(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 26 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

னக்கும் சூர்யாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சா? எப்போ? எப்படி?” என வியந்தபடி  பல கேள்விகளை அடுக்கினாள் சாரு. கோபமும் ஏமாற்றமும் ஒரு பக்கம் இருந்தாலும் சந்தோஷமாகவும் இருந்தது.

சிரித்தபடி சுவாதி மீண்டும் அழுத்தம்திருத்தமாக “எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சி . . . சூர்யாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி . . ” என நிறுத்தினாள்.

ஆகாஷ் இதில் ஏதோ டிவிஸ்ட் உள்ளது என புரிந்துக் கொண்டான். ராமமூர்த்தி எல்லாம் அறிந்தவர் ஆதலால் எந்த ரியாக்ஷனும் அவரிடம் இல்லை. பத்ரிநாத்திற்கு இந்த விஷயத்தில் அவ்வளவாக ஈடுபாடில்லை.

சாரு மட்டுமே தன் கண்களை உருட்டி சொல்லு என மிரட்டினாள்.

அது எனக்கு இங்க கல்யாணம் ஆச்சு . . சூர்யாக்கு அங்க கல்யாணம் நடந்திச்சி  . .. இதைதான் சொல்ல வந்தேன் கொஞ்சம் டங் சிலிப் ஆயிடுச்சிகேலியாக சுவாதி கூற

ஆகாஷ் புரிந்தவனாய் “கங்கிராட்ஸ்என்ற ஒற்றை வார்தையில் கைக்குலுக்கி முடித்துக் கொண்டான்.

சாரு விடாப்பிடியாக “அக்கா விளக்கமா சொல்லுஎள நச்சரித்தாள்

என் ஹஸ்பெண்ட் பேரு ரவி. காதலிச்சோம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ஆசிரமத்துலதான் இருக்காரு . . நாங்க எல்லாரும் ராமமூர்த்தி சார் குரூப்ல இருக்கோம்.” என பொங்கி வந்த நாணத்தை மட்டுப்படுத்தி தன் காதல் காவியத்தை திருக்குறளைப் போல இரண்டே வரிகளில் முடித்துவிட்டாள்.

ஆனா இப்ப நீ உங்கம்மா வீட்டுக்கு போயே ஆகணும் சுவாதி. அது தான் உனக்கு நல்லது. இந்த நிலைமையில மலை ஏறக் கூடாது. உடம்ப கவனமா பாத்துக்கணும்என ராமமூர்த்தி சொன்னதும்

சாரு முகம் மலர அக்காவை ஏதோ புரிந்தவளாய் பார்த்து “அக்கா . .”  எனக் இருக்கமாக கட்டிப் பிடித்தாள்.

ஹே சாரு . . தள்ளு குட்டி சுவாதிக்கு இல்ல ரவிக்கு வலிக்கும்பாஎன ஆகாஷ் அவளை சற்றே தள்ளி வைத்தான்.

சாரு உடனே சுவாதியின் வயிற்றளவு குனிந்து “ஸாரி பாப்பா . . வலிக்குதா . . இனிமே சித்தி உன்ன பத்திரமா பாத்துக்குவேணாம்என  தன் அக்காவின் வயிற்றுக்குள் இருக்கும் குட்டி தேவதையுடன் உரையாடியவளுக்கு தனக்கு கிடைத்த பதவி உயர்வை நினைத்து மகிழ்ந்துப் போனாள்.

சுவாதியின் முகத்திலும் தாய்மைக்கே உரிய பூரிப்பு காணப்பட்டது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சாரு உடனே தன் பெற்றோருக்கு போன் மூலம் விஷயத்தை கூறினாள். சுவாதியை அவர்களோடு பேச வைத்தாள். தானே சுவாதியை அழைத்து வருவதாகவும் கூறினாள்.

சூர்யாக்கு எப்ப கல்யாணம் ஆச்சு? யாரோட?” என ஆகாஷ் சுவாதியிடம் கேட்க . . அவளோ ராமமூர்த்தியை பார்த்தாள்.

சூர்யா மேல என்ன அக்கறை?” என்பதைப் போல சாரு ஆகாஷை நோக்க . . அவனோ அப்பாடா தொலைஞ்சான் என்பதாய் முகத்தில் திருப்தி.

நீங்க ரெண்டு பேரும் யு.எஸ்.ல இருந்து கிளம்பி சென்னை வந்த்துல. . சூர்யா ரொம்ப கோபத்துல இருந்தான். நான் அங்கயிருந்து இங்க கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு நாள் என்னை வந்து மீட் பண்ணினான்.” என்றார் ராமமூர்த்தி

உங்களையா எதுக்கு டேட்?” ஆகாஷ் துணுக்குற்றான்

நான் சாருவ லவ் பண்றேன் . . அவளும் என்னை லவ் பண்றா . . ஆனா உங்க பையன்தான் நடுல வந்து குழப்பிட்டான்னு நிறைய சொன்னான்.”

அடுத்து என்ன சொல்ல போகிறார் என்பதைக் கேட்க சாரு ஆகாஷ் இருவரும் ஆவலாய் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் சூர்யா தன்னோடு பேசியதை  கூற தொடங்கினார்.

அத்தன ஈசியா என்னால சாருவ மறக்க முடியாது . . சின்ன வயசுல இருந்து நான் சாருவ லவ் பண்றேன்அவ வீட்ட விட எங்க வீட்லதான் அதிகமா இருந்திருக்கா. அவ பேரண்ட்ஸ் வொர்க் முடிஞ்சி வீட்டுக்கு வர லேட் ஆகிடும். எங்க வீட்லதான் சாப்பாடு தூக்கமெலாம் தெரியுமா?” இது சூர்யா

உனக்கு எப்படி சுவாதியோட லவ்வை ஏத்துக்க முடியலையோ . . அதே மாதிரிதான் சாருக்கு உன்னையும் உன் காதலையும் ஏத்துக்க முடியலராமமுர்த்தி அட்வைஸ் செய்ய

இல்ல அங்கிள் எல்லா நல்லாதான் போச்சு . . சுவாதியோட பிரச்சனைனால குழப்பதல இருந்தா சாருவ நான்தான் காஞ்சனா மேடம்கிட்ட அறிமுகம் செஞ்சேன். இன்னிக்கு அவ யு.எஸ்.ல பரதம் ஆடுறது என்னால. அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனை சோர்வு எல்லா சமையத்துலயும்  நான்தான் பக்கபலமா இருந்தேன். ஆனா ஒரு நிமிஷத்துல என்னை தூக்கி போட்டுடா

சூர்யா சாரு உன்ன சகோதரனா பாத்திருக்கா . . நீ தவற புரிஞ்சிகிட்டராமமூர்த்தி ஆறுதலாக கூற

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.