Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 16 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - கலாபக் காதலா - 16 - சசிரேகா

kalaba Kathala

தேவியின் காலேஜ் கார் பார்க்கிங் ஏரியாவில்

”அண்ணா” என தேவி கத்திய கத்திலில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டிருந்த முராரியும் ராதாவும் அதிர்ந்து விலகி நின்றார்கள். அங்கு கோபமாக தேவி நிற்பதைக் கண்டு ராதா பயந்தே போனாள். அவள் வேகமாக தேவியிடம் வந்து நின்றுவிட முராரி அமைதியாக தன் தங்கையிடம் வந்து பேசினான்

”அது வந்து தேவி நான் ராதாவை” என அவன் இழுத்து இழுத்து பேச அவளோ அண்ணன் என்றும் பாராமல் அவனது தோளில் முதுகில் என நான்கைந்து அடிகள் மொத்து மொத்தென்று சாத்திவிட்டு கை வலிக்க மூச்சு வாங்க முராரியை பார்த்து

”நீயெல்லாம் ஒரு அண்ணனா சே” என திட்ட அவனோ அனைத்து அடிகளையும் வாங்கி தெம்பாக நின்றான். தேவியின் கோபத்தைக் கண்டு மெல்ல அவளிடம் பேசினான்

”தேவி நீ நினைக்கற மாதிரியில்லை” என அவன் சொல்லி முடிக்கும் முன்பே

”என்னத்த நான் நினைச்சேன் சொல்லுண்ணா, இப்ப நீ பண்ணது பெரிய தப்பான காரியம் அது உனக்கு புரியுதா இல்லையா”

“தேவி நான் சொல்றதை முதல்ல கேளு நான் ராதாவை காதலிக்கிறேன்”

”இதைச் சொல்ல உனக்கு வெட்கமாயில்லை” என அவள் கத்த அவனோ புரியாமல் குழம்பிய முகத்துடன்

”என்னாச்சி தேவி” என கேட்க

”அவள் என் பிரெண்ட், நீதான் எப்பவும் சொல்வியே என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் உனக்கு தங்கச்சிங்கன்னு அப்புறம் இவளை மட்டும் லவ் பண்றேன்னு சொல்றியே இது நல்லாயில்லை”

”ஒத்துக்கறேன் உன் பிரெண்ட்ஸ்ங்க எல்லாரையும் நான் என் தங்கச்சியா பார்த்தேன் ஆனா, ராதாவை அப்படி பார்க்கலை”

“ஏன்”

”இல்லை நான் அவளை அப்படி பார்க்கலை ஆனா, நான் தப்பான பார்வையும் பார்க்கலையே, அவளை நான் காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்”

“போதும் நிறுத்துண்ணா ராதா இங்க வந்து எத்தனை நாளாச்சி, அதுக்குள்ள எப்படி காதல் வரும், அன்னிக்கு என்னடான்னா அவள்ட்ட நட்பு வேணும்னு கேட்ட, அவள் முடியாதுன்னு சொன்னா இப்ப காதலிக்கிறேங்கற அவள் வாழ்க்கையோட நீ விளையாடாதண்ணா” என கத்த அவனோ

”பொறுமையா பேசு தேவி, நான் சொல்றது உண்மை கொஞ்ச நாள்தான் அவளோட பழகினேன், அதுவே காதல்ல முடிஞ்சிடுச்சி”

“என்னால இதை நம்ப முடியலைண்ணா நீ ராதாவை லவ் பண்றியா, எதைப் பார்த்து லவ் பண்ண அவள் அழகா இருக்கா, அமைதியா இருக்கா, பாட்டு பாடறா இதை வைச்சித்தானே”

“எனக்கு அவளை முதல்ல இருந்து பிடிக்கும், அதுக்கப்புறம்தான் நான் அவளை நேர்லயே பார்த்தேன்”

“எப்ப இருந்து”

“அதான் அவளோட பாட்டை நீ எல்லாருக்கும் ஃபோன் மூலமா கேட்க வைச்சியே அன்னியில இருந்து”

