(Reading time: 8 - 15 minutes)

“பிரெண்ட்ஸ், இது உங்க பாட சம்பந்தமான வார்த்தைகள் தான். அதனால் அது தொடர்பு படுத்தி யோசிங்க” என்று கூறிவிட்டு அந்த மாணவனை மீண்டும் நடித்துக் காண்பிக்கச் சொன்னான்.

இந்த முறை அந்த வலது கையிக் கொண்டு வெட்டுவது போல் செய்தான். உடனே சிலர் “வெட்டு” என்றனர். அதையே அவன் தொடர்ந்து செய்து காண்பிக்கவும்.

கவுண்டமணி காமெடியில் வரும் “நின்னைக் கோரி வரணும்” என்று பாடிச் சிரிக்க ஆரம்பித்தார்கள். சற்று நேரம் அந்த கலகலப்பு இருக்க, ஒரு மாணவன் “truncate” எனவும் , ப்ரித்வி கரெக்ட் என்றான்.

இப்போது எல்லோரும் முழித்தனர். உண்மைதான். வெட்டுதல் என்ற இடத்தில் இந்த வார்த்தை தான் பாடத்தில் பயன்படுத்துவார்கள்.

அடுத்த வார்த்தை “elevation” என்று வந்து இருக்க, அதை எடுத்த மாணவன் உயரம் என்று சைகை காமித்தான்.

எல்லோரும் ஹைட், லாங் என்று அர்த்தத்தில் வார்த்தைகள் சொல்ல, இப்போதும் யாரோ ஒரு மாணவி, elevation என்று கூறவும் எல்லோரும் கை தட்டினார்கள்.

அடுத்து nodes என்ற வார்த்தை வரவும், கிருத்திகா எழுந்து வந்தாள். அதை பேனா போல் எழுதிக் காண்பித்து அதன் முனைக் காமிக்கவும் எல்லோரும் பாயிண்ட், நிப் என்று கூறினர். அவள் பிரெண்ட் மட்டும் சட்டென்று நோட் என்று கூறவும் , கிருத்திகா அவளுக்கு ஹைபை கொடுத்தாள்.

ஆரம்பத்தில் கொஞ்சம் சலித்தாலும், மாணவர்கள் ஆர்வமாகவே விளையாண்டார்கள். பிறகு பாடல்கள் போட்டு விட்டு எல்லோரும் ஆட ஆரம்பித்தார்கள்.

பிகானர் நகரத்தில் இருந்து ஜெய்சல்மர் ஆறு மணி நேரம் பயணம். பிரேக் பாஸ்ட் முடித்து விட்டுக் கிளம்பியதால், வழியில் ஓரிடத்தில் ஓய்வுக்காக பஸ் நிறுத்தப் பட்டது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

எல்லோரும் ரெப்ரெஷ் செய்து கொண்டு விட்டு, தங்களுக்குத் தேவையான ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்து விட்டுக் காத்து இருந்தனர்.

எல்லோரையும் ஒரு பார்வைப் பார்த்து விட்டு வந்த ப்ரித்வி, கிருத்திகா அருகில் வரவும், அவள் அவனைப் பார்த்து சிரித்தாள்.

“பாஸ் , இந்த கேம் நல்லா இருந்தது. பொதுவா இந்த மாதிரி கேம்ஸ்லே சினிமா தான் யூஸ் பண்ணுவாங்க. நீங்க இப்படி அதிலும் எங்க சப்ஜெக்ட் வைத்து கேம் கண்டக்ட் பண்ணினது ரொம்ப யூஸ்புல்லா இருந்தது. அதுவும் எல்லோருக்கும் ஒரு மாதிரி ஹோம் சிக் ஆகியிருக்கிற நேரத்தில் , அவங்கள டைவேர்ட் பண்ண இப்படி கேம் ஏற்பாடு செய்தது ரியலி குட். எப்படி பாஸ் இப்படி எல்லாம் யோசிக்கறீங்க?

“நிறைய டூர் ஏற்பாடு பண்றோம் இல்லையா? அதனால் பாசெஞ்சர்ஸ் மைன்ட் செட் கணிக்க முடியும். அதோட தொடர்ந்து நாம ஒரே மாதிரி படிக்கிறதில் இருந்து பட்டேர்ன் மாத்திக்கிட்டாலே , அதுவே ஒரு ரெப்ரெஷ் தான். அந்த மாதிரி தான் இதுவும். “

“அதுக்காக இங்கேயும் படிப்பு சம்பந்தமா இருந்தா பசங்க சலிச்சுடுவாங்க இல்லியா?

“ஒரே டைப் ஆப் கேம் இருந்தா அப்படிதான் ஆகும். நிறைய வித்தியாசமா விளையாண்டா அவங்களுக்கு ஒரு குட் பீல் வந்துடும்”

“ஒஹ் அப்போ கைவசம் நிறைய ஐடியா வச்சுருக்கீங்கன்னு சொல்லுங்க”

“அப்படிதான். சில சமயம் உங்க கிட்டேர்ந்து கூட ஐடியா எடுத்துக் கொள்வேன்”

“ஹ. அப்போ நான் என் மூளைய எச்சரிக்கை செய்யணுமே”

“எதுக்கு?

“ஆமா, அது பாட்டுக்கு ஓவர் டைம் வொர்க் பண்ணிட்டு, என்னோட ஐடியாஸ் எல்லாம் நீங்க சுட்டுட்டா , என் மூளை என்னைக் கேள்வி கேக்காது”

“மூளை என்ன கேக்கும்?”

“வொய் நோ டேகிங் பேட் & ரைட்? அப்படின்னு கேட்குமே?

“எல்லாம் சரிதான், அதுக்கு மூளைன்னு ஒன்னு இருக்கணுமே. அது உனக்கு எங்கே இருக்கு?

“உங்களுக்கு இருக்கிற அதே இடத்தில் தான் பாஸ்

“பார்த்தா அப்படித் தெரியலையே? அந்த இடம் காலியா இல்ல இருக்கு?

“மச். என்ன பாஸ் நீங்க? அது இப்போ தான் சன் கிட்டேர்ந்து எஸ்கேப் ஆகறதுக்காக மூன் வீட்டை நோக்கி போயிட்டு இருக்கு. அதான் உங்களுக்கு காலியா தெரிஞ்சு இருக்கும்.”

அவளின் பதிலில் சிரித்த ப்ரித்வி “நீ சொன்னா நம்பிக்கறேன்” என்றான்.

கிருத்திகாவும் அவனோடு சிரிப்பில் கலந்து கொள்ள, அவளின் சிரிப்பை ஆசையாகப் பார்த்தான் ப்ரித்வி.

கிருத்திகாவிற்கு இந்த நேரத்தில் கண் முன் ஒரு நிமிஷம் இளவரசி கிரன்தேவி இதே போல் வாய் விட்டு சிரிக்கும் காட்சி வந்து சென்றது. அவள் மட்டுமல்லாது இளவரசியோடு அமர்ந்து இருந்த அவளின் தோழிகளும் சிரித்துக் கொண்டு இருந்தனர்.

தொடரும்!

Episode # 13

Episode # 15

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.