Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 03 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 03 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

தையோட ஆரம்பம்லாம் நல்லாத்தான் இருக்கு. வழக்கமான காதல் கதை தானே. இதுக்கும் அப்பாவோட மனக்கவலைக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியல. அது என்ன, பேர் சொல்லாமல் இனிஷியல் மட்டும் போட்டு கதை எழுதறாங்க. யார்னு பெயர் தெரிஞ்சால் தேடி வந்து உதைப்பாங்கன்னு பயம் போல, எழுதுறது பொண்ணா, பையனான்னு கூட தெரியல! சரி அந்த ரம்யாவுக்குப் போன் பண்ணது யார்னு அடுத்த பகுதியை மட்டும் வாசிச்சிட்டுத் தூங்கலாம் என்று நினைத்தான் அமுதன்.

வெள்ளைத்தாமரை இதழ்-2    இதோ ஒரு காதல் கதை  பகுதி-2

திர் பக்கத்தில் ஒரு பையனின் குரலை கேட்டதும் அம்மா வின் முகம் மாறியது..!!

ஆனாலும் குரலைத் தாழ்த்திக்கொண்டு, "ரம்யா உனக்குதான் போன் "என்றவாறே அவளிடம் ரிசீவரைக்  கொடுத்தாங்க.

போன் ரிசீவரைக்  கையில் வாங்கின ரம்யாவின் மனதிற்குள் நடுக்கம் யாரா இருக்கும்?

யோசித்தபடியே ஹலோஎன்றாள். எதிர் முனையில் பதில் இல்லை.

திரும்பவும் ஹலோஎன்றாள். மெல்லிய சத்தமாய் பாடல் கேட்டது .

"வேணா வேணா விழுந்திடுவேனா

கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா ".

ரம்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இது பாட்டு கேட்குது பேச்சுக்குரல் எதுவும் இல்ல!. ஆனால் பின்னாடி அம்மா நின்னுகிட்டு இருக்காங்களே !  ஐயோ எதாவது சொல்லி சமாளிப்போம்.

ரம்யா சமாளித்து கொண்டு,

தேங்க்ஸ் அண்ணா, வைக்கிறேன்!”  என்று போனை வைத்து விட்டாள்.

மறு நிமிடமே அம்மா " யாருடி அது? காலேஜ் சேர்ந்த முதல் நாளே ஒரு பையன் போன் பண்றான்"

“இப்போ பேசினது  என்னோட ஸ்கூல் கிளாஸ்மேட் அனிதாவோட அண்ணன்தான்மா. அனிதாவைத் தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே. அவ என்னோட கட்டுரை, கிராமர்  புக் வாங்கியிருந்தாள். அவளுக்கு  திடீர்னு ஊருக்கு போக வேண்டிய அவசரமாம், என்னோட  புக் எனக்கு உடனே  வேணும்னா  அவங்க அண்ணா கிட்ட அட்ரஸ் சொன்னா வீட்டுக்கு வந்து தந்துவிடுவாங்க. இதை என்கிட்டே சொல்லச் சொன்னாளாம். அதைச் சொல்லத்தான் கால் பண்ணாங்கமா !” என்று அசுர வேகத்தில் பொய் சொல்லி அம்மாவைச் சமாளித்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அம்மா  "இதை என்கிட்டே சொல்லலாம்ல"

அதுக்கு நான் என்ன பண்றது. அவுங்க தானே என்கிட்டே சொன்னாங்க. பேசிக் கொண்டே படியேறி மாடிக்குச் சென்று விட்டாள்..

