Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 08 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 08 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

முதனுக்குக் காதல் கதைகளை வாசிப்பதில் நாட்டம் இருந்ததில்லை. ஏனோ இந்தக் கதையை வாசிக்க ஆரம்பித்து அதில் மூழ்கியும் விட்டான்.

வெள்ளைத்தாமரை இதழ்-7 இதோ ஒரு காதல் கதை பகுதி-7

கார்த்திக்கின் கவிதை எப்படி என்னோட கால்குலேட்டர்ல வந்தது? கோபமாக ரம்யா கேட்க

ரம்யா கொஞ்சம் கிளாஸ் விட்டு வெளிய வா! நாம பேசலாம் என்றாள் கண்மணி.

ரொம்ப சாரி ரம்யா. உன்கிட்ட கேட்காமல் நான் தான் உன்னோட கால்குலேட்டர கீதாவோடதுன்னு நினைச்சு டெஸ்க் மேல இருந்துச்சு. அப்படியே எடுத்து அவன் கிட்ட குடுத்தேன்

நீ தெரியாமல் கொடுத்தது பரவாயில்ல. ஆனால் அந்த பேப்பர்?

சரி அந்த பேப்பரைப் பத்தி நானே கார்த்திக் கிட்ட கேட்டு உன்கிட்ட சொல்றேன் ஏன் அது அங்கே வந்ததுன்னு? போதுமா ?

நீயே கேளு!கேட்டுட்டு நீயே வச்சுக்கோ இந்த பேப்பரை! ஆனால் என்னோட கேல்ஸில இது மாதிரியெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லு !

சரி சொல்றேன்!

கண்மணி நானும் உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயத்தைக் கேட்கணும் கேட்கணும்ன்னு தோணும். இப்போ உன்கிட்ட கேட்கலாமா.?

என்ன ரம்யா?

நீயும் கார்த்திக்கும் லவ் பண்றீங்கன்னு மற்ற பொண்ணுங்க பேசிக்கிறாங்களே..உண்மையா?

ஆமா ரம்யா! ஸ்கூல் படிக்கும் போது  இருந்தே லவ் பண்றோம்.! அமைதியான முகத்துடன்.

ரம்யாவின் முகம் மாறியது. எனக்கு படிக்கிறத விட்டுட்டு லவ் பண்ற பொண்ணுங்களை புடிக்காது.இனிமே இப்படிலாம் என்னை வச்சு விளையாடாதீங்ககோபமாக சொல்லிவிட்டு ரம்யா வகுப்பறையில் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்தாள்.

கண்மணி வருத்தத்தோடு நின்று கொண்டிருக்க, அங்கே கார்த்திக் வந்தான்.

என்ன கண்மணி என்னாச்சு? கோபமா போறா உங்க தோழி!

கார்த்திக்! எல்லாம் உன்னால தான்!  நீ எனக்கு எழுதி வச்ச கவிதையை அவளுக்கு எழுதினதா நினைச்சு கோபமாகி..ஹ்ம்ம்..

ஹலோ மேடம், என்ன கவிதை? என்ன நான் எழுதி வச்சேன்?என்ன சொல்ற நீ?

நீயே படிச்சி பாரு! அந்த பேப்பரை அவனிடம் நீட்டினாள்.

அந்த வரிகளை வாசித்தவுடன் சிரித்து விட்டான் அவன்

என்ன சிரிப்பு- இது கண்மணி.

ஒன்னும் இல்லை

இந்த எழுத்து தான் என்னோடது! கவிதை வரியெல்லாம் நண்பன் திறமை!

தினேஷ் தான் ஏதோ புலம்பிட்டு இருந்தான்! அதை நான் அப்படியே எழுதிட்டு இருந்தேன்.. பேப்பர் உள்ள வச்சதும் அவனே தான். அன்னிக்கு உன்கிட்ட நான் கேல்ஸிய வாங்கிட்டு போனது அவன் கேட்டு தான். அது கீதா கேல்ஸி இல்லைன்னும், ரம்யா கேல்ஸின்னும் அந்த கேடிக்குத் தெரிஞ்சது அவ பக்கத்துலேயே நாள் பூராவும் உக்கார்ந்துட்டு இருக்கிற உனக்குத் தெரியல! வாட் எ பிட்டி! என்றான் சிரிப்புடன்.

