(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 27 - லதா சரவணன்

kadhal ilavarasi

லெக்ஸின் மொபைல் போனில் சத்யாவும் நிக்கோலஸீம் தெரிந்தார்கள். ஆங்காங்கே ரத்தத் திட்டுகளோடு, நம்ம போலீஸ்காரங்க நல்லா கவனிச்சி இருக்காங்க போலயே 

பின்னே நாட்டுக்குத் துரோகம் செய்தா சும்மாவிட்டுடுவாங்களா ? எனக்கு தெரிந்து இதெல்லாம் கம்மிதான் என் நண்பன் அங்கே சீனியர் போஸ்ட்டில் வேலை பார்க்குறான். இவங்க ரெண்டுபேரையும் கோர்ட்டு கேஸீன்னு அலைய வைக்கப் போறதில்லையாம் நேரா என்கவுண்டர் தானாம். நாளைக்கு கோர்ட்டுக்கு ஆஜர் பண்ற வழியிலே தப்பிச்சிப் போறா மாதிரி ஐடியா பண்ணி போட்டு தள்ளப் போறதா சொன்னான். 

ஆனால் சத்யாவுக்கு நீ வந்து அவனைக் காப்பாத்துவேன்னு இன்னமும் நம்பிக்கை இருக்குப்போல நான் செய்தது தப்புதான் எப்படியாவது ஒருமுறை பரத்தை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டானாம்.

எதற்காம் இன்னும் என்னை ஏமாற்றுவதற்காகவா ? டிபார்ட்மெண்டில் இருந்து எனக்கும் தகவல் வந்தது நான் மறுத்துவிட்டேன் வேண்டாம் அலெக்ஸ் அவன் செய்த துரோகத்தை எவ்வளவு முயன்றும் என்னால் மறக்க முடியவில்லை, எனக்கேயெனக்கென்று என்னை புரிந்து கொண்ட உண்மையான நண்பன் என்று நினைத்தேன். இந்த புரோஜெக்ட் பற்றி சொன்னபோது கூட நான் அரசாங்கம் தொடர்பான எல்லா சிக்கலையும் அவன் கேட்காமலேயே சரி செய்து கொடுத்தேன். அளவுக்கதிகமாக பணமும் போட்டேன். எல்லாம் நம் நாட்டிற்காக ஏதாவது செய்கிறோம் ஒரு சிறு கல்லையேனும் நகர்த்துகிறோம் என்ற சந்தோஷம் ஆனால் தன் கையே கண்ணைக் குத்துவதைப் போல என்னையே இந்த சதிவலைக்குள் சிக்க வைத்து விட்டானே. 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இந்த புரொஜெக்ட்க்கு உண்டான லைசென்ஸ் எல்லாமே என் பெயரில் தான் உள்ளது. அப்படியிருக்க எனக்கு எதிராக சத்யா விரித்த வலையில்இருந்து என்னைக் காப்பாற்றியது பத்மினிதான். தன் உயிரைக் கூட பணயம் வைத்து அவள் கண்டுபிடித்ததால்தானே நம் நாட்டு கனிம வளம் நம்மையும் அறியாமல் வெளிநாட்டிற்கு செல்வதை தெரிந்து கொள்ள முடிந்தது. தான் ஒரு பெண் என்று தன்னால் என்ன செய்துவிட முடியும் என்று அந்நேரம் பத்மினி முடங்கியிருந்தால், இல்லை இனிமேலும் வாழ்வு நிரந்தரம் இல்லை என்று பயந்து போய் முன்னேறாமல் இருந்தால் இன்று அந்தக் கடலுக்கு அடியில் பத்மினியும் கரைந்துதான் போயிருப்பாள். நல்லவேளை அப்படியேதும் நடந்துவிடவில்லை.

தாய் நாட்டிற்கு ஒரு பிரச்சனைன்னா ஆணோ பொண்ணோ யாராயிருந்தாலும் சமம்தானே. அவங்களுக்கும் தேச பக்தி குறைவது இல்லை அதிலும் ஒரு மிலிட்டரி ஆபீஸரோட பொண்ணுக்கு கேட்க வேண்டுமா என்ன ?

உண்மைதான் போன வாரம் புல்வாமாவில் நடைபெற்ற இழப்பைக் கேட்கும் போது மனமே வெடித்துச் சிதறிவிடும் போல இருக்கிறது. அடிப்படையாக இந்து முஸ்ஸிம் சகோதரர்களுக்குள் எந்த பேதமும் இல்லை அண்ணன் தம்பியைப் போல பாசத்துடன் பழகுகிறவர்கள் கூட சில தவறான வழிகாட்டுதலிதான் இம்மாதிரி பெரும் அபாயங்களை செய்துவிடுகிறார்கள். 

புல்வாமாவில் நடைபெற்ற கொடூரம் இந்தியாவில் மட்டும் வேற்று மதத்தினர் எத்தனை சுதந்திரமாய் சந்தோஷமாய் வாழ்கின்றனர். ஆனால் அன்னிய மண்ணில் இந்தியர்க்ள சில நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடிவதில்லை.

நம்முடைய கலாச்சாரம் அன்பு விட்டுக்கொடுக்கும் தன்மை பொறுமை இவற்றையெல்லாம் சாதகமாக எடுத்தக்கொண்டு நம் மண்ணில் நம்மையை தாக்குகிறாாகள் விரோதிகள் இவர்களைப் போன்ற காழ்ப்புணர்ச்சி நமக்கு ஒருமுறை தோன்றினாலும் அடுத்து நம்மை எதிர்க்க ஒருவரும் உயிரோடு இருக்க மாட்டார்கள். நம் அமைதியைக் கண்டவர்கள் அக்ரோஷத்தைக் காணவில்லை 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

நாடே ஸ்தம்பித்து குலுங்கி அழுகிறது. இரண்டு மகன்களைப் பறிகொடுத்தவிட்டேன் என் மூன்றாவது மகனையும் நான் இந்திய திருநாட்டை காப்பாற்ற எல்லைக்கு அனுப்புவேன்னு சொல்றாங்க ஒரு வீரத்தாய்.

திருமணமாகி ஒரே வருடத்தில் கணவணை இழந்த பெண், 5மாத குழந்தையை தன் தந்தைக்கு வாய்க்கரிசி போடும் அவலம் அப்பப்பா கொடூரம், சில கோரத் தாக்குதலுக்குப் பின் ஏற்படும் நிதர்சனங்களும், இழப்புகளும்தான் நம்மை கொல்லாமல் கொல்கின்றன. 

தாக்குதலுக்கு காரணமானவனை அரசாங்கம் சுட்டுக் கொன்று நம் வீரத்தை மறுபடியும் உலகிற்கு சொல்லியிருக்கிறது. நம் ராணுவ வீரர்களின் பாதம் தொட்டு வணங்கிட வேண்டும் பரத். 

ம்...உயிர் நீத்தவர்கள் இப்போதும் எப்போதும் நம் மனங்களி தெய்வமாய் வாழ்வார்கள், நாட்டுக்கு ஆற்றும் கடமையோடு வீட்டுக் கடமையும் பார்க்கவேண்டுமே உத்ராவும், பரத்தும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டீர்கள் அடுத்தது திருமணம்தானே ?!

பின்னே எனக்கு கல்யாண சாப்பாடு போட வேண்டாமா ? பத்மினி குரலெழுப்பினாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.