”சரி பாட்டு நல்லாயிருந்தா நீ அவளை லவ் பண்ணனுமா, என் காலேஜ்ல எத்தனை பொண்ணுங்க பாட்டு பாடுவாங்க அவங்க பாடின பாட்டு கூட நான் ரிக்கார்டு பண்ணிக் கொண்டு வந்து உனக்கு போட்டுக் காட்டினேன், நீயும் இந்தத் தங்கச்சி நல்லா பாடியிருக்கான்னு சொல்லிட்டுப் போயிட்ட அவங்க மேல உனக்கு காதல் வரலை இவள் மேல மட்டும் வந்துடுச்சா” என கேட்க அவனோ பொறுக்க முடியாமல்

”ஏன் இப்படி பேசற தேவி உனக்கு என்னதான் பிரச்சனை, ஏன் நான் யாரையும் காதலிக்க கூடாதா”

“கூடாது”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“தேவி நீயா இப்படி பேசறது”

“ஆமாம் நீங்க கிளம்புங்க, நான் ராதாவை கூட்டிட்டு வந்துடறேன்” என சொல்லி ராதாவின் கையை பிடிக்க அவனோ சற்று கலவரத்துடன்

”இரு இரு இப்பதான் அவள் கொஞ்சம் இறங்கி வந்திருக்கா, நீ எதையாவது பேசி அவள் மனசை மாத்திடாத”

“போதும் அவள் நிலைமையே உனக்குப் புரியலை, நீ நினைச்சா வந்துடனும், நீ சொன்னா காதலிக்கனும், எல்லாமே உன் விருப்பம்தானா”

“அவளும் என்னை காதலிக்கறா அதான் உண்மை வேணா கேட்டுப்பாரு” என சொல்ல

”என் ப்ரெண்ட் பத்தி எனக்கு நல்லாவே தெரியும், உன் கூட நட்பாகவே அவள் விரும்பலை, இதுல அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் பேசி வைச்சிட்டாங்க, அவளோட அப்பா வாக்கும் கொடுத்துட்டாரு அவர் வாக்கை மீற மாட்டாருன்னு இவளும் என்கிட்ட சொல்லியிருக்கா, இதுக்கு நடுவுல எல்லா உண்மையும் தெரிஞ்சி நீ அவள்ட்ட பழகியிருக்க அதுவே முதல்ல தப்பு, இதுல அவள் காதலிக்கறதா வேற சொல்ற, அது பெரிய பொய், இதுல நான்  உன்பேச்சைக் கேட்டு என் ப்ரெண்ட் மேல சந்தேகப்படனுமா முடியாது, நான் அவள்ட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டேன்” என சொல்ல தலையில் கையை வைத்தான் முராரி

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 16 - சசிரேகாvijayalakshmi 2019-04-30 09:13
good one sasi nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 16 - சசிரேகாராணி 2019-04-26 16:33
விறுவிறுப்பாக கதை நகர்கிறது அருமை
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 16 - சசிரேகாShanthi S 2019-04-26 01:09
thangai ananoda loveku test vaikum concept 👌

intha epi base aga cachu partha Radha and Murari testla passagurathu slighta difficult polaruku :-)

Radha travel seiya porana epadi manage seiranganu parpom.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 16 - சசிரேகாmadhumathi9 2019-04-25 19:48
:clap: (y) fantastic epi.ethirpaaraatha thiruppngal! :dance: hey marubadiyum radhaa thirunelveli varuvathu miguntha magizhchi :clap: :clap: devi seivatathu sari endru thaan ninaikkiren. :thnkx: 4 this epi. :GL: sasi.
Adutha epiyai padikka miga aavalaaga kaathu kondu irukkirom. :thnkx: :thnkx: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 16 - சசிரேகாmadhumathi9 2019-04-25 18:42
wow 17 pages. :dance: happy happy. :thnkx: :thnkx: now i'm going to read.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top