Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ரா

sushrutha

'யாரென்று  கேட்காதது  ஏனோ 

யாரானால்  என்னென்று  தானோ 

நேராக  நின்று  யாரென்று  கேட்டால் 

கூரான  வேல் பாயும்  என்றோ 

கண்ணாலே  நான் கண்ட கணமே 

உயிர் காதல் கொண்டது என் மனமே !!!'

தலையணை  வைத்துக் கொண்டு ஸ்டெப்  போட்டபடியே  கிண்டலாக  பாடிக்கொண்டிருந்த  ஷிண்டே மேல்   பக்கத்தில் இருந்த  தலையணையை  எடுத்து அடித்தான்  சசி 

சீதாவின் அந்த முக்கிய அறிவிப்புக்கு பின் ,அவள் சாதாரணமாக தங்கள் நிலை கூறி சென்றுவிட ,அதன் பின் இவர்களுக்கும் வேலை இருக்க ,இப்போதுதான் ,இரவுணவிற்கு  பின்   இவன் வீட்டில் ,இவன் அறையில் இதை பேச ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது 

''எங்கேருந்து பிடிக்கிறடா   இந்த பாட்டெல்லாம் ''

''மாதாஜி   பாக்கும் ,நாம  பிடிச்சி வச்சுப்போம்ல இப்படி யூஸ்  செய்ய,இன்னும் இருக்கு 

 'இது  முன்னாளில் உண்டான உறவோ 

இதன்  முடிவும் எங்கோ எதுவோ ' என்று தொடர்ந்து பாடவும் 

அவன் கேலியை  தற்காலிகமாய் மறந்து ,''இன்னும் என்னடா பிரச்சனை அதான்   கிளியர்  ஆயிடுச்சே ''என்றான்  ஆர்வமாய் சசி 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பின்னே அவள் தான்  யாரும் கேட்காமலே சூப்பரா  அத்தானை பற்றி சொல்லிவிட பின் ,என்னதான் பிரச்சனை இருக்க முடியும் .

''இருக்க முடியும்டா பூல் ..ஏன்டா  பை  தி  வே ..இது எப்போ உயிர் காதல் ஆச்சு ''என்று அவன் மனதில் நினைத்ததையும் ,கூடவே ஒரு பிட்டையும் சேர்த்து போட்டான் அவன் 

''நான் எங்கடா காதல் ன்னு சொன்னேன் ,நீதான் சம்மந்தமில்லாமல் கழுதை  மாதிரி கத்திகிட்ருக்க  ''என்றான் லேசான எரிச்சலுடன் சசி 

''பிரச்சனை சரியாடுச்சின்னு சொல்லும்போதே  உன் மூஞ்சி  எல் ஈ டி  பல்பு  போல் பிரகாசமாய் எரியுதே,ஐ  நோ ..,ஐ  ஆம்  யுவர்  பெஸ்ட்  பிரின்ட்  ''என்றான்  வடிவேலு  மாடுலேஷனில் 

''படுத்தாதடா ''என்று  சசி சலிக்க 

''கண்ணான கண்ணே, கண்ணான கண்ணே .என் மேல் சாய வா 

புண்  ஆன  நெஞ்சை,பொன்னான  கையால்  பூ போல    நீவவா ..''

''இது லேட்டஸ்ட்  தல சும்மா உருகி இருப்பார் ,சான்சே  இல்ல ''என்றான்  ஷிண்டே  தலவாணியை  எறிந்துவிட்டு இவன் கைகளை  பிடித்துக்கொண்டு 

உண்மையில்  நண்பனின்  முகம் வெகு நாட்களுக்கு பிறகு  தெளிவாக இருப்பது  அவனுக்குமே  ஒரு நிம்மதியை கொடுத்து இருந்தது 

இருந்தும்  எல்லா கேள்விகளுக்கும் விடை  தெரியவில்லை ,

முக்கியமாய் அவளை அடித்தது யார் ,அடிக்கும் அளவிற்கு மூர்க்கமான அந்த  உறவு யார் ,

இது அக்காவின் கணவன் அத்தான்  என்றால் ,அடிப்பதற்கு வேறு யாராவது அத்தான்  அல்பம்  இருக்கிறதா , அவள் வாழ்வில் என்பது பிரைஸ்  கொஸ்டின்  .. அப்படி  மகள்  அடி  வாங்குவதே  தெரியாமல் இருக்கும் பெற்றோர் 

இத்தனை  சிக்கல்  இருக்கும்  இடத்தில்  சசி  ஒரு அனுதாபத்தின்  அடிப்படையில்  சென்று சிக்கி கொள்வதை  ஷிண்டே  அடியோடு விரும்பவில்லை.

