Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 6 votes
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீ

Ringa ringa roses

தியழகி தனக்கு அவசர வேலை இருப்பதால் செல்ல வேண்டும் என கணேஷை பார்த்து ஜாடை செய்துவிட்டு தன் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். அவளின் காப்பி கோப்பை அவளுக்காக காத்திருந்து ஏமாந்துப் போனது.

அவள் சென்றது கணேஷற்கு சற்று வருத்தமாய் போனது. அவளிடம் வைரத்தை பற்றி பேச வேண்டும் என நினைத்தவனால் முடியவில்லை. ஏதேதோ சம்பவங்கள் நடந்துவிட்டது. தலைவலி மண்டையை பிளக்க தன் காப்பியை பருகினான்.

இன்னமும் வைர கல் இருந்த சுறுக்கு பை அவன் கையில் இருந்தது. அதில் வைரம்  இல்லை என்பது அவனுக்கு தெரியவில்லை. சுறுக்கு பையை தன் பேண்ட் பாக்கெட்டில் துருக்கிக் கொண்டான். ஆபிஸிலிருந்து வெளியே வந்தான்.

செக்யூரிட்டியை தாண்டி போகும் போது கணேஷிடம் அவன் “இனி இந்த டைம்க்கு வராதீங்க சார்” என நொந்துக் கொண்டான்.

“சாரிண்ணே ஒரு டெத் நியூஸ் அதான் . . போன்ல சொல்ல முடியாதபடி ஆகிடுச்சி . . இனிமே வர மாட்டேன்” எதையாவது கூறவேண்டுமே என பேசியவனின் கை இயல்பாக பேண்ட் பாக்கெட்டுக்குள் சரண் அடைய. அந்த நொடி மின்னல் தாக்கியதைப் போல அவனால் வைரம் இல்லை என்பதை உணர முடிந்தது.

சில நொடிகள் செய்வதறியாது கணேஷ்  திகைத்தான். மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்க  “அண்ணே தீப்பெட்டி இருக்கா?” என செக்யூரிட்டியை கேட்டுக் கொண்டே தன்னிடமுள்ள  சிகரெட்டை வாயில் வைத்தான். அவனிடமும் ஒன்றை நீட்டினான்.

ஆசை யாரைவிட்டது. செக்யூரிட்டி  சிகரெட்டை எடுத்துக் கொண்டு “இருங்க வரேன்” என உள்ளே சென்றான். “என் நல்லவேளை இவன் பாக்கெட்டில் தீப்பெட்டியை வெச்சிக்கல” என எண்ணியபடி சுறுக்கு பையை எடுத்துப் பார்த்தான். உள்ளே வைரம் இல்லை. இதயம் சிவமணியின் டிரம்ஸ் போல அடித்துக் கொண்டது.   

“இந்தா சார் வத்திப் பொட்டி” என செக்யூரிட்டி நீட்ட

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அதை வாங்கிக் கொண்டவன் “எனக்கு இன்னொரு ஹெல்ப்” என தயங்கினான்.

“சொல்லு சார் செய்றேன்” சிகரெட்டின் உபயம்.

“என் பர்சை உள்ளயே விட்டுடேன் அதை எடுத்து தரணும்” என தயங்கி அவன் முக மாறுதல்களை கவனித்தபடியே கூறினான்.

சுணக்கமானது முகம் “எங்க சார் வுட்ட?”

“ஜென்ஸ் பாத்ரூம்ல . . மூணாவதா இருக்கு இல்ல  . . அங்க பாருங்க” என்றான். மூணாவதாக ஒரு பாத்ரூம் இருக்க வேண்டுமே என்ற உதறலும் இருந்தது.

“சரியான சாவுகிராக்கி” என மனதில் திட்டியபடி செக்யூரிட்டி உள்ளே சென்றுவிட்டான்.

கணேஷ் துரிதமாக தான் வந்த பாதை முழுவதையும் சல்லடையாக தேடினான். வைரம் சிக்கவில்லை.

இரண்டொரு நிமிடத்தில் செக்யூரிட்டி வந்து “ இந்தாங்க பர்ஸ்” என எதிர்பாராத பதிலை சொன்னான்.

செக்யூரட்டி கையில் வைத்திருந்த பர்ஸ் கர்ப்பிணிப் பெண்ணைப் போல வயிறு உப்பி நிறைய பணத்தோடு இருந்தது.

