Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 15 - 5.0 out of 5 based on 3 votes

15. மனம் விரும்புதே உன்னை... - Aadhi


முடிவு செய்த பின் பின் வாங்கும் பழக்கம் இந்துவிற்கு இல்லை என்பதால், மறுநாள் காலையிலேயே சஞ்சீவை அவன் கைபேசியில் அழைத்தாள்.


"ஹலோ இந்து மேடம்... என்ன காலையிலேயே என் குரல் கேட்காமல் இருக்க முடியலையா?"

அவனின் குரல் கேட்ட உடனே எழுந்த அந்த புளங்காகிதத்தை, சிலிர்ப்பை  ஒரு வினாடி கண் மூடி ரசித்தாள். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது அதே இனிய உணர்வு ஏற்படுவதன் அதிசயம் தான் அவளுக்கு புரியவில்லை.

"சஞ்சீவ், இன்னைக்கு ஈவ்னிங், நீங்க பிஸியா?"

"ம்ம்ம்ம்... ஒரு மீட்டிங் இருக்கு ஏழு மணி வரைக்கும், ஏதாவது முக்கியமான விஷயமா???" என்றான் சஞ்சீவ் சற்றே தயக்கத்துடன்.

அவனின் பதிலில் அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. இன்று வரை எப்போதுமே சஞ்சீவ் அவள் கேட்டு பிஸி என்றோ வேறு வேலை இருப்பதாகவோ சொன்னதில்லை... இது என்ன இன்று மட்டும்... இந்த எண்ணம் ஓடும் போதே அவளின் மனம் அவளை இடித்துரைத்தது... அவனுக்கு வேலை இல்லையா என்ன? அதுவும் இல்லாமல் முக்கியமான விஷயம் என்றால் கட்டாயம் வருவான் தான்... ஆனால் அவனை தொல்லை செய்ய வேண்டாம்...

மின்னலாய் மனதில் ஓடிய எண்ணங்களை மறைத்து,
"முக்கியமான விஷயம் தான்... உங்க மீட்டிங் முடிச்ச அப்புறம் பேசினாலே போதும்... ஒரு ஏழரை மணி மாதிரி அண்ணா நகருக்கு வர முடியுமா?"

ஒரு சில வினாடிகள் மவுனத்திற்கு பின்,
"சரி.. ஆனால் என்ன விஷயம் இந்து?? கொஞ்ச முக்கியமான மீட்டிங்...." என்று இழுத்தான் சஞ்சீவ்.

"புரியுது... எந்த பிரச்சனையும் இல்லை.. நீங்க முடிச்சிட்டே வாங்க..."

"தேங்க்ஸ்.. ஆனால் என்ன விஷயம் இந்து???"

"சில விஷயங்களை பேசி தெளிவு படுத்திக்குறது நல்லதுன்னு தோணிச்சு... அது தான்..." என்றாள் இந்து சற்றே அமர்த்தலாக.

"எதை பத்தி???"

"நீங்க எதை பத்தின்னு நினைக்கிறீங்களோ, அதை பத்தி தான்..."

"ஓஹோ!!!!"

அவன் குரலில் ஒலித்த ஆச்சர்யம் அவள் முகத்தில் பெரிய புன்னகையை கொண்டு வந்தது.

"சரி சஞ்சீவ், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... ஈவ்னிங் 7.30 சரியா???"

"ம்ம்... சரி..."

அவன் குரலில் இருந்த ஆச்சர்யமும் எதிர்பார்ப்பும் அவளை சந்தோஷபடுத்தியது. அவனிடம் தன் மனதில் இருப்பதை எப்படி சொல்வது என்று மீண்டும் ஒரு முறை கற்பனையில் ஒத்திகை பார்க்க ஆரம்பித்தாள் இந்து....

ந்துவிடம் பேசியபின் சஞ்சீவிற்கு இறக்கை முளைத்தது போல் இருந்தது. தான் கடந்த சில நாட்களாக கேட்க காத்திருப்பது இன்று நடக்க போகிறது என்று தோன்றியது. முகத்தில் மலர்ச்சியோடு ஏதோ பாட்டை முனுமுனுத்தபடி வந்தவனை கண்ட கீதா,
"என்ன சஞ்சீவ், இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல இருக்கு...."

"ஆமாம் அண்ணி... நான் ரொம்ப நாளா நடக்க காத்திருந்த ஒரு விஷயம் இன்னைக்கு நடக்க போகுதுன்னு நினைக்கிறேன்..."

கீதா ஆச்சர்யமாக நோக்கவும்,
"ஆமாம் அண்ணி, கொஞ்சம் நேரம் முன்னாடி இந்து போன் செஞ்சு, இன்னைக்கு ஈவ்னிங் மீட் பண்ண சொல்லி இருக்காங்க..." என்றான் அவனுடைய சந்தோஷம் முகத்திலும் குரலிலும் பிரதிபலிக்க.

கீதாவிற்கு அவனின் சந்தோஷத்தை காண ஆச்சர்யமாக இருந்தது என்றால், அவன் சொன்ன விஷயத்தை கேட்டு ஆச்சர்யம் மட்டும் இல்லாமல் அதிர்ச்சியாகவும் இருந்தது... அவளின் அமைதியை கவனித்தவன்,

"என்ன அண்ணி, ஷாக் ஆயீட்டீங்க? உங்க பிரெண்ட் உங்க கிட்ட எதுவும் சொல்லலியா?? ம்ம்ம்ம்.. இப்போ எல்லாம் ரொம்ப மாறீட்டாங்க போல இருக்கு..."

அவனின் கிண்டல் சற்றே உசுப்பியபோதும், கோபத்தை காட்டாது,
"இருக்கட்டும் நான் கவனிச்சுக்கிறேன்.. சரி நீங்க தான் இன்னைக்கு லேட்.. சீக்கிரம் சாப்பிடுங்க...." என்று சொல்லி விட்டு அவனுக்கு உணவு பரிமாற தொடங்கினாள் கீதா.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: மனம் விரும்புதே உன்னை... - 15Thenmozhi 2012-08-23 19:49
Please ignore this message...
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 15ARUNA 2012-08-23 12:37
hey aadhi

am eagerly waiting for u next part madam please post it quick:-)

Arunaprakash
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 15Admin 2012-08-23 19:44
Hi Aruna, Thanks a lot for your interest. Next part will be published on 30th Aug. From now on, MVU will be updated once in two weeks on Thursdays :-)
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 15Sasireka A 2012-08-16 00:44
yerkanave neenga story late ah post panringa nu ellarum upset.ippa heroine kooda upset pa.so tragic. :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 15Thenmozhi 2012-08-16 07:19
Hi Sasireka, My apologies for posting the episode late :(

Enna seirathu kathaiyila sila samayam soga scenes-um vanthu thaane aaganaum :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 15Thenmozhi 2012-08-15 23:15
Guys, Be patient.... Ippadi naduvila naduvila question kettaal eppadi....

Porumai porumai... :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 15Anusha Chillzee 2012-08-15 19:09
Aadhi, I'am not convinced. If Kanchana wants her son to marry a girl of her choice, she should go and ask that to her son. Why should she come and talk about this to the girl his son loves????
And that too why should Indhu accept it???
Enakku kobamaa varuthu....
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 15Sandhya 2012-08-14 22:42
Aadhi, athu thaane paarthen innum entha pirachanaiyum varaleyunnu...

ippadi ammaa solrathukku ellaam love-a no sollalaamaa?
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 15Admin 2012-08-14 22:38
Hey Aadhi, you said there's going to be no villain / villi right????

What is this??? You made my fav character cry???? :sad:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top