(Reading time: 10 - 20 minutes)

“அவனாகவும் இருக்கலாம்னு தோணுது. ஆனால் அவன் ஏன் இங்கே வரை வரப்போறான்னு தெரியலையே. அதோட எங்கிட்ட வாங்கின அறைக்கு பயம்தானே இருக்கும்.” என்றாள்.

“ஹ்ம்ம். அப்படிச் சொல்ல முடியாது. அதுக்காக உன்னைப் பழி வாங்கக் கூட முயற்சிக்கலாம் இல்லையா?

“போங்க பாஸ். காமெடி பண்ணிட்டு இருக்கீங்க. அன்னைக்கு இருட்டில் பார்த்தது தெரியலை. ஆனால் இப்போ பார்த்தால் அவன் சரியான புள்ளைப் பூச்சி மாதிரி தான் தெரியறான்”

“கேர்புல்லா இரு கிருத்திகா. புள்ளைப் பூச்சியா இருந்தாலும் கடிச்சா கொஞ்சம் வேதனை இருக்கத்தான் செய்யும். சோ ட்ரை டு அவாய்ட் திஸ் டைப் ஆப் சிடுயேஷன்”

“ஹ்ம்ம் ஓகே பாஸ்” என்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "காயத்ரி மந்திரத்தை" - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவர்கள் தங்கும் இடம் வந்து இருக்கவே, தங்கள் அறைக்குப் பிரிந்து சென்றார்கள்.

இந்த இரு நாட்களாக வராத கனவு கிருத்திகாவிற்கு இன்றைக்கு மீண்டும் வந்தது.

பிகானர் பகுதியின் தலைவரோடு நடந்த சந்திப்பு ரானா பிரதாப்பிற்கு மிகுந்த சந்தோஷம் அளித்தது. பிகானர் பகுதியில் ரானா திரட்டும் படைகளுக்குப் பயிற்சி அளிக்கவும், போர் என்று தீர்மானம் ஏற்பட்டால், இவர்களை தன்னுடன் அழைத்துக் கொள்ள வசதியும் இருப்பதால் ரானாவிற்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது.

அதிலும் பிகானர் இளவரசன் ப்ரித்வியின் அந்த வாள் பயிற்சி அவருக்குப் புதுமையாக இருக்கவே, அதைப் பயிற்சி செய்ய விரும்பினார்.

அவரின் உத்தரவுப்படி பிரிதிவிராஜ் அவரோடு பயறிசி செய்ய மேலும் இரு நாட்கள் பிகானரில் தங்கினார் ரானா.

ராணாவின் ராணிகள், மற்ற ராஜபுத்ரப் பெண்கள் அனைவரும் பெண்கள் இடத்தில் இருக்க, அவர்களுக்கு இளவரசி கிரண் தேவி தற்காப்புப் பயிற்சி அளித்துக் கொண்டு இருந்தாள்.

அதைச் சற்று சலிப்போடு அந்தப் பெண்கள் கற்றுக் கொள்வதைப் பார்த்து வருத்தப்பட்டாள் இளவரசி.

ராணாவின் இந்த பயணம் எதிர்பார்த்ததை விட திருப்தியாக இருக்கவே, பிகானர் தலைவருக்கு நன்றிக் கூறி கிளம்பினார்.

கிளம்பும் போது ப்ரித்விராஜ் ரானாவிடம் வந்து

“மகாராஜ்.. தங்களிடம் ஒரு விண்ணப்பம் செய்ய வேண்டும்” என்றான்.

“சொல் மகனே..” என்றார் ரானா.

“தாங்கள் நடத்தும் போர்களில் என்னையும் ஒரு வீரனாக சேர்த்துக் கொள்ள வேண்டும். என் வீரத்தை நம் சொந்த மண்ணைக் காக்கும் போரில் வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும்.” என்று கூற,

“வெறும் வீரனாக அல்ல மகனே. என் தளபதிகளுள் ஒருவராகவே உன்னை நியமிக்கிறேன். “ என்று கூறி ப்ரித்வியை அவர்கள் அரண்மனையில் இருந்த காளி சிலை முன் நிறுத்தினார்.

காளியின் அடியில் இருந்த குங்குமத்தை எடுத்து ப்ரித்வியின் நெற்றியிலும், அவன் வாளின் முனையிலும் தீட்டினார். பின்

“பிகானர் அரசே.. தங்களுக்கு இதில் ஆட்சேபனை இல்லையே?” என்று ரானா கேட்க,

“இல்லை மகாராஜ். தங்களுக்கு விருப்பம் இருந்தால் அவன் தங்களோடு பணி புரிவது எனக்கு மகிழ்ச்சியே.. “ என்று கூறினார்.

அதற்குப் பின் பிகானரில் இருந்து ரானா கிளம்ப, அவரோடு வந்த பரிவாரங்களும் புறப்பட்டனர். அவர்களோடு தற்போது ப்ரித்விராஜ் இனைந்து கொண்டான். 

தொடரும்!

Episode # 14

Episode # 16

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.