இவ பொய் சொல்றாளோ? மனதிற்குள் அம்மா நினைக்கஅங்கே ரம்யா  போன் பண்ணி இப்படிப் பாட்டுப் போடுவது யாராக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவசரத்துக்கு அனிதாவ சொல்லியாச்சு. உண்மையிலே புக் அவகிட்ட தான் இருக்கு.   அவளும் ஊருக்குத் தான் போய் இருக்கா. இப்போ தப்பிச்சாச்சு. முதலில் போனில் பாட்டுப் போட்டது யாருன்னு கண்டுபிடிக்கணும். இல்லைனா அம்மாகிட்ட நாமதான் பாட்டு வாங்கணும். போன் பண்ணது யாராக இருக்கும் என்ற கேள்வி மனத்தைக் குடைந்தது. சத்யாவைப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

ரம்யாவின் இணைபிரியாத்தோழி சத்யா .இருவரும் சிறுகுழந்தையில் இருந்து பள்ளி வரை ஒன்றாகவே படித்தார்கள். கல்லூரிப் படிப்பில் தான் பிரிய நேரிட்டது. இரண்டு பேரும் தினம் தினம் எப்படியாவது கல்லூரி செல்லும் வழியிலோ இல்லாவிட்டால் திரும்பி வருகையிலோ எங்காவது பார்த்துக்கொள்வார்கள். இல்லாவிட்டால் ஒருவரின் வீட்டுக்கு மற்றொருவர் சென்றாவது  பார்த்துக்கொள்வார்கள். அந்த அளவு நட்பு அவர்களிடையே, இருவரிடம் ஒளிவு மறைவு என்பதும் கிடையாது.சத்யாகிட்ட இதை உடனே சொல்லி ஆகணும்.  

அம்மா! நான் கவிதா அத்தை வீடு வரை போயிட்டு,அப்படியே சத்யாவையும் பார்த்துட்டு வரேன்மா!”

சரி! சீக்கிரமா வந்திடும்மா என்று அம்மா கூற, கிளம்பிச் சென்று விட்டாள் ரம்யா. போன் வந்ததும் வெளிய கிளம்புறா! சத்யா வீட்டுக்குத் தான் போகிறாளா என்றொரு சந்தேகம் அம்மாவிடம் உதித்தது.

சத்யா வீடு..

"சத்யா! சத்யா அம்மா சத்யா காலேஜ்ல இருந்து வந்துட்டாளா?"

வந்துட்டா, மேலே டிவி பார்த்துட்டு இருக்கா!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"சத்யா ரம்யா வந்திருக்கா! - சத்யாவின் அம்மா 

"ஹே சத்யா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்டி "

என்ன விஷயம்?

கொஞ்ச நேரம் முன்னாடி எங்க வீட்டுக்கு ஒரு போன் கால் வந்தது. எடுத்துப்  பேசினால் எதிர் முனைல பாட்டு ஓடுதுடி. அம்மா தான் முதலில் போனை எடுத்தாங்க.. அம்மா  யார்னு கேட்டதுக்கு என்னோட காலேஜ்ல படிக்கிறேன்னு சொல்லிட்டு, நான் எடுத்தப்ப ஒண்ணுமே பேசலடி." அம்மா கிட்ட எப்படியோ சமாளிச்சிட்டேன். யார் இப்படி பண்றாங்கனு புரியலடி.

சத்யா யோசிச்சு பார்த்துவிட்டு,

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 03 - பூர்ணிமா செண்பகமூர்த்திSrivi 2019-03-31 08:17
Nice and cute update.
Reply | Reply with quote | Quote
# Thank you!PoornimaShenbagaMoorthy 2019-04-01 17:57
Thanks for the comment :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 03 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-03-31 08:00
:clap: nice epi.yaar antha pidikkaatha mugam :Q: waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# Thank you!PoornimaShenbagaMoorthy 2019-04-01 17:58
Thank you :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 03 - பூர்ணிமா செண்பகமூர்த்திரவை 2019-03-31 07:48
பூர்ணிமாவின் கைவண்ணம் ஈர்ப்புள்ளது! சுருக்கமாகச் சொன்னாலும், ஆர்வத்தை தூண்டியாகிவிட்டது, அடுத்த பகுதியை படிக்க! வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# Thank you!PoornimaShenbagaMoorthy 2019-04-01 17:58
Thank you for the feedback and encouragement! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 03 - பூர்ணிமா செண்பகமூர்த்திsaaru 2019-03-31 07:09
Nice update
Reply | Reply with quote | Quote
# Thank you!PoornimaShenbagaMoorthy 2019-04-01 17:58
Thank you :)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top