(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - தாரிகை - 30 - மதி நிலா

series1/thaarigai

சந்த காலத்தின் துவக்கம்..!! துளிர்விடத்துவங்கியிருந்தது மலர்கள்..!! இதழ்கள் விரித்து வண்ணாத்திகளை வரவேற்றுக்கொண்டிருந்த சாமந்தியில் நிஷாவின் ஸ்பரிசம்..!! சிலிர்த்துத்தான் போனது சாமந்தி..!!

சிங்கார சிலிர்ப்பில் தான் மலர்வளை கொய்யவந்தவள் என்பதை மறந்தே அதனுடன் கதைக்கத்துவங்கியிருந்தாள் நிஷார்த்திகா..!!

பள்ளியின் மணியோசை செவியறையில் அறைந்தபோதும் சாமந்தியைவிட்டு நகர்ந்திட இயலவில்லை அவளால்..!! இதமான ஒரு எண்ணம் மனதை வியாபித்திட அப்படியே இருந்துவிட மனம் தவித்தது அவளுக்கு..!!

“கிளாசுக்குப் போகமா இங்க என்ன பண்ற பாப்பா..??”, பள்ளியின் காவலாளி குரல் கொடுக்கவும்தான் நடப்புக்கே வந்தாள் அவள்..!!

“என்ன தாத்தா சொன்னீங்க..??”, புரியாமல் இவள் கேட்டிட.. இப்பொழுது அழுத்தமாய் மணி அடித்துவிட்டதை அவர் சொல்ல..!! தலையில் தானாக கொட்டு வைத்துக்கொண்டவள் அவசரமாய் ஓட்டம் எடுத்திருந்தாள்..!!

ஏழு மலை ஏழு கடல் தாண்டிச் செல்வதுபோல் இரெண்டிரண்டு படிகளைக் கடந்து ஒன்பதாம் வகுப்பு முதல் பிரிவுக்குள் அவள் நுழைந்திட.. வழக்கமாய் ஒலித்திடும் கேலிப் பேச்சுகள் இன்றும் தொடர்கதையாய்..!!

வகுப்பில் ஆசிரியர் இன்னும் வராததால் மானாக்கர் சலசலக்க கடைசி வரிசையில் மௌனமாய் அமர்ந்துகொண்டாள் குழந்தை..!!

ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலக்கும்

ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலக்கும்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டமைய்யா

நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டமைய்யா

அந்த வருடம் வெளியாகியிருந்த படப்பாடலை மூவர் சத்தமாக பாட.. வகுப்பறை முழுவதும் சிரிப்பலை..!! கூடவே நான்கு மானவர்கள் வேறு அந்தப் பாடலில் வரும் கதாப்பாத்திரம் செய்வதுபோல் கைகளை தட்டி நிஷாவின் முன் அப்படியும் இப்படியும் ஆடிட.. சலனமில்லா பார்வைகள் அவளிடம்..!!

முதல் சில நாட்கள் வருத்தப்பட மனது இறுகிவிட்டதால் அனைத்தையும் ஒரு பார்வையாளராக பார்க்கடத்துவங்கிவிட்டிருந்தாள் அவள்..!!

இதுவரை வீட்டினர் யாருக்கும் தன்னைப் பற்றி அனைவரும் அறிந்துகொண்டனர் என்பதை அவள் தெரிவித்திருக்கவில்லை..!! என்னவோ தான் தான் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஆழமாய்..!!

“என்னடா இது இப்படி மரமாதிரி உட்கார்ந்திருக்கு..??”, உலகிலுள்ள மொத்த கேலியையும் குரலில் தேக்கி ஒருவன் நக்கலடிக்க..!!

“நானா இருந்தா அப்படியே நாண்டுக்கிட்டு செத்திருப்பேன்..”, என்றான் மற்றொருவன்..!!

அனைவரின் ஒரே குறிக்கோள் பெண்ணவளை பள்ளியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதே..!!

குனிந்த தலை நிமிர்த்தாது நிஷா புத்தகத்தில் தன்னைத்தானே புகுத்திக்கொள்ள.. அதுவும் பறிக்கப்பட்டது அவளிடமிருந்து..!!

“புக்கைக் கொடு வினோத்..”, இவள் அந்தப் பையனிடம் மெதுவாகத்தான் கேட்டிருந்தாள்..!!

“முடியாது.. என்ன பண்ண முடியும் உன்னால..??”, என்றவன் அதைத்தூக்கிப் பிடித்து விளையாட..!! நிஷா அதை அவனிடமிருந்து பறித்திடும் முயற்சியில்..!!

“ஹே.. கிட்ட வராத தள்ளிப்போ..”, வினோத்தின் கைகளை இவள் பிடித்து புத்தகத்தைப் பறிக்க முயல உதறித்தள்ளியிருந்தான் அவன்..!!

கால்களைத் தரையில் அழுத்தமாய் பதிக்காத்தால் இவள் தடுமாறி கீழே சாய்ந்து மேஜையில் இடித்துக்கொள்ள.. நல்லா வேணும் என்ற எண்ணம் மட்டுமே அனைவருக்குள்ளும்..!!

தட்டுத்தடுமாறி இவள் எழ முயல மீண்டும் சிலரால் கீழே தள்ளப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாள் நிஷா..!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அழுகை வரும்போல் இருந்ததுதான்..!! அழவில்லை அவள்..!! அது பலவீனப்படுத்தும் என்பதால் அதை விழுங்கிக்கொண்டவள் சுற்றி நின்றுகொண்டிருப்பவர்களைப் பார்க்க.. அனைவரும் அவளைக் காயப்படுத்திவிடும் முனைப்பில்..!! அது என்னவோ அவளை காயப்படுத்துவதே தங்களது தலையாய பணி என்பதுபோல் இருந்தது அவர்களது செயல்கள்..!!

“ஆமா நீ ஏன் பிச்சை எடுக்காம இங்க வந்து எங்க உசுற வாங்கற..??”, தலையில் அடித்தபடி வினோத்தான் முதலில் ஆரம்பித்தான்..!!

மௌனமே பதிலாய் அவளிடம்..!!

“பிச்சை எல்லாம் ஓல்ட் பேஷன் மச்சி.. இப்ப எல்லாம் வேற பிஸ்னஸ் பண்றாங்க எல்லாரும்..”, மற்றொருவனின் தொனியில் இவள் மனம் அருவருப்பில் சுருங்க.. அதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளாமல் இன்னும் இன்னும் அவளை தாழ்த்தி நடத்துவதிலேயே குறியாக இருந்தனர்..!!

அனைத்துமே மாயை என்பது ஒருவருக்கும் அங்கு புரியவில்லை..!! தனிமை படுத்தப்பட அனைவரும் போராடி முன்னேறத் துடித்திட.. சுற்றமே அவர்களுக்கு எதிரி என்று புரிபடவில்லை எவருக்கும்..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.