(Reading time: 8 - 15 minutes)

நாளைக்கே இந்தியாவுக்கு ப்ளைட் டிக்கெட் எடுத்தாச்சு, அவங்க வீட்டுலே நேரா போய் எங்களுடைய விருப்பத்தையும் சொல்லி சம்மதம் கேட்கப்போகிறோம் என் வரையில் எந்த தடங்கலும் இலலை, உத்ராவின் தங்கை கணவர் நித்திலன் காதில் எங்கள் விஷயத்தை போட்டாச்சு. உத்ராவின் அம்மா படுத்த படுக்கையாக இருந்தவர்கள் இப்போது சற்று எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அவள் தங்கை லட்சுமியும் கருவுற்று இருக்க, அக்காவோ ஒரு படி மேலே போய் ஒரு சின்ன கார்மெண்ட்ஸ் தொடங்கியிருக்கிறார்களாம். இதற்குமேல் உத்ராவும் தன் குடும்பத்தை எண்ணி கவலைப்படவேண்டியது இல்லை, நித்திலன் மூலம் நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அட்ரா சக்கை அந்தப் பக்கமும் நிறைய நல்ல செய்திகள் உண்டு, அத்தோடு நீங்கள் கொண்டுபோவதும் இனிப்பான செய்திதான் இல்லையா?!

சந்தேகம் என்ன ? வெகு விரைவில் எங்கள் திருமண அழைப்பு வரும் நீங்களும் ஏஞ்சலும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்

வேறு என்ன வேலை பரத் ஒருவாரம் முன்னதாகவே வந்து டேரா போட்டுவிட மாட்டோமா அப்படியே உங்கள் சொந்தத்தில் ஏதாவது மாப்பிள்ளை இருந்தால் முதலில் இந்த வாயாடிக்குப் பாருங்கள். என்றான் அலெக்ஸ் பத்மினியைக் காட்டி, 

திமிரா அலெக்ஸ் பாருங்கள் என்கிட்டே வம்பு வைச்சிக்கிட்டா நீ என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்னு ஏஞ்சல் கிட்டே போட்டு கொடுத்துடுவேன் உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு ஆகிடும் ஜாக்கிரதை 

மன்னிச்சிடும்மா தாயே இனிமேல் உன் வம்புக்கே வரமாட்டேன் என் வாழ்க்கையிலே கொளுத்திப்போடாதே செல்லமே ! 

சரண்டர் ஆயிட்டா மன்னிப்பு நிச்சயம் பத்மினி ஆசிர்வதிப்பதைப் போல கையைத் தூக்கினாள். 

அது சரி பரத் உத்ராவின் ஹனிமூன் எங்கே ?

என் கடல் இளவரசியைக் காதல் இளவரசியாய் மாற்றிய இதே போல ஒரு கடற்கரையில்தான் எங்கள் ஹனிமூன் இது என் இளவரசியின் விருப்பம்.

உத்ரா அதற்கு வெட்கப்பட்டு சிரித்தாள். 

நானும் ஏஞ்சலும் இன்னம் கொஞ்சநாள் காதலிச்சிட்டு அப்பறம் தான் கல்யாணம். அதக்குள்ளே இன்னொரு வேலை வந்திடுச்சே

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இன்னொரு வேலையா?

ஆமா பரத்... பிளாஸ்டிக் அரிசி, முட்டை, பிடி காய்கறிகள் இதைபோலவே தற்போது மீன் வகைகளிலும் போலி உருவாகி வருகிறதாம். அதாவது இவ்வகை மீன்களில் எந்தவிதமான சத்தும் இருப்பதில்லையாம், பிராய்லர் கோழியைப் போல கடல் பிராந்தியங்களில் பிராய்லர் மீன் இதன் உற்பத்தி கடல் பிராந்தியங்களில் நடக்கிறது. வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட சில பொருட்கள் இந்தியாவில் சில கைக்கூலிகளால் விற்கப்படுகிறது இல்லையா. அதே போலத்தான் இங்கும் பல பெரிய உணவகங்களில் வேறொரு பெயரில் இப்படிப்பட்ட மீன்கள் விற்கப்படுகிறதுன்னு சொல்றாங்க, இதனால் அவங்களுக்கு தேவையில்லாத நோய்களும் வருகிறதாம் இந்த யூனிட் நம்ம இந்தியாவில நான்கைந்து இடங்களில் துவங்கியிருக்கிறார்கள். இதை ஆராய்ந்து அந்த மோசமான கும்பலைப் பிடிக்க உத்தரவு வந்திருக்கிறது. 

கடலின் அடி ஆழத்திலேயே மீன்களோடு மீன்களாய் அவை கலக்கப்படுகிறதாம். 

அய்யோ நிறைய சாகசங்கள் இருக்குமின்னு சொல்லுங்க அலெக்ஸ் என்னையும் இந்த வேலைக்கு பரிந்துரை செய்யுங்க ப்ளீஸ் என்றாள் பத்மினி, மறுபடியும் பத்மினி ரிட்டன்ஸ்ஸா.....அனைவரும் சிரிக்கிறார்கள். 

திருமணம் முடித்து அதன் பின் நடக்கப்போகும் ஆனந்தவாழ்வை குறித்த பேச்சுககளின் இனிமையைத் தாங்கிட கடல் தாலாட்ட கப்பல் மீண்டும் அந்தமானின் விமான எல்லைக்குள் புறப்பட்டது. பரத் தன் காதல் இளவரசியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். 

அடுத்த அத்தியாயத்திற்கு முன் காற்றாய் வருவேன் என்ற உண்மையான நாவல் மூலம் சந்திப்போம். 2000ம் ஆண்டில் இறந்த தோழி ஒருவரின் கதை.

 

முற்றும்

Episode # 26

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.