(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 14 - தேவி

Kaanaai kanne

ப்ரித்வியிடம் அந்த இன்ஸ்பெக்டர்தான் பேசினார். கிருத்திகா தனக்கு வேண்டியவரின் பெண் என்பதோடு, ஒரு கேஸ்சில் சம்பந்தப் பட்டு இருப்பதால் அவளுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவளின் தற்போதைய விவரங்கள் எல்லாம் கொடுத்தவர் , போட்டோவும் அனுப்பி வைத்தார்.

முதலில் ரயில்வே ஸ்டேஷனில் பார்த்தபோது தொழில் முறையாக மட்டுமே கூர்ந்து நோக்கிவிட்டு மற்ற வேலைகளில் ஈடுபட்ட ப்ரித்விக்கு, அவள் அம்புலி மாமா படிப்பதைப் பார்த்து அவனையறியாமல் அவள் மேல் ஒரு ஈர்ப்பு உண்டானது.

ட்ரைனில் அவளிடம் ஒருவன் வம்பு செய்ததைப் பற்றித் தெரிந்த பின் அவளைக் கவனமாக கண்காணித்தான். அப்படியும் அவளைக் கடத்த முயற்சித்த இரண்டு முறையும் அவனுக்கு தாமதமாகத்தான் தெரிய வந்தது.

அதிலும் முதன் முறை அவள் அந்த லோக்கல் ஆட்களை டீல் செய்த விதத்தில் அவளின் ரசிகனாகவே மாறி விட்டான். அதனால் தான் அந்த ஒட்டகத் திருவிழாவின் போதும் அவளை அந்த லோக்கல் ஆட்கள் நெருங்குவதை உணர்ந்து எல்லோரின் கவனத்தையும் தன் புறம் திருப்பி விட்டு, அவளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கினான்.

முதல் முறை அவளைப் பின் தொடர்பவர்கள் யார் என்று கண்டுபிடித்தப போது அவனே சற்றுக் கவலைப் பட்டான். அரசியல் பின்புலம் உள்ளவர்களால் இந்தப் பெண்ணுக்கு ஆபத்து எனில், அது எந்த அளவிலும் இறங்கும் என்ற உண்மை அறிந்தவன் ப்ரித்வி. அடுத்த நாள் முதல் சுற்றுலாவில் முழுக் கவனமும் அவள் மேல் தான் வைத்து இருந்தான். ஆனால் அது, மற்றவர்கள் ஏன் அவளுக்குமே உறுத்தாத விதத்தில் இருக்க வேண்டும் என அவ்வப்போது அவளிடம் நேரடியாக பேசிக் கொண்டான்.

அப்படி பேசிக் கொண்டு இருக்கும்போது அவளின் நகைச்சுவையான பேச்சிலும், தைரியமான நடவடிக்கைகளிலும் கவரப் பட்ட ப்ரித்வி, அவளிடம் பேசும் தருணங்களை ஆவலாகவே எதிர்பார்த்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் " ரிங்கா ரிங்கா ரோசஸ்..." - திகில் நிறைந்த பேய் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஆனால் இன்றைக்கு அந்த துர்கா கோவிலில் அவளின் கலங்கிய கண்களும், பெரும் வேதனை ஒன்றை சுமந்து கொண்டு இருந்த அவளின் உடல் மொழியும் கவனித்தவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதைப் பற்றிக் கேட்க நினைத்தாலும், அவளே அதைச் சமாளித்துக் கொண்டு அவனிடம் சாதரணமாக பேசவே மேலும் அதைக் கிளற வேண்டாம் என்று விட்டு விட்டான்.

அதற்கு பிறகு சென்ற இடங்களில் அவளின் கலகலப்புக் குறைந்து இருந்தாலும், அப்போது போல் வேதனையோ, கண்ணீரோ இல்லை என்பதைக் கண்டான். அவனுக்கும் மற்ற வேளைகளில் கவனம் செல்லவே அத்தோடு விட்டு விட்டான்.

இப்போது வேலை எல்லாம் முடித்து படுத்த போது அவளின் நினைவு வந்தது. சென்ற முறை பேசிய போதே இன்ஸ்பெக்டர் மூலம், பிரதாப்பிடமும் நேரடியாகப் பேசியிருந்தான். பிரதாப் முன்னாள் ராணுவ அதிகாரி என்று தெரியவும், அவரின் மேல் அவனுக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டு இருந்தது. யாரிடமும் அவனின் பெர்சனல் போன் நம்பர் கொடுக்காதவன் , ப்ரதாப்பிடம் மட்டும் கொடுத்தான். அத்தோடு எந்த நேரம் என்றாலும் கிருதிகாப் பற்றித் தெரிந்து கொள்ள தன்னைக் கூப்பிடலாம் என்றும கூறி இருந்தான்.

அதனால் தான் இப்போது பிரதாப் போனில் கிருத்திகாப் பற்றி விசாரிக்கவும், தேவையான விவரங்களைக் கூறினான். அவரிடம் பேசிய பின் அவரின் கவலை அவனுக்கும் ஏற்பட்டது. எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்தவனாக , விடியலுக்காகக் காத்து இருந்தான்.

மறுநாள் காலையில் ப்ரித்வி & கோ பிகானர் நகரத்தில் இருந்து ஜெய்சல்மர் நோக்கி பயணம் செய்தனர். வீட்டை விட்டுக் கிளம்பி கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஆகி விட்டதால், மாணவர்களில் கொஞ்சம் பேர் சற்று சோர்வாகக் காணப்பட்டனர். அதை சரிப் படுத்த, இந்த பயணத்தின் போது ப்ரித்வியின் குழுவினர் சில விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

முதலில் தம்ப்ஷேராஸ் ஆரம்பிக்க, எல்லோரும் சினிமா படம் தானே என்று அலட்சியமாக இருந்தனர். ப்ரித்வி ரூல்ஸ் சொல்லும் போது தான் நிமிர்ந்து அமர்ந்தனர்.

ப்ரித்வி “பிரெண்ட்ஸ் , இது தம்ப்ஷேராஸ் கேம் தான். ஆனால் சினிமா பட பேரோ, பாட்டு வரிகளோ கிடையாது. அதற்கு பதில் நீங்க எல்லோரும் கட்டிடக் கலை மாணவர்கள் தானே. உங்கள் பாடங்களில் இருந்து சில வார்த்தைகள் கொடுக்கப் படும். அதை சரியாக நடித்துக் காட்ட வேண்டும் “ என்று கூற,

ஒரு மாணவன் எழுந்து “பாஸ். நாங்களே படிப்ப மறந்து டூர் என்ஜாய் பண்ண வந்தா , என்னமா இப்படிப் பண்றீங்களேமா ?” என்று சலித்துக் கொண்டான்.

“ப்ரோ, இந்த ஒரு மாச டூர்லே நீங்க படிக்கறீங்கன்றதே உங்களுக்கு மறந்துடக் கூடாதே. அதுக்குத தான் இந்த ஏற்பாடு”   

முதலில் வந்த மாணவனுக்குக் கொடுக்கப் பட்ட வார்த்தை “truncate” .

அவனுக்கு அந்த வார்த்தைப் புரிந்தாலும் அதை எப்படி நடித்துக் காண்பிப்பது என்று தெரியவில்லை. அதற்கும் ப்ரித்வியே சொல்லிக் கொடுக்க, அவன் தன் வலது கையை ஓங்கி அடித்தான்.

எல்லோரும் சற்று யோசித்து “கத்தி” என்றார்கள். ப்ரித்வி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.