அதை  எல்லாம் மனதில் நினைத்தபடியே ,நண்பனை  இதிலிருந்து வெளியே  கொண்டு வர விரும்பினான் .

அவள் வாழ்க்கையில்  நிறைய பிரச்சனைகள் இருந்தது என்பது ஒரு காரணம் என்றால் ,இந்த கண்டதும் காதல் என்பதிலும்  நம்பிக்கை இல்லாததால் 

சசியை  இதிலிருந்து முழுவதும்  வெளியே கொண்டு வந்து ,அவனை பழையபடி ,கேர் பிரீ  சசியாக  பார்க்க விரும்பினான் .

அதை  கொஞ்சம் கேலியும் கிண்டலுமாக  இலகுவாக செய்யவே விரும்பினான் .

மற்றபடி சசி மனதார ஒருவரை விரும்பினால் ,அதை குறுக்கே போய்  கெடுக்க  போவதில்லை அவனுமே .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பிடித்திருந்த அவன் கைகளை விட்டுவிட்டு ,அவன் பக்கத்தில் அமர்ந்தபடியே ,கிண்டல் தொனியை விட்டுவிட்டு  சற்று நிதானமாய் 

''பாரு  சசி ,அது அவள்  கணவன் இல்லை ,என்பது தான் தெரிஞ்சிருக்கு ,அக்கா கணவன் என்றால் ,அந்த அக்கா வந்து இவரை பார்த்துக்காதது  ஏன் ,

அவங்க வீட்டில் உடம்பு சரி இல்லாமல் இருக்கும் நபர் அந்த அக்கான்னு வச்சுப்போம் ,

அதனால் அவங்க வந்து பார்த்துக்க முடியலை ,சரி, இவங்க அம்மா எங்கடா ,ஏன்  அவங்களோ ,அந்த சைடுலேர்ந்து  யாருமே வரலை ,ஏன்  ஒரே ஆளா இவங்களே  நின்னாங்க ,

அவங்ளோட  சண்டை அதனால்   ,இப்போ அவங்க அக்கா ,அக்கா கணவரை ஒதுக்கி வச்சுருக்காங்க  ன்னு வச்சுப்போம் ,

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ராAdharvJo 2019-03-01 23:15
:D that was cute epi chitra ma'am :clap: :clap: ippo patient-kum dr mele oru interest-o?? Pramadham :lol: Shindey ninga rombha brain wash panadhinga chitra ma'am instruction pola thaan sasi oda move irukkum :P thank you and keep rocking. Mystery continues!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ராPadmini 2019-03-01 17:32
nice update Chitra!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ராmahinagaraj 2019-03-01 12:04
ரொம்ப நல்லா இருக்கு தோழி.. :clap: :clap:
கதையின் போக்கு சூப்பர்..
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ராsaaru 2019-03-01 11:53
Super dear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ராSrivi 2019-03-01 08:58
What a friend man shinde, advisor philosopher guide..Kalakkal .. paatellam summa pinrar.. good good.. ada namma seetha madam kum liking. Start agiduchu polaye.. akka than andha noyaliya.. Avanga than adichirupangolo.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ராmadhumathi9 2019-03-01 06:51
:clap: nice epi sis (y) shindey sonna santhegangal ellam namakkum thonathaan seigirathu.thelivubaduthikolla naangalum aavalodu kaathirukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ராRaVai 2019-03-01 06:17
Sorry, Chitramma! This is the first time I read your fiction.
Deeply regret why I didn't commence it earlier! What a fluent flow of presentation with songs, jokes, suspense and romantic thoughts! Well done! Sure, henceforth, I shall read every week!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top