(Reading time: 10 - 20 minutes)

ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்த மாணவர்கள் ஆளுக்கு ஒரு கமெண்ட் கொடுத்துக் கொண்டு வந்தார்கள்.

நன்றாக சுற்றிப் பார்த்து விட்டு, இருட்டவும் எல்லோரும் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினர்.

அப்போது அங்கிருந்த டூரிஸ்ட் சிலரோடு செல்வமும், அவனின் சகாக்களும் கலந்து இருக்க, அதைக் கிருத்திகா கவனிக்கவில்லை.

பகலில் மட்டுமே டூரிஸ்ட்களுக்கு அனுமதி என்பதால், இரவு ஆரம்பமாகும் சமயம் என்றாலும், அங்கே அதிக விளக்குகள் இல்லை. இதை ஏற்கனவேத் தெரிந்து கொண்டிருந்த செல்வம் அங்கே வைத்து கிருத்திகாவைக் கடத்தத் திட்டமிட்டு இருந்தான்.

அவன் இப்போதும் லோக்கல் ரவுடிகள் சிலரை தன் கூட்டாளியாக வைத்துக் கொண்டு, கிருத்திகாவை நெருங்கினான்.

அப்போது எங்கிருந்தோ வந்த கல் ஒன்று செல்வத்தின் நண்பன் நெற்றியில் வீசப் பட்டு இருக்க, தன் கண்ட்ரோல் இழந்து,

“ஏய் .. பொம்பள  ரவுடி.. ஏண்டி என் மேல் கல் எறிஞ்ச?” என்று கிருத்திகாவைப் பார்த்துக் கத்தத் தொடங்கினான்.

ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிய கிருத்திகாவின் நண்பர்கள், ஒருவன் தமிழில் அதுவும் கிருத்திகாவைப் பார்த்துக் கத்தவும்,

“டேய், யாரடா நீ? எங்க பிரெண்ட் பார்த்துக் கத்திட்டு இருக்க? முதலில் உனக்கு முன்னாடி அவ போயிட்டு இருக்கா? எப்படி உன் மேல் கல் ஏறிய முடியும்? மண்டையில் மூளைன்னு ஏதாவது இருக்கா?” என்று பதிலுக்கு எகிறினார்கள்.

செல்வத்தின் நண்பன் தலையில் பட்டது கூழாங்கல்லை விட சற்றுப் பெரிய கல்லே. அதனால் அவனுக்கு வலி அதிகமாக இருக்கவும், தான் எதற்கு வந்தோம் என்பதை மறந்து,

“எல்லாம் இந்தப் பிசாசால தான். பொண்ணா அவ? சரியான ரவுடி. ஒரு வாட்டி அவ கையில் அடி வாங்கிப் பாருங்க அப்போப் புரியும்?” என்று கூறினான்.

“ஓஹோ.. அப்போ ஏற்கனவே அவகிட்டே அடி வாங்கியிருக்க அப்படிதானே.? அப்போ நீ எங்களை பாலோ பண்ணிட்டு வரியா? யாருடா நீ?” என்று நண்பர் கூட்டம் கேட்கவும், உஷாராவன், கூட்டத்தில் தன் நண்பனைத் தேடினான்.

அவன் வாய் கொடுத்துக் கூட்டம் சேரும்போதே செல்வம் எஸ்கேப் ஆகியிருந்ததால், தானே தான் சமாளித்தாக வேண்டும் என்று உணர்ந்தான். எனவே

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“யாரு பின்னாடி வரா? நீங்க தான் நாங்க போற இடத்துக்கு எல்லாம் வந்துட்டு இருக்கீங்க? “ என்று சமாளித்தவன்,

“சரி சரி.. போ.. இனிமேலாவது கல் எடுத்து விளையாடும் போது அக்கம் பக்கம் பார்த்து விளையாடு” என்று அவளை மன்னித்தவன் போல் பேசிவிட்டுத் தப்பிச் செல்லப் பார்த்தான்.

அவனை மற்றவர்கள் சுற்றி வளைக்க, கிருத்திகா அவனைப் போகச் சொன்னாள். மற்றவர்கள் முறைக்கவும், என்ன என்று கேட்டாள்.

“கிருத்தி.. ரோட்டில் போறவன் உன்னை இடிச்சாலே பத்து பக்க டயலாக்கும், ரெண்டு அடியும் அடிக்காம விட மாட்டியே. இன்னிக்குத் தேவை இல்லாம உன்னை பேசிட்டு இருக்கான். அவனுக்குப் பொது மன்னிப்புக் கொடுத்துட்டு இருக்க? என்ன ஆச்சு?” என்று பிரெண்ட்ஸ் கேட்கவும்,

“பிரெண்ட்ஸ்.. அவனே ஒரு பயந்தாங்கொள்ளி. அவன் கிட்டே நம்ம வீரத்தக் காமிக்கணுமா? என்று கேட்டாள்.

“ஏன்.. நீங்க அடிக்கிற ஆளுங்க எல்லாம் கராத்தே, குங்க்பு சர்டிபிகேட் உங்ககிட்டே கொடுத்தப் பிறகு தான் அடிச்சீங்களோ?” என்று பதிலுக்குக் கேட்டாள் ராகவி.

அதற்குள் செல்வத்தின் நண்பன்,

“ஐயோ.. இந்தப் பிசாசுக்கு அது எல்லாம் வேறே தெரியுமா?” என்று கேட்டான்.

“டேய்.. ஓடிப் போயிரு.. இல்லை அந்தக் கல்லாலே உன்னை அடிச்சு சாவடிச்சுடுவேன்” என்று அவனை விரட்டினாள்.

அவன் பேச்சில் சிரித்த மற்றவர்கள்,

“பார்த்தால் பயில்வான் மாதிரி இருக்கான். சரியான லூசு போலே நடந்துக்கறான்” என்றனர்.

“எனக்கும் அப்படித்தான் தோனுச்சு. அதான் விரட்டி விட்டுட்டேன் “ என்றாள் கிருத்திகா.

இங்கே இவர்கள் கும்பலாக நிற்பதைப் பார்த்த ப்ரித்வி என்ன என்றுக் கேட்க, மற்றவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டவன், அனைவரையும் ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தினான்.

எல்லோரும் முன்னே செல்லவும், சற்றுப் பின் தங்கிய ப்ரித்வி, கிருத்தி அருகில் வரவும், அவளோடு நடந்தபடி,

“என்ன அச்சு கிருத்தி? அவன் யாருன்னு தெரிஞ்சதா?” என்றுக் கேட்டான்.

“இல்லை பாஸ். ஆனால் ஏற்கனவே எங்கிட்ட அடி வாங்கின மாதிரி பேசினான்.”

“அப்போ ட்ரெயினில் ஒருத்தன் கையை மடக்கினியே.. அவனா?”

அவன் கேட்கவும், சற்று யோசித்த கிருத்திகா,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.