உன் கிண்டல் போதும் கார்த்திக்!

நீயும் நானும் லவ் பண்றத கேட்டே அவ என்னைத் திட்டிட்டுப் போறா. அவன் அவகிட்ட அடி தான் வாங்கப் போறான். பார்த்து நடந்துக்க சொல்லு.

சரி பார்க்கலாம்..! என்று கார்த்திக் செல்லவும், கண்மணி உள்ளே வந்து ரம்யாவின் அருகே அமர்ந்தாள்.

ரம்யா கெமிஸ்ட்ரி அசைன்மென்ட் எழுதறதுக்கு லைப்ரரி போகணும்னு சொன்னியே.போகலாமா?

கண்மணி எனக்கு லேப்ல கொஞ்சம் வேலை இருக்கு. நீ போ.!”

சரி நான் வெயிட் பண்றேன். !”

பரவாயில்ல கண்மணி! உன்னை உங்க கார்த்திக் தேடப் போறாங்க? நீ கிளம்பு!

சரி ரம்யா உனக்கு என் கூட வர இஷ்டம் இல்லேன்னா நான் தனியாவே போறேன்

கண்மணி போனதும், தான் அவகிட்ட ஏன் இவ்வளவு கோபமா நடந்துகிட்டோம்னு ரம்யா யோசித்துக் கொண்டு இருந்தாள். ரம்யாவின் உள்மனது உறுத்தியது. அவள் பண்ணா தப்பு. நீ பண்ணா சரியா? அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்றதுக்கு முன்னாடி நாம சரியா இருக்கோமான்னு பாரு. ஏதேதோ எண்ணங்கள் அலைபாய ரம்யாவுக்கு தன் ஆருயிர் பள்ளித் தோழி சத்யாவைப் பார்த்தால் மனதுக்கு நன்றாயிருக்கும் எனத் தோன்றியது. கல்லூரி முடிந்ததும் அம்மாவிடம் சொல்லிவிட்டு சத்யாவின் வீட்டுக்குப் போகணும் தனக்குள் எண்ணிக்கொண்டே புத்தகங்களைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

மூன்று நண்பர்களும் மரத்தடி பெஞ்சில் உக்கார்ந்து கொண்டு போகிற பெண்களை சைட் அடித்து கொண்டிருந்தனர்.

கெமிஸ்ட்ரி சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. அவர் தலை தெரிந்தவுடன் மூவரும் எழுந்து நடக்க தொடங்கினர்.

இந்த பொறுக்கிப் பசங்க என்னிக்காவது கெமிஸ்ட்ரி சார் கிட்ட நல்லா மாட்டி, அந்த சிமெண்ட் பெஞ்ச் மேலேயே எல்லாரும் பார்க்கிற மாதிரி நாள் பூரா நிக்கணும்" என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே, செல்கையில் பின்னாடி இருந்து ராபின், "ரம்யா கொஞ்சம் நில்லு!

நாளைக்கு மத்தியானம் உன்கிட்ட நான் தனியாப் பேசணும், நீ என்னோட கிளாஸ்ரூம் வந்திரு!”

என்ன பேசணும்?

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 08 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-05-05 14:15
:Q: murupadiyumphone call varumo? Ramya enna seiya pogiraal endru paarppom.nice epi. :clap: (y) :thnkx: & :GL: waiting to read more.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 08 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-05-06 19:06
Thank you madumathi :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 08 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharvJo 2019-05-05 12:18
:D doubt ketkura munji katunga Pa 😜 very funny guys...very realistic and summa dhool funkalakuringa ma'am 👏 👏👏 👏👍 andru iravu Ramya Vera ethavdhu plan panurangalo :Q: pavam kanmani :sad: waiting to see what happens next. Amudhan will not leave the scene without reading the complete novel :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 08 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-05-06 19:05
Thank you very much AdharvJo for the constant encouragement and motivation :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top