அதை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகி விடலாமா என அவன் பாவி மனம் நினைத்தது. ஆனால் ஏனோ அதை செயல்படுத்த மூளை விடவில்லை.

“இது இல்லங்க . . கருப்பு கலர்ல இருக்கும் . . இத்தன பணம் இருக்காது . .நான் வேணா போய் பாக்கட்டுமா  . . ப்ளீஸ் . . அதுல டிரைவிங் லைசன்ஸ் டெபிட் கார்ட் எல்லாம் இருக்குங்க” என கெஞ்சாத குறையாக கேட்டான்.

“ஆபிசருக்கு தெரிஞ்சா என் வேலையே போயிடும் . . விசிட்டர் அடிக்கடி உள்ள போகக் கூடாது . . இன்னா பன்ன சரி சீக்கிரமா போயிட்டு வாங்க” என செக்யூரிட்டி உள்ளே அனுமதித்தான்.

ரிசபெஷனில் இருந்த பெண் என்ன என்று தூக்க கலக்கத்தில் கேட்க கணேஷ் பதில் சொன்னான். என்ன புரிந்ததோ அப்பெண்ணும் தலையை ஆட்டியது.

“யாருமே வராத நேரத்துல இந்த பொண்ணு ரிசப்ஷன்ல எதுக்கு?” என அப்போதும் அவன் மனம் ஆராயந்தது. முதல் முறை வரும் போது இவள் இல்லையே எனவும் நினைத்துக் கொண்டான்.

கணேஷ் சென்று ரிசப்ஷன் ஹால் மற்றும் கேன்டீனில் தேடினான். எங்கும் கிடைக்கவில்லை. மதி ஹேண்ட் பேக்கில் விழுந்து இருக்கும் என அவனால் கற்பனைக் கூட செய்ய இயலவில்லை.

தன்னையே நெந்துக் கொண்டான். கலவரம் ஆனான். அதிக நேரம் இருக்க இயலாத காரணத்தால் அலுவலகத்தைவிட்டு வெளியேறினான்.

செக்யூரிட்டி கேட்க தன் பர்சை எடுத்து காட்டிவிட்டு நகர்ந்தான். மறக்காமல் சிகரட்டை பற்ற வைத்துக் கொண்டான்.

மேன்ஷனில் தன் அறைக்கு திரும்பியவன் சிறிது நேரம் எண்ணங்களின் வசப்பட்டு பின்பு தன்னையும் அறியாமல் உறங்கிப் போனான்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Subhasree

Latest Books published in Chillzee KiMo

 • Katrin kanalKatrin kanal
 • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
 • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
 • Theeradha KadhalTheeradha Kadhal
 • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
 • Kids Fun StoriesKids Fun Stories
 • Unnai ondru ketpenUnnai ondru ketpen
 • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீR.K. 2019-04-27 16:05
Semma story
Superb flow.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீSubhasree 2019-04-29 10:09
Quoting R.K.:
Semma story
Superb flow.

Thanks a lot R.K. :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீSubhasree 2019-04-26 11:52
Thank you so much friends for all your sweet
comments. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீJanaki 2019-04-26 09:04
Kalakal epi Subha
Peikum thilakum connection irukka?
Diamond plays important rolea?
Series thrilling aaga poguthu :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீShanthi S 2019-04-26 00:49
payamuruthura but thrilling episode Subha 👌

Diamond oda next target / location ethunu parpom.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீSagar 2019-04-25 19:15
Excellent episode sister.
Keep rocking
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீDurgalakshmi 2019-04-25 18:48
Super super sis (y)
Semaya poguthu story
Yaarin aavi athu :Q:
Diamond next Enna seyya poguthu :Q:
Very interesting and thrilling episode sis.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீAdharvJo 2019-04-25 11:38
:eek: is there any connection btw diamond and this aavi :Q: what did thilak do?? Avanai pazhi vangidicha indha uruvam :Q: sema suspense drive sis 👏👏👏👌 Ganesh oda wallet scene description was funny :D gentlemen than 😝 so indha diamond innum Ena ellam pana pogudho....waiting. thank you for this interesting update. Keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீmadhumathi9 2019-04-25 08:52
Intha vairam innum ethanai per kaikku kidaikka pogutho theriyavillai? Enna kaaranam endru therinthu kolla miga aavalaaga kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீSahithyaraj 2019-04-25 08:11
Edge of the seat :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீSrivi 2019-04-25 07:55
aaha.supero Super.. sema Sissie..
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top