(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 15 - தேவி

Kaanaai kanne

கிருத்திகா கண்ணுக்குள் மறைந்து சென்ற காட்சியில் ஒரு நொடி தடுமாறினாலும், தன்னைச் சுதாரித்துக் கொண்டாள். அந்த நேரம் ப்ரித்வியை யாரோ அழைத்து இருக்க அங்கே சென்று இருந்தான்.

சிறு ஓய்விற்குப் பிறகு மீண்டும் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். பகல் நேரப் பிரயாணம் என்பதால் வேடிக்கைப் பார்த்தபடியும் ஒருவருக்கொருவர் கேலி கிண்டல் செய்த படியும் பேருந்தில் அமர்ந்து இருந்தனர்.

அத்தனை பேரின் பேச்சும் முதல் நாள் பார்த்த எலிக் கோவிலைப் பற்றியே. கிருத்திகாவிற்கு அங்கு வேறு  விதமான அனுபவம் என்பதால் மற்றவர்களின் அனுபவங்களை கோவில் சென்ற அன்று அவள் கவனிக்கவில்லை.

கிருத்திகாவின் பிரெண்ட் ராகவி ,

“ஏய்.. கிருத்தி, நீ மட்டும் எப்படிடி அங்கே தினம் போவது போல் போன? .என்று கேட்டாள்.

“ஏன்..?

நேத்திக்கு நாங்க எல்லாம் சிவபெருமான் மாதிரி ஒத்தைக் காலைத் தூக்கி டான்ஸ் ஆடிட்டு நடந்து வந்தோம். லெப்ட் கால் கிட்டே வந்தா ரைட்லே பாலன்ஸ் செஞ்சு, ரைட்லே வந்தா லெப்ட்ன்னு எலிக்கு டேக்கா கொடுத்துட்டு வந்தா, உனக்கு மட்டும் ரெட் கார்பெட் போட்டா மாதிரி நேரா போற. அந்த எலிப் பிசாசுங்க என்னவோ பாஹுபலிலே படை அணிவகுப்பு நடத்தின மாதிரி ரெண்டு பக்கமும் ஒதுங்கி வழி விட்டு நிக்குதுங்க.

“அப்படியா?

“அப்போ நீ எந்த உலகத்திலே இருந்த?

“நான் துர்கா தேவி சிலைய மட்டும் பார்த்துக்கிட்டே போனேன்.

“ஓ.. அதுதான் எலிங்க உனக்கு அணிவகுப்பு நடத்தினதின் ரகசியமா.? இந்த விஷயம் உனக்கு ஏற்கனவே தெரியுமோ? இல்ல இங்கே அல்ரெடி வந்துருக்கியா?`

“எங்கப்பாவும் பெரியப்பாவும்  மிலிடரி ஆபீசர்ன்னு பேர். தமிழ்நாட்டு பார்டர் தாண்டிக் கூட்டிட்டுப் போனது கிடையாது.. கேட்டா அவங்களுக்கு கிடைக்கிற லீவ்லே சொந்த ஊர்க்கும், சொந்த பந்தங்கள விசாரிக்கவும் தான் நேரம் சரியா இருக்குமாம். போனாப் போகுதேன்னு கிளம்பற ரெண்டு நாள் முன்னாடி ஏதோ ஒரு ஹில் ஸ்டேஷன் பெரும்பாலும் அது கொடைக்கானலா தான் இருக்கும். கூட்டிட்டு போயிட்டு டூர் போன கணக்க அவங்க பட்ஜெட் லிஸ்ட்லே டிக் பண்ணிடுவாங்க. இதிலே நார்த் இந்தியா டூர் எங்க போக?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஏண்டி , இங்க வந்துருக்கியான்னு ஒரு கேள்வி தானே கேட்டேன். அதுக்குள்ளே உன்னோட இருபது வயசு வாழ்க்கை சரித்திரத்தையே ஒப்பிக்கறையே? உன்னை எல்லாம் ஏண்டி இன்னும் சுனாமி தூக்கலை?

“அந்த சுனாமிக்கு எனிமி இந்த கிருத்திகான்னு நினைச்சுருக்கும்”

“ஐயோ.. கடவுளே இந்தக் கொடுமையே கேக்க ஆளே இல்லியா? விஜய் தேவாரகொண்டா இன்கேம் இன்கேம் காவாலே பாடி, அது உனக்குப் பிடிச்சுப் போச்சுன்னு , மொத்த தெலுகு சினிமாவும் பார்த்து இப்படி பஞ்ச் டயலாக்கு பேசி என் காத பஞ்சர் பண்ணறியே .. இது எல்லாம் நல்லாவா இருக்கு?

அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து இருந்த திலிப்,

“தாய்க்குலங்களே.. உங்க மொக்கைய விட அந்த எலிக் கோவிலே தேவலை..” என்று கூற,

இப்போது இவர்கள் இருவரும் இணைந்து திலீப்பின் காதை பஞ்சர் ஆக்கினர்.

இதை எல்லாம் சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான் ப்ரித்வி.

இந்த அரட்டை அரங்கத்தினால் பிற்பாதி பயணம் களைப்பில்லாமல் கலகலவென்று இருந்தது

ஜெய்சல்மரில் இவர்கள் தங்கும் இடம் வந்ததும் எல்லோருக்கும் ரூம் அரேஞ் செய்து கொடுத்து விட்டு லஞ்ச்சிற்கு டைனிங் ஹால் வரச் சொன்னான் ப்ரித்வி. ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்த மாணவர்கள், டைனிங் ஹாலில் சவுத் இந்தியன் சாப்பாடு இருக்கவும், எல்லோரும் பாய்ந்து விட்டனர். சென்னையில் இருந்து கிளம்பிய இத்தனை நாட்களில் சாம்பார், ரசம் என்பதையே கண்ணில் காணாததால் அதைப் பார்த்ததும் அந்த சாம்பார் வாளியிலேயே குதித்து விடத் தயாராக இருந்தனர்.

லஞ்ச் முடித்ததும் எல்லோரும் படா பாக் (பெரிய தோட்டம்) என்ற இடத்திற்குச் சென்றனர். ஜெய்சல்மர் மெயின் சிட்டியில் இருந்து பதினைந்து நிமிட தொலைவுதான் என்பதால் அன்று மீதம் இருக்கும் நாளை அங்கு சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்து இருந்தான் ப்ரித்வி. இரவு சற்று நேரமானாலும் தங்கும் இடம் திரும்பவும் வசதி இருந்ததை உத்தேசித்தே இந்த ப்ரோக்ராம் கொடுக்கப் பட்டது.

சென்னை மெரீனாவில் உள்ள தலைவர்கள்  சிலைகள் போல் அங்கும் முதலில் வரிசையாக ஜெய்சல்மர் ஆண்ட ராஜபுதிரார்களின் கல்லறை

இருந்தது. மணல் கற்களால் அமைக்கப்பெற்ற இக்கல்லறைகளில் , மண்டபம் மட்டும் சலவைக் கற்களால் கட்டி இருந்தது. எந்த ராஜாவின்  சமாதியோ அவர் குதிரையில் அமர்ந்து இருப்பது போன்ற உருவப் படம் மாட்டி வைக்கப் பட்டு இருந்தது.

சிறு குன்றின் மேல் நீர்த் தேக்கத்திர்காக கட்டப் பட்ட இந்த தோட்டம், பின்னாளில் ராஜாக்களின் கல்லறைத் தோட்டமாக மாறி இருந்தது. சுதந்திர இந்தியாவிற்கு பிறகே அங்கே கல்லறைகள் கட்டப் படுவது நிறுத்தப் பட்டு இருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.