு இல்லை தர்ம அடி அடித்திருக்க வேண்டும் என்று தோன்றி விட்டது அவள் அடுத்துச் சொன்ன வார்த்தைகளை கேட்ட பின்.

பின்ன என்னங்க இவளே எம்.ஏ தமிழ் லிட்ரேச்சர். ஐயா திரு பாரதி தாசன் அவர்கள் எழுதிய காதல் கடிதத்தை., தான் மிகவும் ரசித்ததில் இதுவும் ஒன்றான இந்தப் படைப்பை இவள் சொல் அது என்ன லாங்வேஜ் என்று கேட்டால் என்னங்க செயரது  அதுவும் பாரதிதாசன் அந்தக் காதல் கடிதத்தை ஒரு பெண் எழுதினால் எப்படி இருக்கும் என்று எழுதியது போல, அவள் எழுதிய கடிதத்திற்கு அவனிடம் இருந்து வரும் பதில் போல ஒரு ரிட்டர்ன் லெட்டர்ரையும் படைத்திருப்பார். அதை மிகவும் ரசித்து படித்திருக்கிறாள் நம் பௌவ். அந்த கடிதத்தின் பதிலையும் படிக்க வேண்டும் என்று உள்ளதல்லவா? எனக்கும் தான்.

எனவே இதோ அந்தப் பதில் கடிதம்.

காதலன் பதில்

செங்கரும்பே,

உன்கடிதம் வரப்பெற்றேன்.

நிலைமைதனைத் தெரிந்து கொண்டேன்.

தேமலர்மெய் வாடாதே! சேமமில்லை

என்றுநீ தெரிவிக் கின்றாய்

இங்கென்ன வாழ்கிறதோ? இதயத்தில்

உனைக்காண எழும்ஏக் கத்தால்,

இன்பாலும் சர்க்கைரையும் நன்மணத்தால்

பனிக்கட்டி இட்டு றைத்த

திங்கள் நிகர் குளிர்உணவைத் தின்றாலும்

அதுவும் தீ! தீ! தீ! செந்தீ!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

திரவியஞ்சம் பாதிக்க இங்குவந்தேன்.

உனை அங்கே விட்டுவந்தேன்!

இங்குனைநான் எட்டிக்காய்

என நினைத்ததா யுரைத்தாய்; இதுவும் மெய்தான்.

இவ்வுலக இன்பமெலாம் கூட்டிஎடுத்

2 comments

  • :clap: nalla thodakkam.vaaltugal.peyargal arumai.adutha padhivai padikka miga aavala kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL: <br /> :Q: ondru solla vendum.sollalaama? Kathaiyil niraiya ezhuthu pizhai irukku.sari pannikkonga :-) (y) All the best.
  • நல்ல தொடக்கம் தோழி.... :clap: :clap: <br />பெயர்கள் அனைத்தும் அருமையே.. :GL: <br />சூப்பர் லக்ஸ் , பௌவ்... :GL: <br /> :thnkx:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.